“இந்தியா என்ற செயற்கைத் தேசம் “மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்” என்பதுதாம்உண்மை!இந்த இலட்சணத்தில் இந்திய ஜனாதிபதி கருணை காட்டுவது எவருக்கானது?இராஜீவ் கொலைக் குற்றவாளிகள்மீது அவர் கருணை மழை பொழிந்தால் அது இந்திய ஆளும் வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிடும்.”
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும்(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர் )”தூக்குத்தண்டனை”உறுதியாகி வருகிறது.
http://economictimes.indiatimes.com/news/politics/nation/rajiv-gandhi-assassination-president-rejects-mercy-petition-of-killers/articleshow/9568364.cms
இந்திய ஆளும் வர்க்கத்தின் வரலாற்றுப் பிரதி நிதிகளது பரம்பரையின் வீழ்ச்சி-அழிவில்(காந்தி கொலை-சஞ்சாய் காந்தி கொலை-இந்திரா காந்தி கொலை-இராஜீவ் காந்தி கொலை) இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் பிளவை உறுதிப்படுத்தி விடலாம்.திட்டமிடப்பட்டு காந்தி-காந்தி குடும்பத்தவர்கள் அழிக்கப்பட்டதன் பின்னே மாறிவரும் இந்திய ஆளும் வர்க்க முரண்பாடுகள் முன்னிலைக்கு வந்தன.
இதன் தொடர்ச்சியான படுகொலை அரசியலானது,குற்றஞ் சுமத்தப்பட்ட மூவர்மீது(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர் ) வழமைபோலவே”தூக்குத் தண்டனையை”சுமத்தி இருக்கிறது.இது,புலிவழிப்பட்ட கடைந்தெடுத்த துரோக அரசியலின் இன்னொரு பக்கத்தையொட்டி விவாதிக்க வேண்டியது.
அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு அடியாளாகவிருந்த புலிப் பாசிஸ்ட்டுக்கள்,இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்காகக் கூலிக்குக் கொலை செய்ய ஆயத்தமானபோது தனது பேரத்தில் இராஜீவ் கொலையை துன்பியில் நிகழ்வெனக் கூறிக்கொண்டது.இக் கொலையின் பின்னணியை புலி அடியாட்படையின் இந்தியவுறுகளைத் திறம்படவும்-வெளிப்படையாயும் ஆரயக்கூடிய ஊடகங்களால் மட்டுமேதாம் கொலைக் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் நியாயவாதிகளா-குற்றவாளிகளாவெனத் தீர்மானிக்க முடியும்.
இங்கே,நீதி மன்றத்துக்கான வேலை இந்திய ஆளும் வர்க்கத்தைக் காப்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? எனவே,இத் “தூக்குத் தண்டனை” த் தீர்ப்புகளையிட்டு ஆச்சரிப்பட எதுவுமில்லை.ஆனால், நிசமான குற்றவாளிகளைத் தப்பவைக்கும் முயற்சியில் சிலரைச் சட்டரீதியாகக் கொல்வதையிட்டு நாம் விவாதிக்க முடியும்.
ஒரு கருத்துக்குப் பன்முகப் பட்ட புரிதல் சாத்தியமான இன்றையவுலகில் நாம் இராஜீவ் கொலை சம்பந்தமான கருத்துகளுக்கு ஒற்றை பரிணாமப் பாங்கில் புரிந்து கொள்வது-விவாதிப்பது எவ்வளவு அபாயகரமானதென்பதைப் புரிந்து கொள்ள இந்திய ஆளும் வர்க்க ஊடகங்களே சாட்சி!
இராஜீவ் கொலையைக் கூலிக்காகச் செய்த புலிகள் அதைத் தமிழ் பேசும் மக்களது விடுதலைக்காகச் செய்ததாகத் தமது வால்கள் மூலம் கருத்துக்கட்டியபோது,இந்திய”அமைதிப்படை “அட்டூழியங்களைச் சொல்லி நியாயப்படுத்திய காலக்கட்டத்தில் இந்திய-தமிழ்நாட்டு மக்களில்பலர் அதை ஏற்க முடியாது இப்படியும் விவாதித்தார்கள்:
“ஈழத்தில் இந்திய இராணுவம் படுகொலைகள்-அட்டூழியம் புரியவில்லை,அதை நாங்கள் நம்பத் தயாரில்லை”
-இந்திய பிரதான ஊடகங்களது வாசகர்கள்.
