பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸின் நண்பர் அடம்வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்ததாக சனல் 4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி சனல் 4 தொலைக்காட்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதே வேளை பிரித்தானிய தமிழ் இனவாதிகள் நெருங்கிய உறவைப்பேணும் பிரித்தானிய ஆளும் கட்சியின் பிரதமர் டேவிட் கமரன் லியாம் பொக்சை எல்லா வழிகளிலும் பாதுகாப்பது தனது கடமை எனக் குறிபிட்டுள்ளார்.
இலங்கையில் வன்னிப் போர் நடைபெற்ற வேளையில் இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்த நாடுகளில் பிரித்தானியாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.