கறுப்புப் பணம் மற்றும் ஊழல் தொடர்பாக பாபா ராம்தேவுக்கும் அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என்று பாபா ராம்தேவ் அறிவித்திருந்தார். ஆனால் டெல்லியில் நள்ளிரவில் ராம்லீலா மைதானத்தில் புகுந்த காவல்துறை அதிரடியாக பாபா ராம்தேவை கைது செய்தது.
அப்போது ஏற்பட்ட காவல்துறை நடவடிக்கையினால் ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் காயமடைந்தனர்.
மேலும் எதிர்ப்பு தெரிவித்த ராம்தேவ் ஆதரவாளர்களை காவல்துறை தடியால் அடித்ததோடு கும்பலைக் கலைக்க கண்ணீர்ப்புகை வீச்சும் நடத்தியது.
நேற்று இரவு 1 மணியளவில் ராம்லீலா மைதானத்தில் ஏராளமான போலீஸ் படை குவிந்தது. அங்கு எதிர்ப்புகளுக்கிடையே உண்ணாவிரதப் பந்தல் கீழே சாய்க்கப்பட்டு ராம்தேவ் ஆதரவாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர், இதில் வன்முறை ஏற்பட்டது.
பாபா ராம்தேவ் தற்போது ஹரித்வாரில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நாயை இழுத்துச் செல்லுங்கள்.