இன்று கொலைக் “குற்றவாளிகள்”மூவருக்கும் “தூக்குத் தண்டனை”உறுதியாகிவிட்ட நிலையில்,இதைச் சாத்தியப்படுத்தும் அருகதை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு உண்டா?இந்தியக் கட்சி அரசியலில் ஆதிக்கஞ் செலுத்தும் பெரும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் என்ன யோக்கியதை உண்டு?
இந்தியச் சட்டத்துறையானது இந்திய ஆளும் வர்க்கத்தின் காப்பரண் என்பதைக் குறித்து முரண்பட உதுவுமில்லை.நிலவும் பொருளாதார அடிக்கட்டுமானத்தில் மேல்மட்ட வன்முறைசார் கருத்தியிலே நீதிமன்றம் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.எனவே,இந்த அருகதையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான அழிவு அரசியலைக் குறித்துப் பார்க்கலாம்.
இந்த அரசியல் நகர்வானது தென்னாசியக் கண்ட நாடுகள்பூராக வாழும் மக்களுக்கு ஆபத்தானது.இத்தகைய அரசியல் தொடர்ந்து”தூக்குத் தண்டனை”உடாக வெற்றி பெறுமானாலும் இந்தியாவில் புரட்சிகரப் போராட்டம்,குடிசார் உரிமை அமைப்பாக்கம் யாவும் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என்ற உண்மையையும் புரிந்தாக வேண்டும்.
இந்த ஆபத்தான அரசியலை(ஆளும் வர்க்க-அதிகாரக் கூட்டத்தின் பயங்கரவாதத்தை) நியாயப்படுத்தும் ஆளும் வர்க்க கருத்தியற்றளமானது கீழ்வரும்படி மக்களைக் காயடித்தது:
1): குஜராத்தில் 3000 இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:”ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்”.என்றதும்,
2): பாகிஸ்தான், காஷ்மீரி மக்களை இந்தியாவுக்கெதிராக தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,
3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்
செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும் ஒருவர், அதைச் சார்ந்து எது உண்மை எது பொய்யெனத் தீர்மானிப்பதால் “ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்” மாற்றப் படுதல் பரந்துபட்ட மக்களுக்குள் சாத்தியமாகிறது.
அதை நம்பும் தளமும் முற்றுமுழுதாக துக்ளக் சோ போன்றோரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இன்றை சீரழிவு ஊடகத்துறை என்பதும் 24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக் என்ற வகையறாவுக்குள்ளும் காட்சிப்படுத்துவதாக எண்ணவோண்டாம்.
இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரும் இந்த வகை மையக் கருத்தியில் வன்முறையைச் செய்தே முடிக்கின்றனர்.இவர்களேதாம் “தூக்குத் தண்டனையை”நியாயப் படுத்தும் பேர்வழிகள்.இவர்களது முன்னோடி”மகாத்மா” காந்தி என்பதை, தோழர் பகத் சிங்கின்மீதான “தூக்குத் தண்டனையில்”காந்தியின் அரசியலை உரைத்துப்பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
இந்தியா என்ற செயற்கைத் தேசம் “மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்” என்பதுதாம்உண்மை!இந்த இலட்சணத்தில் இந்திய ஜனாதிபதி கருணை காட்டுவது எவருக்கானது?இராஜீவ் கொலைக் குற்றவாளிகள்மீது அவர் கருணை மழை பொழிந்தால் அது இந்திய ஆளும் வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிடும்.
ஆளும் வர்க்கம்”வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது.தூக்குத் தண்டனை என்பது போராடும் மக்களை மனோவியல்ரீதியாகத் தாக்கும் ஆயுதம்.அதைச் செய்வதில் அதீத அராஜகமுடைய தேசங்களான அமெரிக்கா-இந்தியாபோன்ற தேசங்கள் முன்னிடம் வகிக்கின்றன.
இதுதாம் முள்ளிவாய்க்காலில் இந்திய ஆளும் வர்க்க நலன் மேற்கொண்டது.இன்று நாகலாந்து,மிசோரம் மற்றும் காஷ்மீரி மக்களை இந்த அழிவு அரசியல் படுத்தும் பாட்டைப் புரியாத இந்த நடுத்தர வர்க்கம் ஈழமக்களின் அழிவைக்காணுமெனக் கனவு கண்டால் அது தப்பானது.
