வட கிழக்கு இராணுவ மயப்படுத்தபடும் சூழலில் டக்ளஸ் தேவனந்தா இராணுவத்துடன் சுமூக உறவைக் கோரி பொதுமக்களைக் குற்றம் சுமத்துகிறார். இந்த நுற்றாண்டில் மனிதகுலத்தின் ஒருபகுதியை இரவோடு இரவாக அழித்துப்போட்ட இராணுவத்தை திருப்திபடுத்த முனைகிறார் டக்ளஸ்.
யாழ்ப்பாண கிளிநொச்சி அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்துடன் ஏற்படும் பிணக்குகளுக்கு பொதுமக்கள் சுமூகமான தீர்வினைஎட்ட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுமூகமான இணக்கப்பாடுகளின் மூலம் பொதுக்களுக்கும் இராணுவத்தினருக்கும இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் நோக்கில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அழிக்கப்படும் அப்பாவிப் பொதுமக்களைக் குற்றம் சுமத்து உளவியல் யுத்தம் ஒன்று நிகழ்தப்படுகிறதா என பரவலான சந்தேகம் எழுந்துள்ளது.







