இந்திய வெளியுறவு அமைச்சர் பிராணப் முகர்ஜி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா அரசு வழங்கிவரும் இராணுவ உதவிகள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளித்ததுடன் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக்கட்சிகள் பிரதிநிதிகள் குழு அளித்த பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டுமென்று இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க உறுப்பினர் டாக்டர் மைதிரியன் பேசும்போது, வவுனியா விமான நிலையத்தின் மீது அண்மையில் நடத்திய தாக்குதலினால் இரண்டு பொறியியலாளர்கள் காயமடைந்தார்கள் அவ்விருவரும் இந்தியர் என்பதை இலங்கை ஜனாதிபதியே உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்திய அரசாங்கம் மௌனம் சாதிப்பது ஏன்? அவர்களின் நிலைதொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். என்றார்.
மேலும் இருநாட்டு ஒப்பந்தங்களின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவித்ததா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்திய கம்யூனிஸ்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசுகையில், இலங்கைக்கு இந்தியா மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆயுத உதவி வழங்கியதா என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென்றும் அதேபேõல் கச்சதீவு இந்திய மீனவர்களின் உரிமை தொடர்பாகவும் விளக்க வேண்டுமென்றும் கேட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் டி. ரங்கராஜன் பேசும்போது, இனிமேல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராதென உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதா எனக்கேட்டார். தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது, சர்வதேச அமைப்புகளின் உதவியுடன், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி கேட்டார்.