சிறீ லங்கா ரெலிகொம் உலகத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உலகின் பல்தேசிய வியாபாரத்திற்குச் சேவை செய்யும் ஆசியாவின் பிரதான முனையாக சிறீ லங்கா ரெலிகொம் மாறியுள்ளது. தெற்காசியாவிலிருந்து மத்திய கிழக்கு ஊடாக மேற்கு ஐரோப்பாவை இணைக்கும் திட்டம் ஒன்றைப் பல நாடுகளதும் நிறுவனங்களதும் நிதி உதவியுடன் சிறீலங்கா ரெலிகொம் நடத்தி வருகிறது. சீ,மீ.வீ (South East Asia–Middle East–Western Europe 4 (SEA-ME-WE 4))என அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூன்று பகுதிகள் நிறைவுற்று நான்காவது பகுதி இப்போது நடைபெற்றுக்க்கொண்டிருக்கிறது. மல்ரி பில்லியன் பெறுமானமுள்ள இத்திட்டத்திம் பல்தேசிய நிறுவனங்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் பொன் முட்டையிடும் வாத்து.
லைக்கா மொபைல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஊழல் ஊடாக மகிந்த அரசு தனது குடும்பத்தை இத் திட்டத்துக்குள் உள் நுளைத்தது. மகிந்த ராஜபக்சவின் மருமகன் சமீந்திர ராஜபக்ச சிறீ லங்கா ரெலிகொம் இன் இயக்குனரானார்.
சீ மீ வீ (SEA-ME-WE 4)என அழைக்கப்படும் இத் திட்டத்திற்கும் அமெரிக்க அரசின் ஆசிய ஆக்கிரமிப்புத் திட்டத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. 18,800 மீட்டர்கள் நீளமான கடலடித் தொடர்பு இணைப்புக்கள் குறுகிய கால எல்லைக்குள் தெற்காசியாவிலிருந்து மத்திய கிழக்கு ஊடாக இன்டர்நெட்டின் முதுகெலும்பாகத் (backbone network)தொழிற்படும்.
சீ மீ வீ திட்டத்தின் முகாமைத்துவத்தை சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனமே கவனித்துக்கொள்கிறது. இலங்கையை அடிப்படையாகக் கொண்டே சீ மீ வீ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஐம்பது வீதமான பங்கு மலேசியத் தமிழ் மில்லியனேர் அனந்த கிருஷ்ணனின் கைகளில் முடங்கியுள்ளது. அதனையும் மிகுதிப்பகுதியைம் நிர்வகிப்பதற்குரிய இயக்குனராக இன்றைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிரிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இது சிரிசேன குடும்பத்தின் முதலாவது பெரிய வியாபாரத் தலையீடாகக் கருதப்படுகிறது. சிரிசேன ஆட்சிக்குவந்து இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே அவரது குடும்பம் மல்ரி பில்லியன் வியாபாரத்தில் ஏறி அமர்ந்துகொண்டது.
இம்முறை ராஜபக்ச குடும்பத்தின் ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து ‘ஜனநாயகம்’ மீட்ட ஊடகங்களதும், அரசியல் வாதிகளதும் ஆதரவோடு சிரிசேன குடும்பம் இலங்கையை அடகுவைக்கும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது.
https://lk.linkedin.com/in/shameendra
நானும் இந்தச் செய்தியைப் படித்தேன். சனாதிபதி சிறிசேனாவின் சகோதரர் குமாரசிங்கி சிறிசேனாவை ரெலிகொம் நிறுவனத்தின் இயக்குநராகப் போட்டதில் தப்பில்லை. குமாரசிங்கிக்கு அந்தப் பதவியை வகிக்க எல்லாத் தகுதிகளும் உண்டு. சனாதிபதியின் சகோதரர் ரெலிகொம் தலைவராக வந்து விட்டதால் சிறிசேன குடும்பம் எப்படி மல்டி பில்லியன் வியாபாரத்துக்கு அதிபதியாக வந்து விட்டது என்று சொல்ல முடியும்? அந்தக் கம்பனியின் பங்கில் பாதி அனந்தகிருஷ்ணனுக்கும் பாதி இலங்கை அரசுக்கும் இருக்கிறது. பங்கு வைத்திருப்பவர்கள்தான ரெலிகொம் இன் உரிமையாளர்கள். இது ஏன் உங்களுக்குப் புரியவில்லை?