நிலவும் அதிகாரத்துக்கு எதிரான திசையில் காரயமாற்றுபவர்கள் அதிகமாகப் பரந்துபட்ட மக்களது நலனின் நிமித்தமே தமது செயற்பாடுகளை முடுக்கி விடுகின்றனர்.இதுள் நிலவும் ஆதிக்கம் ஆளும் வர்க்கமாக இருந்தாலென்ன அல்லது விடுதலைக்காகப் போராடும் விடுதலை இயக்கமாகவிருந்தாலென்ன அவர்கள் எந்த வர்க்கத்தால் ஆட்டி வைக்கப்படுகிறார்களோ அந்த வர்க்கத்தின் நலனையே பிரதிபலிப்பார்கள்.இதற்குப் புலிகள் இயக்கம் நல்ல உதாரணம்.
பாருங்கள், புலிப்பாசிஸ்டுக்கள் எத்தனை மனிதர்களுக்கு மரணத்தண்டனை கொடுத்தார்களென!இவர்கள் அனைவரும் இதே ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் போன்று நிரபராதிகள்.மக்களுக்காச் செயற்பட்டவர்கள்-கூலிக்குக் கொலை செய்தும்,உடந்தையாகவும் இருந்தவர்களில்லை.
கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தப் பட்டியல் நீளமானது!தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.
இறுதியாகச் சிலவற்றைச் சொல்லி முடிக்கலாம்:
இராஜீவ் கொலைக்காகப் பலியெடுக்கப்படக் காத்திருக்கும் அந்த மூவருக்கும்(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர்) முதலில், நரேந்திர மோடிக்குத்”தூக்குக் கயிறை”இந்திய நீதித் துறை வழங்குமாக இருந்தால் நிச்சியம் இந்த ராஜீவ் கொலைக் குற்ற வாளிகளுக்கு எதிராகத் தீர்க்கப்பட்ட தீர்ப்பிலும் ஏதாவது நியாயம் இருக்கக் கூடும்!.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.08.2011
இது ஒரு யதார்தைமான கட்டுரை இல்லை, புலிகலை பட்ரி வசை பாடும் இனையகம் என்ட்ரு தான் இன்னொரு இனயத்தை பார்க தோன்டிகிரதெ வொலிய யதார்தமாக தமிலருக்கு விடுதலை தேடி கொடுக்கும் நோக்கம் இல்லை என்ட்ரெ தொன்டுகிரது
இந்தியா எனும் செயற்கை தேசத்தையும் ,அதனை தாங்கிப்பிடிக்கின்ற மேல்கட்டுமானமானங்களில் இருந்தும் உண்மையையோ நீதி(?)யையோ எதிர்பார்ப்பதிலுள்ள ஏமாளித்தனத்தை இடித்துரைக்கின்ற சிறந்த கட்டுரை.. பல விடயங்களை சரியான முறையில் தொட்டுச்சென்றிருக்கின்றார். ந்ல்லகட்டுரை தந்த பி.வி.எஸ் க்கு ந்ன்றிகள்.
. தூக்குத்தண்டணை தவறு என்பதில் எமக்கு உடன்பாடே ஆனால் அதற்காக துக்கிலிடப்பட வேண்டியவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்படவே ண்டும் என்ற புதிய நீதியை எம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை வேண்டுமானால் அவர்கள் இறக்கும் வரை சிறையில் இருக்கவேண்டும் என்று கோரலாம் ராசிவ் கந்தி கொல்லப்,பட்டது தமிழர்களுக்கு நன்மை தரும் செய்தி என்று நான் எண்ணவில்லை அப்படி எண்ணுபவர்கள் கூட அவருடன் சே ந்து அப்பாவி தமிழர்கள் 30 பேர் சாக வேண்டிய தேவை என்ன? என்று விளக்குவார்களா? இல்லைகுண்டு வெடிப்ப்பில் இதெல்லாம் சகசம் தாணே என்று சொல்லுவார்களே ?அப்படி என்றால் அதே வாதத்தை முன் வைக்கும் ராசபட்சே குழுவிற்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு
//ஆளும் வர்க்கம்”வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது.தூக்குத் தண்டனை என்பது போராடும் மக்களை மனோவியல்ரீதியாகத் தாக்கும் ஆயுதம்.அதைச் செய்வதில் அதீத அராஜகமுடைய தேசங்களான அமெரிக்கா-இந்தியாபோன்ற தேசங்கள் முன்னிடம் வகிக்கின்றன//ப.வி.ஸ்ரீரங்கன்
சீனாவை ஈரானை… தவிர்த்த சாமர்த்தியம் என்னவோ?
//புலிப்பாசிஸ்டுக்கள் எத்தனை மனிதர்களுக்கு மரணத்தண்டனை கொடுத்தார்களென!இவர்கள் அனைவரும் இதே ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் போன்று நிரபராதிகள்.மக்களுக்காச் செயற்பட்டவர்கள்-கூலிக்குக் கொலை செய்தும்இஉடந்தையாகவும் இருந்தவர்களில்லை.
