அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, அபாண்டமான பழிகளை சிலர் வெளியிட்டு வருகின்ற போதிலும் பெரும்பான்மையான மக்கள் உண்மை நிலைமையை அறிவார்கள் என தெரிவித்துள்ளார்.
மக்கள் நாற்பது ஆண்டுகளாக தம்மை அறிந்து வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்மை ஒர் சர்வாதிகாரி என வெளிப்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சுதந்திரம் கிடையாது என சிலர் குற்றம் சுமத்துவதாகவும், செய்தித் தாள்கள் மற்றும் இணைய தளங்களை பார்த்தால் நாட்டில் எவ்வாறான ஊடக சுதந்திரம் காணப்படுகின்றது என்பதனை விளங்கிக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டத்தை வழங்க வேண்டாம் என சில தரப்பினர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கு அவர்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவுமு; அவர் குறிப்பிட்டுள்ளார்.