சிறிய ஒரு திருத்தம் :-
18800 கிலோ மீற்றர் நீளமான கடலடித் தொடர்பு இணைப்பு ஆக இருக்க வேண்டும்
மேலும்:-
http://www.slt.lk/sites/…reports/SLT%20ANNUAL%20REPORT%202013.pdf
The two main shareholders of Sri Lanka
Telecom as at year end were
the Government of Sri Lanka
which held 49.5% through the
Secretary to the Treasury and
Global Telecommunication
Holdings N.V. of Netherlands,
which owned a 44.98% stake.
The balance shares are
publicly traded.
44.98% ஆனந்த கிருஷ்ணன் உடையது.
அப்படியிருந்தும் பின்னாலிருந்து இயக்கியது ஆனந்த கிருஷ்ணன். அது எப்படி?
முழுவதும் களவு. எப்படி ஸ்ரீ லங்கா டெலிகொம் கைமாறியது என்பது அலரி மாளிகை நிகழ்வுகளை மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ளது.
http://lankawhistleblower.blogspot.co.uk/2007/05/inside-story-of-telecom-deal.html
எப்படியிருந்தும்,
பங்காளிகளின் விகிதாசாரம் அல்ல நிறுவனங்களை இயக்குவது. ஸ்ரீ லங்காவில் சிலகாலமாக கோத்தபயாவின் உத்தரவே அதனை நிர்ணயித்தது. அது மட்டுமல்ல இப்போ ராஜபக்ச குடும்பம் இல்லாமல் போய் அரிச்சந்திரனே ஆண்டாலும் பல்தேசிய நிறுவன நியதி சுத்துமாத்துக்கள் மூலம் உலகை பேய்க்காட்டுவதே.
அரசியற் தலையீடுகளினால் ஸ்ரீ லங்கா டெலிகொம்-ஐ வைத்து மக்களை சூறையாட ராஜபக்ச குடும்பத்துக்கு பெருந்துணைபோன லைக்கா ஸ்கைநெட் விவகாரம் ற் தலையீடுக்கு ஒரு சிறந்த உதாரணம்.
ஸ்கைநெட்-எனும் இருபது ரூபாய் சிறு நிறுவனத்தை $100 மில்லியன் கொடுத்து வாங்கிய பெருங்களவு ஜப்பானிய NTT நிறுவனத்தை விரக்தியடையச் செய்து வெளியேற்றிய ஒரு யுக்தி. அவ்வளவும் அரசியற் தலையீடாலேயே நடந்தது. மகிந்த ராஜபக்ச-இன் செயலாளன் லலித் வீரதுங்க அதற்கு உத்தியோகபூர்வ முத்திரையும் குத்த தொலைத்தொடர்பு கட்டுப்பாடு எனும் உத்தியோகபூர்வ உருவுமெடுத்தான். இது ஒன்றும் ஸ்ரீ லங்கா சார்ந்த உன்னதமான களவுமில்லை.
இதே ஆனந்தகிருஷ்ணனும் சகாவான ரால்ப்f மார்ஷல் எனும் இன்னொரு கள்ளனும் இந்தியாவில் உலகிலேயே அதி பெறுமதி வாய்ந்த உழலான 2G ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தின் ஒரு முக்கிய கூறில் இருந்து சட்டரீதியாக ஒளித்துத் தப்பியே வாழ்கிறார்கள். இதன் நிமிர்த்தம் ஆனந்த கிருஷ்ணனும் அண்மையில் தனது நேரடித் தொடர்புகளை தனது பல நிறுவனங்களுடனேயே துண்டித்துமுள்ளான்.
தொலைத்தொடர்பு மற்றைய பல துறைகளுக்குள் பங்குசந்தைகளினூடாக நுழைந்து களவாட உதவும் ஒரு மையமாக உருவாகி வருகிறது. அதாவது தொலைத்தொடர்புத் துறையே ஒரு பொன் முட்டையிடும் வாத்து.
போர் நிமிர்த்தம் பலகாலமாக தள்ளுப்பட்டிருந்த காரணத்தாலும் இனப்படுகொலையாளிகளே ஜனாதிபதிகளாகவோ ஆட்சியாளர்களாவோ வரத் தகுதி என சனநாயகமே நிர்ணயிக்கும் அளவுக்கு மூலைச்சலவை செய்யப்பட்டிருக்கும் காரணத்தாலும் ஸ்ரீ லங்கா ஒரு காமதேனு.
