இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இறுதி நேரத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மீளவும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாகவும் செனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.
புதன்கிழமை மாலை இலங்கை பெண் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக் கூடாது என பிரி;த்தானிய மேன்முறையீட்டு நீதவான் ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.