கந்தசாமி இராஜினி திரணகம விஜிதரன் கிருஷ்ணானந்தன் செல்வி இப்படி இந்தப் பட்டியல் நீளமானது!// ப.வி.ஸ்ரீரங்கன்
இந்திய என்பது உலகின் பெரிய ஐனநாயக அரசென பீற்றிக்கொள்கிறது. எனவே அது நீதிக்கு மனிதவுரிமைக்கு கட்டுப்படணும்
புலிகள் ஆயுதம்தாங்கிய ஒரு போராட்ட அமைப்பு. அவர்கள் நீதி மன்றம் அமைத்து வழக்காடி தீர்ப்பளிக்கவில்லை. தேசத்துரோகிகளாய் இனம் காணப்பட்டவர்களையே இராணுவ முறைமையில் தண்டித்தார்கள் . செல்வி தனது தீப்பொறிநண்பர்களுடன் சேர்ந்து கிட்டுவிற்கு கைக்குண்டு வீசியது எந்தவகையாம். இந்த அற்பர்களிற்கு வக்காலத்து வாங்குபவர் யாராக இருப்பார் என்பது தெளிவு.
//அப்பாவி தமிழர்கள் 30 பேர் சாக வேண்டிய தேவை என்ன? என்று விளக்குவார்களா? இல்லைகுண்டு வெடிப்ப்பில் இதெல்லாம் சகசம் தாணே என்று சொல்லுவார்களே ?அப்படி என்றால் அதே வாதத்தை முன் வைக்கும் ராசபட்சே குழுவிற்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு// thurai ilaMurugu
அப்படியா! இதே இந்தியஅரச பயங்கரவாதத்திற்கு1987-1990 வரை 10 000 மேற்ப்பட்ட தமிழர்கள் பலியாகினர். அதற்கு காரணமான காங்கிரசு அரச அங்கத்தவர்களையும் அதிகாரிகளையும் இந்தியஅரச இராணுவ விமானப்படையையும் முதலில் சிறையில் ஆயுட்காலத்திற்கும் அடையுங்கள்.
ராஜிவ் கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட தனு சிவராசன் சுபா ஏற்கனவே இறந்துவிட்டநிலையில் கொலையுடன் சம்பந்தப்படாதவர்களை தண்டிப்பதோ உங்களுக்கு தெரிந்த நீதி?
ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி பதில் ஆகிவிடாது இந்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது அதில் அய்யம் இல்லை அதே இந்திய அரசு தான் புலிகளுக்கு ஒரு காலத்தில் ஆயுதம் பணம் இருப்பிடம் வழங்கி ஆதரித்தது இப்பொது சொல்லுங்க்கள் இந்திய அரசை புலிகளை ஆதரித்ததற்காக தூக்கிலிடுவதா/ ஆயுள் தண்டனைக் கொடுப்பதா அல்லது பிறகு அப்பவித்தமிழர்களை கொன்றதற்காக தண்டிப்பதா?புலிகள் இராணுவ அமைப்பு அதனால் யாருக்கு வேன்டுமானலும் மரண தண்டனை அளிக்க்கலாம் அப்பவி மக்கள் உள்பட முள்ளிவாய்க்கலில் மனித கேடயங்கள
ஆகாலாம் அனால் அரசு அதை செய்யக்கூடாது குற்றத்தில் நேரடியான குற்றம் மறைமுகமான குற்றம் என்று உள்ளதா? இம் மூவருக்கும் ராசிவ் காந்தி கொல்லப்படுவார் அவருடன் அப்பாவி மக்களும் கொல்லப்படுவார்கள் என்பது தெரியாதா?இவர்களில் யாருமே ரசிவ் கா ந்தி வரௌகையின் போது அருகில் செல்லுவதையே தவிர்த்துவிட்டது ஏண்? அவருடன் செற பார்வயாளர்கள்கொல்லப்பாட்டது உங்களுக்கு நேர்மையான செயால்லாகத்தெரிகிறதுபோலும் அப்படியே வைத்துக் கொண்டாலும் தெரியாமல் செய்தா தனி நீதி என்று சட்டம் சொல்லுவது இல்லையே வாதம் சரியாக இ ருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் சரி இம்ம்முவரும் தமிழ் நாட்டு மக்களுக்கு செய்த தொண்டு என்ன? ஏன் அவர்களுக்காக தமிழர்கள் போராட வேண்டு என்பது எனது எளிய கேள்வி அதற்கு பதில் இல்லையே
//ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி பதில் ஆகிவிடாது //thurai ilamurugu
“ராஜிவ் கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட தனு சிவராசன் சுபா ஏற்கனவே இறந்துவிட்டநிலையில் கொலையுடன் சம்பந்தப்படாதவர்களை தண்டிப்பதோ உங்களுக்கு தெரிந்த நீதி?” என்பது வெறும் கேள்வியா இல்லை பதில் சொன்னபின்னர் கேட்கப்பட்ட கேள்வியா? முதலில் நிதானமாக வாசியுங்கள் பிறகு நொட்டை சொல்லுங்கள்.