யாரைய்யா இந்த மைத்திரிபால 40 வருடங்களாக மக்கள் பணத்தில் குடும்பம் நடாத்தி வயிறுவழத்த இந்த சிறிசேன மிகவும் நுனுக்கமாண அரசியல் களை மகேந்தின் குடும்பத்ற்கு பயிற்றுவித்தவர் இந்த சிறிசேன என்பதை மகேமகேமகேந்திர என்று ஊளையிடும லைக்கு மற்றும் லிபரா.. பட்டீல்.. போலஆகிவிட்டது சிறிசேன அன்கோதிட்டமிடல்
Birds of a same feather flock to gether
மைத்ரியின் சகோதரர் இயக்குனராகத்தான் பொறுப்பு வகிக்கிறார். ஆனால் இந்த நிறுவனம் மங்கள சமரவீரவின் அமைச்சுக்கு கீழ் இருக்கிறது. இது மைத்ரியின் கீழ் இல்லை. தவிர இந்த பதவிக்கு அவர் தகுதியானவர் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.
// பலரது கருத்தாக இருக்கிறது
மேலே உள்ள சனநாயகம், மூலைச்சலவை என பதிவிட்ட கருத்தை நோக்கவும்.
சனநாயகம் மட்டுமல்ல கருத்துச் சுதந்திரமும் ஸ்ரீ லங்காவில் மட்டுமல்ல இன்னும் கேவலமான முறைகளில் பல வசதிகளும் படைத்த புலம் பெயர்க்குவிக்கப்பட்ட தேசங்களிலும் ஒடுக்கப்படுவதே உண்மை.
இதில் வியப்பதற்கோ குற்றம் காண்பதற்கோ என்ன இருக்கிறது? மைத்திரி புரட்சிகரமான அரசையா நடத்தப் போகிறார்?
இலங்கையில் போர் முடிந்து விட்டது இனி ரானுவத்தின் பொறுப்புக்களிள் கொள்ளை அடிக்க முடியாது .மனிதனின் அன்றாட தேவைக்குரிய பணம் காச்சும் தொடர்பக விடையத்தின் தலைவராக மைத்திரி தனது தம்பியை நியமித்தது செரி என்று வாதிடுபவர்கள் மகேந்தாவின் அடைவருடிகள் என்பதை பதிவிடுகின்றேன்.உதாரணம் சீனா இலங்கை தனியார் மகேந்தா அன் கோவுக்கு கொடுத்த சட்லையிட் 38000 கிலோ மீற்றருக்கு மேல் நின்று உளக மாக்கன்ரிங்கை நெட். ஜீபிஎஸ் .தொடக்கம் செயல் படக்கூடிய திறன் கொண்ட கொமினிக்கேசன் கன்டியில் தளமாக கொண்டு இயங்க இருப்பது மகேந்தாவின் இளைய மகனின் பெயரில் இருப்பது அனைவரும் அறிந்த விடையம்.இந்த சேவைகள் தேவைகள் மக்கள் மயம் ஆகக்கூடாது என்பதற்காக இந்த நிமிடம் வரைக்கும் இந்த சிரிசேன மகேந்தாவின் ஆழ் அல்லது இதை தன் வசப்படுத்தும் வரைக்கும் பதுங்குவதன் அர்த்தம் என்ன??? ..சிரிசேன அன் கோ நிறுவனத்திற்கு அனைத்தும் மாற்றும் வரைக்கும் அல்லது சிறிசேனா அன் கோ நிறுவணமும் அதில் பங்குதாரிகள் ஆகும் வரைக்கும் .இந்த மக்கள் நளன் சாராத திருட்டு கூட்ட அன் கோக்களின் கூட்டிக்கொடுக்கும் திருடர்களே………100 நாள் திட்டம் 1000 நாள் திட்டம் அனைத்தும் சோசலீச ஜெனநாயகம் கொண்ட இலங்கை திருநாட்டிற்கு .இவர்கள் அனைவரும் திட்டமிட்ட திருடர்களே …..மக்கள் விழித்தெழும் காலம் வரும் அதுவரைக்கும் போராடுங்கள்….போராடுங்கள்……போராடுங்கள்…போராடிக்கொண்டே இருங்கள்…உங்கள் போராட்டம் ஆயுதமா…அகிம்சையா என்பதல்ல பிரச்சனை ..நீங்கள் போராடியே ஆகவேண்டும் என்பதுதான் உண்மையான பிரச்சனை ….உங்கள் தேவைகள் தொலைத்தொடர்பு மட்டுமல்ல .தொலைத்து விட்ட தேவைகளுக்காகவும் ….ப. வரதன் (காஸ்ரோ)