இலங்கையில் அடுத்த தேர்தல்

2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஏனைய மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் மாதமளவில் தேர்தலை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல், வடமேல், தென், மத்திய. ஊவா ஆகிய மாகாணங்களுக்கான தேர்தலே அடுத்து நடத்தப்படவுள்ளது. எனினும் அடுத்த தேர்தல் எந்தச் சந்தர்ப்பத்தில் நடத்தப்படும் என கூறமுடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதனால் பிரதேச அமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினனரை ஜனாதிபதி கேட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர்களை நேற்று (செப்15) சந்தித்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அடுத்த வரவுசெலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி சமர்பிக்கப்படவுள்ளது எனவும் நிதியமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.