// இந்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது அதில் அய்யம் இல்லை//
10000 பேரை கொலை செய்த ராசீவையும் அவனது அரசையும் வெறுமென கண்டித்தால் போதும். ஆனால் அதே ராசீவ் கொலையுடன் சம்பந்தப்படாதவர்களை தண்டிக்கனும். உங்கள் நியாயம் நல்லாய்தானிருக்கு!
//இந்திய அரசை புலிகளை ஆதரித்ததற்காக தூக்கிலிடுவதா/ ஆயுள் தண்டனைக் கொடுப்பதா அல்லது பிறகு அப்பவித்தமிழர்களை கொன்றதற்காக தண்டிப்பதா?//thurai ilamurugu
புலிகள் ஒருபோதும் தமிழ்அப்பாவி பொதுமக்களை திட்டமிட்டுக் கொல்லவில்லை. ஈபீஆர்எல்எப்ம் புளொட்டும் ரெலோவும் ஈபிடிபி …. இந்திய சிறிலங்கா துணைக்குழுவாகவிருந்த ஆயுதாரிகளே தவிர அப்பாவிகள் அல்ல. துரையப்பா அமிர்தலிங்கம் நீலன் … போன்றோர் தமிழின துரோகிகள். இவர்களது மரணத்திற்கு நேர்மையுள்ள 90வீதத்திற்கு மேற்ப்பட்ட ஈழத்தமிழர் துளியேனும் கவலைப்படவில்லை. உங்களை போன்ற இந்திய சிறிலங்கா அடிபொடிகள்கள்தான் இது பற்றி பேசுகிறீர்கள்.
இந்தியாவின் கபடமுகத்தை 1986லேயே புரிந்த புலிகள் இந்தியாவிடமிருந்து விலகிவிட்டனர். 1987 ஆண்டிற்குப் பிறகே இந்திய அஜாரகம் தமிழீழமக்கள் மீது நேரடியாக கட்டவிழத்தொடங்கியது. பிறகெப்படி இந்திய அஜாரகத்திற்கு புலிகளை குற்றம் சாட்டுவீர்கள்.!
//?புலிகள் இராணுவ அமைப்பு அதனால் யாருக்கு வேன்டுமானலும் மரண தண்டனை அளிக்க்கலாம் அப்பவி மக்கள் உள்பட முள்ளிவாய்க்கலில் மனித கேடயங்கள
ஆகாலாம் அனால் அரசு அதை செய்யக்கூடாது //
முதலில் ஒரு அரசென்றால் என்ன அதன் பொறுப்புக்கூறும் கடப்பாடு எத்தகையது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். புலிகள் அப்பாவி தமிழர்களை திட்டமிட்டு கொன்றிருந்தால் எப்படியாம் 90 வீதத்திற்கு மேற்ப்பட்ட ஈழத்தமிழர்கள் அவர்களை ஆதரித்தார்கள்??? சும்மா லங்கா புவத்தின் கட்டுக்கதை தகவல்திரிப்புக்களை இங்கு சொல்லாதீர்கள் கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு.
// குற்றத்தில் நேரடியான குற்றம் மறைமுகமான குற்றம் என்று உள்ளதா?//
நிட்சயமாக. சட்டப்படி அதன் அடிப்படையிலேயே தீர்ப்புக்கள் வழங்கப்படுகிறது. உங்கள் நட்பு வட்டத்தில் விபரமானவர்கள் யாராவது இருந்தால்? கேட்டுப்பாருங்கள்.
//இம் மூவருக்கும் ராசிவ் காந்தி கொல்லப்படுவார் அவருடன் அப்பாவி மக்களும் கொல்லப்படுவார்கள் என்பது தெரியாதா?//
அவர்களுக்கு இப்படியொரு குண்டு வெடிப்பு நடக்கப் போவதே தெரியாது. பிறகெப்படி ராசீவ் சாவான் அவனுடன் காங்கிரஸ் அடிபொடிகள் சாவார்கள் என்று தெரியும்? புலி என்ன ஈபீஆர்எல்எப்வா டக்ளசா? ஒருகிழமைக்கு முன்னரே காரைநகர் கடற்படை முகாமை தாக்கப்போகிறோமென ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்க!
