இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியத் தொழிற்கட்சியின் இறுதி நாள் மாநாட்டில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
3 லட்சம் மக்கள் மிகப் பயங்கரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாநாட்டில் உரையாற்றிய பாராளமன்ற உறுப்பினர் சியொபெய்ன் மக்னோ
இலங்கையின் மனித உரிமை மீறல்களை அங்கு எடுத்துக் காட்டி இலங்கையுடன் வர்த்தகம் செய்யும் Marks & Spencer, Next போன்ற நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது அல்லது இலங்கைக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்லும் போது ஒவ்வொருவரும் கொடுக்கும் பணம் மூன்று இலட்சம் மக்களை அடைத்து வைத்திருக்கும் அரசுக்கு செல்லத்தான் வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியதுடன் இது குறித்து சிந்தியுங்கள் எனக் கூறியுள்ளார்.