மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாண சபைக்கு 102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2,378 பேர் போட்டியிடுகின்றனர். 38 லட்சத்து 20 ஆயிரத்து 214 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
4 மணிக்கு நிறுத்தப்படும் தேர்தல் வாக்கெடுப்பில், கொழும்பில் 33 சதவீத வாக்குகளும் ,களுத்துறையில் 42 சதவீத வாக்குகளும் ,கம்பஹாவில் 37 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளும் படித்த மத்தியதர வர்க்கத்தையே அதிகமான வாக்காளர்காளாக கொண்டுள்ளது.
மிகக் குறைவான மக்களே தேர்தலில் பங்குகொண்டமையானது அரசின் மீதான படித்த மத்தியதர வர்க்கத்தின் அதிருப்தியையே சுட்டிக்காட்டுகிறது என கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
போரை முன்வைத்து அரசு நடாத்தும் வியாபாரமும், பொருளாதார நெருக்கடியுமே இவ்வதிர்ப்திக்கான அடிப்படை என மேலும் பெயர் குறிப்பிட விரும்பாத அவ்வூட்கவியலாளர் குறிப்பிட்டார்.