இலஙகை அரசு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை இழந்துள்ளது. இந்த முடிபு எதிர்வரும் 15ம் திகதியே ஐரோப்பிய ஒன்றியத்தால் உத்தியோகபூருவமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதுவரைக்கும் உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை எனினும், இலங்கை அரசிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு எதிரான பிரச்சாரத்தை பாக்கியசோதி சரவணமுத்து, வெலியமுன ஆகியோர் முன் நின்று நடத்தியதாக மகிந்த ஆட்சி குற்றம் சுமத்துகிறது. அரச சார்பு ஊடகங்கள் இவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதன் விளைவாக பல நெசவு ஆலைகள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.