//இவர்களில் யாருமே ரசிவ் கா ந்தி வரௌகையின் போது அருகில் செல்லுவதையே தவிர்த்துவிட்டது ஏண்?//
இவர்களில் எவருமே ராசீவ்/ காங்கிரஸ் தொண்டர்கள் இல்லையே. இந்நிலையில் இவர்களுக்கென்ன வேலையிருக்கு சென்னையிலிருந்து விலகியிருக்கும் சிறி பெரம்புத்தூர் போக!
//அவருடன் செற பார்வயாளர்கள்கொல்லப்பாட்டது உங்களுக்கு நேர்மையான செயால்லாகத்தெரிகிறதுபோலும் அப்படியே வைத்துக் கொண்டாலும் //
உங்களுடைய சொந்தக்கற்பனையை ஊகங்களை எனது கருத்தாக சொல்ல வேண்டாம்.
// சரி இம்ம்முவரும் தமிழ் நாட்டு மக்களுக்கு செய்த தொண்டு என்ன? ஏன் அவர்களுக்காக தமிழர்கள் போராட வேண்டு என்பது எனது எளிய கேள்வி அதற்கு பதில் இல்லையே//
ஏன் தமிழ்நாட்டு மக்களிற்கு தொண்டு செய்யாவிட்டால் அது மரணதண்டணைக்குரிய குற்றமென தடா சட்டம் அல்லது இந்திய குற்றவியல் சட்டம் சொல்லுதா! பேரறிவாளனும் அவரது குடும்பத்தாரும் திராவிடர் கட்சி காரர்கள் என்பது தெரியாத!
தமிழர்கள்/ மனிதர்கள் இந்த நீதி மறுக்கப்பட்ட மனிதர்களிற்காக போராடுவது அவர்கள் விருப்பம். அதை கேள்விக்குட்படுத்த நீங்களொன்றும் தமிழரின்/ மனிதர்களின் ஏக பிரதிநிதி அல்ல! இதை முதலில் மனதில் எப்பவும் ஞாபகத்தில் வைத்திருங்கள்.
அதைவிட உங்களை யாரையா போராடச் சொன்னது. அதைவிட இந்திய சிறிலங்கா அருவருடிகளிற்கும் போராட்டத்திற்கும் என்னையா சம்பந்தம்!
அதாவது திட்டமிட்டுக் கொல்லவில்லை?collateral damage என்று சொல்லவருகிறிர்கள் அதையேத்தாணே கொத, ராசபட்ஸெக்கள் சொல்லுகின்றனர் மனித வெடிகுண்டுகள் வெடித்தால் பக்கத்தில் இருப்பவர்கள் சாவர்கள் என்பது புலிகள் தலைவருக்கு தெருயாது அடுத்த்வன் மக்கலின் முதுகில் வெடிகுண்டு கட்டிவிட்டு தன் மகனை கடைசிவரை தன்னுடன் வைத்துக் கொண்டதலைவருக்கு திட்டமிட்டு கொலை செய்ய உரிமை உண்டு ஆனால் ஒரு நாடு நீதி விசாரணைப்,படி குற்றம் புரிந்தவர்கள் என்று திர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனைஅளிக்க கூடாது தனிமனிதன் செய்யாலாம் இது என்ன நீதியோ தெரியவில்லை உங்கள் சட்டப்படி அமெரிக்கா பின் லெடனைக் கொன்றதும் தவ்றுதானே இதற்கு எந்த மனித உரிமை அமைப்பும் இப்படி கூச்சல் போடவில்லையெ நான் போராடவெண்டுமா இல்லையா என்பதை நான் முடிவு செய்து கொள்ளுகிறன் அதைப்,ப்ற்றி தாங்கள் கவலைப்,படவேண்டாம்
ராசபட்செவைத் தண்டிக்கத்தான் வேண்டும் இங்கு கேள்வி தூக்குத்தண்டணைப்,பற்றியது புலிகள்முவரும் 21 வருடம் தண்டிக்கப்பட்டுத்தான் சிறையில் இருந்தனர் இருக்கின்றனர்
