இரான் 29 குற்றவாளிகளுக்கு(?) கூட்டாக மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது

இரான் 29 குற்றவாளிகளுக்கு கூட்டாக மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இப்படிக் கூட்டாக இரான் தண்டனை நிறைவேற்றிய சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக நடக்காதிருந்த ஒன்று.

தலைநகர் தெஃஹ்ரானில் உள்ள ஏவின் சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மற்றும் கொள்ளைக்காரர்கள் என்று தெரிவிக்ப்பட்டுள்ளது.

சென்ற வருடம் சீனாவுக்கு அடுத்து கூடுதலாக மரண தண்டனை நிறைவேற்றிய நாடு இரான் என்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை.

நாட்டில் நிலவும் போதைப் பொருள், மற்றும் குற்றக் கும்பல் பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக இரானிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அமைதிக்கான நொபெல் பரிசு பெற்ற இரானியரான ஷிரின் எபாதி அவர்கள் இரானிய அரசாங்கம் மரண தண்டனையைப் காட்டி மக்களை அச்சுறுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.