“இலங்கையின் எதிர்காலம்” என்ற தலைப்பிலான அரசியல் கலந்துரையாடல் 07 நவம்பர் 2010 ஞாயிறு அன்று பாரீசில் நடைபெற்றது. சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் சமகால அரசியல் குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை தொடர்பான சர்வதேச மற்றும் இந்திய நிலைப்பாடுகள் , தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் இன்றைய போக்கு ,நாடுகடந்த தமிழ் ஈழ அரசு, புலம்பெயர் தமிழர்களின் அரசியல் ,இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் இன்றைய நிலை, புலி ஆதரவு-புலி எதிர்ப்பு, இலங்கை அரச ஆதரவு போக்கு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துக்களும் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. இலங்கையிலிரந்து வருகை தந்திருந்த புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் உரை சிறப்பானதாகவும் இன்றைய அரசியல் காலகட்ட நிகழ்வில் ஒரு முக்கிய அம்சமாகவும் அமையப்பெற்றிருந்தது. இக் கலந்துரையாடலை தோழர் இசிதோர் பெர்னான்டோ தலைமை ஏற்று நெறிப்படுத்தினார். பிரான்சில் வாழும் பல்வேறு அரசியல் செயல்பாட்டாளர்களும், சமூக அக்கறையாளர்களும் நீண்ட கால இடைவெளிக்குப் பின் ஒன்றாகக் கூடி ஆரோக்கியமான அரசியல் விமர்சன உரையாடலை நிகழ்த்தியமை வரவேற்கக் கூடியதாக அமைந்திருந்தது. இக் கலந்துரையாடலின் எடுக்கப்ட்ட புகைப்படங்கள் சில …
இந்த கலந்துரையாடல் ஆரோக்கியமான மாற்றத்துக்கான அறைகூவலாக இருக்கட்டும்
என்ன சொல்லப் பட்டது என்று தொகுத்துத் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.