மரண தண்டனை மனித நேயம் அற்றது என்று முழக்கமிடும் மனித நேய ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி சற்று முன்னர் வரை ராசபட்சேவைக் கைது செய்து தூக்கிலிட வேண்டும் என்று கேட்டீர்களே?? இப்பொழுது நீங்கள் காந்திப்,புத்தகத்தைப்படித்து கருத்து சொல்லுவது அவருக்கும் சேர்த்தா இந்த கேல்விக்கு உங்கள்பதில் எனக்குத் தெரியும் புலிகளை 90 % ஈழத்தமிழர்கள் ஆதரித்தது பயத்தினாலா அல்லது பாசத்தினால என்பதை இனியோருவில் உள்ள மற்றக் கட்டுரைகளைப்,படித்தபின் சொல்லவும்
//அதையேத்தாணே கொதஇ ராசபட்ஸெக்கள் சொல்லுகின்றனர்//
நானொன்றும் வேற்றுநாட்டவனல்ல ராஐபக்சாக்கள் சொல்வதை நம்புவதற்கு. பாடசாலைமீதும் ஆலயங்கள்மீதும் குண்டுவீசிக் பொதுமக்களை கொன்றுவிட்டு பயங்கரவாதிகளின் முகாமழிப்பென ஜேஆர் காலந்தொட்டு இன்றுவரை சிறிலங்கா அரசபயங்கரவாதம் சொல்கிறது. அந்த “லங்காபுவத்” வாந்திகளை விழுங்கிவிட்டு இங்குவந்து கக்காதீர்கள். ராஜபக்சாக்களின் கதையை மேற்குலகோ ஐநாவோ மனிதவுரிமை அமைப்புக்களோ சனல்4 போன்ற ஊடகங்களே! நம்பதா நிலையில் நீங்கள் நம்புகிறீர்கள் எனில் இன்றுவரை லங்காபுவத்தை நம்புகிறீர்கள் என்றுதான் அர்த்தம். உங்கள் தலைமை எது சிறிதர் சினிமாகொட்டகையா! ஒரிசாவா! பெங்களுரா! இல்லை வவுனியாவா?
//மனித வெடிகுண்டுகள் வெடித்தால் பக்கத்தில் இருப்பவர்கள் சாவர்கள் என்பது புலிகள் தலைவருக்கு தெருயாது //
ஏன் தெரியாது! புலிகள் நடத்தியது அகிம்சை போராட்டம்தானே காருண்யம் பார்க்க! ஆரம்பத்திலேயே புலிகளின் கண்ணிவெடித்தாக்குதலிற்கு கெரில்லதாக்குதலுக்கு பதிலடியாக தமிழ்பொதுமக்களையே சிறிலங்கா அரசபயங்கரவாத இராணுவம் கொன்றது. புலிகள் அதற்காக அந்த தாக்குதலை நிறுத்தவில்லை. எதிரியின் விருப்பிற்கு ஏற்ற மாதிரி அவர்கள் போராட முடியாது. ஐயோ மக்களை அழிக்கும் தாக்குதலை புலிகள் செய்கின்றனர் என நீலிக்கண்ணீர்விட்ட புளொட் ஈபீஆர்எல்எப் பிறகென்ன செய்தவர்கள் இந்திய சிறிலங்காவின் ஒட்டுக்குழுவாக மாறி அதே மக்களை அழித்தவர்கள்.
செல்வா அகிம்சை போராட்டம் நடத்திய போதும் சிறிலங்கா அரசபயங்கரவாதம் தமிழின அழிப்பை திட்டமிட்டுத்தான் செய்தது. புலிகள் ஆயுதபோர் செய்த போதும் அதைத்தான்செய்தது.
உங்களின் கவலை பொதுமக்களை பற்றியதல்ல! ஏசமான் ராஜீவ் இறந்திட்டாரே ராஐபக்சாக்கள் சிறை செல்லப்போகிறார்கள் என்பதுதான்.
//அடுத்த்வன் மக்கலின் முதுகில் வெடிகுண்டு கட்டிவிட்டு தன் மகனை கடைசிவரை தன்னுடன் வைத்துக் கொண்டதலைவருக்கு திட்டமிட்டு கொலை செய்ய உரிமை உண்டு ஆனால் ஒரு நாடு நீதி விசாரணைப்இபடி குற்றம் புரிந்தவர்கள் என்று திர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனைஅளிக்க கூடாது //
முதலில் கரும்புலி என்பவது அவரின் தனிப்பட்ட விருப்பிலேயே போகிறார் யாரின் நிர்பந்தத்தில் அல்ல! பிரபாகரனின் மகன் கரும்புலியாக விரும்ப ஏதோ பிரபாகரன் தடுத்ததை பார்த்தமாதிரி சொல்கிறீர்கள். ஓஓ நீங்கள் லங்காபுவத் கேஸ் அல்லவா!
