இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டும் என்பதையே மேற்குலக நாடுகள் விரும்பி நிற்பதாக ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். அரசாங்கங்களினால் தமது சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க முடியாத நிலையில், அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு என்ற அடிப்படையில் அமெரிக்கா உலக நாடுகளில் தலையீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே இலங்கையிலும் ஆட்சி மாற்றம் தேவை என சில மேற்குலக நாடுக்ள விரும்பி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருவதாகவும் தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார். மேற்படி காரணங்களைக் குறிப்பிட்டு லிபியா, ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில், இவ்வாறு மேற்குலக நாடுகள் தலையீடு செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
-அமரிக்கா போன்ற நாடுகளின் தலையீட்டுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் ராஜபக்ச பாசிசம் கூட மேற்கு நாடுகளால் தான் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன என்பதை தமரா வசதியாக மறைத்துவிடுகிறார்.
மார்ச் 8
மகளிர் தின வாழ்த்துகள்
பறந்து கொண்டிருந்தது…
குறுந்தகவல்
மின்னஞ்சல்
அலைபேசி அழைப்பு என
காதலிகளுக்கும்
மனைவிகளுக்கும்
தோழிகளுக்கும்
அபூர்வமாய் சில அம்மாக்களுக்கும்.
அவளுக்கும் அன்று ஒரு குறுந்தகவல்
வங்கி கடன் குறைந்த வட்டியில் என்று ….
அவளுக்கு மின்னஞ்சல் முகவரி கிடையாது …..
அவளுக்கும் அன்று ஒரு அலைபேசி அழைப்பு
” எத்தன மணிக்கு வர்ற ? ” என்று
எம் சகோதரிகளான அனைத்து திரு நங்கைகளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள் ……
பதவி பறிபோய் விடுமோ என்ற பயம்தான் .வேறென்ன.