ஐக்கிய ந hடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்றை நிறைவேற்ற அமெரிக்கா அனுசரணை வழங்கும் என்பதனை அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் திருப்தி அடையாத காரணத்தினாலேயே அமெரிக்கா மூன்றாம் தடவையாகவும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்ற ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அரசு தீர்மானங்களைச் சமர்ப்பித்து விசாரணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் தவிர வேறு எதனையும் ஐ.நா இல் நிறைவேற்ற முடியாது. உலகம் முழுவது குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையின் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்டது. இன்றும் இல்ங்கையில் தொடரும் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்புக்குறித்து மூச்சுக்கூட விடாமல் இலங்கை அரசிற்கு இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது.
தமிழ் மக்களதும் முழு உலக மக்களதும் எதிரியான அமெரிக்க அரசின் தீர்மானம் ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி வாக்குகளைப் பெற்றுக்கொள்ள மட்டுமே உதவும்.
மக்களை அணிதிரட்டுவதற்கான பொறிமுறையை உருவாக்குவதும், மக்கள் யுத்தத்திற்கான தயாரிப்புக்களை மேற்கொள்வதுமே இன்று மக்கள் மத்தியிலுள்ள தேவை.