தனது எதிரியை திட்டமிட்டுக் கொல்லத்தானே ஆயுதத்தை கையில் எடுத்தவர் பிறகென்ன அடுத்த பேச்சு! ஓம் இந்தியாவும் சொல்லட்டும் தானொரு அரசல்ல ஆயுதஅமைப்பென பிறகு யாராவது அவர்களிடம் நியாயம் கேட்க மாட்டார்கள். உலகின் பெரிய ஜனநாயக நாடென பீத்துவதால்தான் அவர்களிடம் நீதி நியாயத்தை கேட்கிறார்கள். குற்றம் செய்யாதவர்களை தண்டிக்கணுமென சொல்வது நவீன காட்டுமிராண்டியாய்தான் இருக்க முடியும்.
//தனிமனிதன் செய்யாலாம் இது என்ன நீதியோ தெரியவில்லை//
பிரபாகரன் ஒன்றும் தனிமனிதர் அல்ல பலஆயிரம் உறுப்பினர்களை கொண்ட ஆயுத அமைப்பின் தலைவர். ஆயுதஅமைப்பு இராணுவ நீதிமன்ற முறைமையில்தான் முடிவெடுக்கும் என்ற அடிப்படை விளங்காத நவீன காட்டுமிராண்டி தாங்கள் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.
//உங்கள் சட்டப்படி அமெரிக்கா பின் லெடனைக் கொன்றதும் தவ்றுதானே இதற்கு எந்த மனித உரிமை அமைப்பும் இப்படி கூச்சல் போடவில்லையெ//
ஆம் நிட்சயமாக. அமெரிக்கா பின்லேடனை கொன்றதை பல மனிதவுரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன நீதி விசாரணை கோரியுள்ளன இது யதார்த்தம். இதுகளை சிலவேளை லங்காபுவத் சொல்லவில்லை போலை. அதுதான் உங்களிற்கு இது தெரியாமல் போய்விட்டது.
//நான் போராடவெண்டுமா இல்லையா என்பதை நான் முடிவு செய்து கொள்ளுகிறன் அதைப்இப்ற்றி தாங்கள் கவலைப்இபடவேண்டாம்//
அப்படியா! அப்ப ஏனாம் இங்குவந்து “ஏன் அவர்களுக்காக தமிழர்கள் போராட வேண்டு என்பது எனது எளிய கேள்வி அதற்கு பதில் இல்லையே” என பினாத்தினீர்கள்!
//ராசபட்சேவைக் கைது செய்து தூக்கிலிட வேண்டும் என்று கேட்டீர்களே??//
எந்த உலகத்தில் வாழ்கிறீர்! சர்வதேச விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டணை விதிப்பார்கள். தூக்குத் தண்டணை கிடையாது.
//காந்திப்இபுத்தகத்தைப்படித்து..//
அதென்ன காந்திப்புத்தகம்! அவனே ஒரு மொள்ளைமாறி முடிச்சவிக்கி அவனின் புத்தகம் ஒரு கேடா!
//90 மூ ஈழத்தமிழர்கள் ஆதரித்தது பயத்தினாலா அல்லது பாசத்தினால என்பதை இனியோருவில் உள்ள மற்றக் கட்டுரைகளைப்இபடித்தபின் சொல்லவும்//
நானேயொரு ஈழத்தமிழன் என்னின மக்களின் புலிகள் மேலுள்ள பற்று மரியாதை எனக்கு தெரியும் அதைவிட 2004 நாடளமன்ற தேர்தலில் 90வீதத்திற்கு மேற்ப்பட்ட ஈழத்தமிழர் புலியால் முன்னிறுத்தப்பட்ட ததேகூட்டமைப்பிற்கு வாக்களித்தது தெரியும். லங்காபுவத்தினால் மூளைச்சலவை செய்யப்பட்ட தாங்கள்தான் “இனியொரு இணையம்” படித்து தெளிவுறுறணும்.
Dear Friends,Why you want to safeguard the criminals?Do you want to follow the Tamil Nadu’s culprits ?.LTTE is not a revolutionary movement ,totally it is a mafia and a criminal movement. Then why you want to polish its criminality and a pro-imperialist political stand?Dont try to whitewash the activities of this criminal organization.
My dear friend the real culprit of rajiv assasination lies behind in congress party. Because the main aquist chandra samy till now no updates of his part. Around 100 questions were asked to sonia by janatha leader Subramaniya samy about linking her part of rajiv asassination , till no answer from her. Without congress political persons they didn do it, one example … on the time of bomb blast there was no political leader with him only few police officers died. where all these people went exactly on that. do u want me to belive that coincidence.. we want justice like who is behind and big shots should be bring in lime light and then we can decide these coolies to hang or not.