வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்ததின் போது சிக்குண்ட பொது மக்களிடம் அறிமுகம் இல்லாத மோசமான சுவாச நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்.கிளிநொச்சி மூல்லைத்தீவு காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார் இறுதி யுத்தத்தின் போது சிக்குண்டிருந்த மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
இறுதிப்போரின் போது அதிகளவான மக்கள் சிக்கண்டிருந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஏறிக்கணைக்குண்டு தாக்குதல்களே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஏறிக்கணைத்தாக்குதல் காரணமாக மேல் எழுந்த மணற்தூள்கள் மற்றும் நுண்ணிய வெடி மருந்து தூள்களை சுவாசித்தன் மூலமே இந்நோய்க்கு இவர்கள் ஆளாகியுள்ளனர் . இந்நோய்க்கு வன்னியில் சிக்குண்டிருந்த 90 சதவீதமான மக்கள் ஆளாகியுள்ளனர் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது