இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு இந்தியாவின் இனக்கொலையாளி நன்றி தெரிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்தமைக்காக இந்தியப் பிரதமரும் குஜராத் இனப்படுகொலையைத் தலைமை தாங்கியவருமான நரேந்திர மோடி இலங்கையில் வன்னிப் படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்தார். இரண்டு அரச பயங்கரவாதிகளும் சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் சந்தித்துக்கொண்ட போதே மோடி நன்றி தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத்துறைப் அக்பருதீன் தனது ரிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நிறுவனமான பிரிடிஷ் அமெரிக்கன் டொபாக்கோஸ் இன் இந்தியத் துணை நிறுவனமான இன்டியன் அமெரிக்கன் டொபாக்கோஸ் இலங்கையில் 300 மில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
இலங்கை அரசால் இலவசமக வழங்கப்பட்ட நிலத்தில் ஆடம்பர விடுதிகளையும் ஐந்து நட்சத்திர ஹோட்டேல் ஒன்றையும் கட்டுவதற்கான களியாட்ட நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. தவிர, இலங்கையின் வரலாற்றுப் புகழ் மிக்க சிலேவ் ஐலலண்ட் பகுதியில் இலங்கை மக்களின் 90 ஏக்கர் நிலம் டாட்டா நிறுவனத்திற்கு ராஜபக்சவினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களுக்குத் மரணதண்டனை விதித்து அவர்களை விடுதலை செய்யும் நாடகத்தை இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்தியதன் பின்னணியில் இப் பல்தேசியக் கொள்ளை நடைபெறுகிறது.
‘இனப்படுகொலையில் விதைத்ததை அறுவடை செய்யும் இந்திய நிறுவனத்தின் 300 மில்லியன் டொலர்கள்’ இணைப்ப்ய் சுட்டிக்காட்டுவது ‘ஐ.டீ.சீ’ நிறுவனத்தை. ‘ஐ’ என்பது ‘இந்தியன்’ என வரலாற்றையும் குறிக்கோற்களையும் மறைக்கும் ஏமாற்றுவித்தையாக 1970-இல் பெயர் மாற்றப்பட்டது. ‘ஐ’ என்பது ‘இம்பீரியல்’ (அதாவது சாம்ராச்சியம் என மொழிபெயரும்) என்றே பிரித்தானிய இந்தியாவில் காலுண்றி இயங்கியது. அதாவது ‘ஐ.டீ.சீ’ உண்மையில் ‘இம்பீரியல் டொபாக்கோ கொம்பனி’. இனியொரு அமெரிக்கா பேலுள்ள மோகத்தால் ஒருசிறு பிழைவிட்டுள்ளது.
இங்கே தற்கால தமிழர் அவலத்துடன் சம்பந்தப்பட்ட மேலும் பல விடௌஅங்களும் பொதிந்துள்ளன :-
உலகப் புகையிலை (டொபாக்கோ) வியாபாரம் அடிமை வியாபாரத்துடன் தொடர்புடையதாக அமெரிக்கா எனப்பெயரிடப்பட்டு ஐரோப்பியரால் நேரடியாக மாபெரும் இனப்படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்ட கண்டத்தின் சூறையாடலில் இருந்து உதயமாகிறது. ஆபிரிக்க அடிமை வியாபாரத்தை புகையிலை வியாபாரத்துடன் தொடர்பு படுவதின் இருநூற்றாண்டுகள் கழிந்தும் நிறைவுறும் தாக்கமே அண்மையில் ஸ்கொட்லாந்தின் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுவதன் பின்னால் நடந்த பல சதிகளுக்கும் அடித்தளம் – க்ளாஸ்கோ நகரத்ஹ்டின் புகையிலை பிரபுக்களின் (டொபாக்கோ பரன்ஸ்) தாக்கம் இப்பொழுதும் கூட ஸ்கொட்லாந்தின் அதிகாரவர்க்கத்தின் போக்குகளை நிர்ணயிப்பது. அவ்வளவுக்கு சக்தி வாய்ந்த பலராலும் அறியப்படாத மறைமுக வியாபரமே புகையிலை. யாழ்ப்பாணச் சமுகத்திலும் தமிழ் ஈழத்தின் பல பகுதிகளிலும், தமிழ் நாட்டிலும் என உற்று நோக்கினால் எப்படி புகையிலைப் பயிச்செய்கை விவசாயத்துறையை அழித்தது என்பது தெளிவாகும். ஈழத்தில் போரின் அழிவுகளால் இது தெளிவான ஒரு விடயமாகமல் இருக்கலாம்.
நவீன பங்குசந்தை வியாபார ஏமாற்று முறைமைகளில் உலகெங்கும் காலனித்துவத்தின் அதுவும் முக்கியமாக பிரித்தானியாவின் காலனித்துவ வரலாற்றின் அடிச்சுவடாக புகையிலை வியாபாரம் காலூண்றியிருப்பது மட்டுமல்லாமல், மறைமுக நகர்வுகளில் கைதேர்ந்த காரணங்களின் நிமிர்த்தம், வேறுபல கள்ள வியாபாரங்களுக்கும் விஸ்தரிக்கின்றது. பெருமளவு மறைந்து போனதும், பிரித்தானிய உலக ஆதிக்கத்தின் அடித்தளமுமான கிழக்கு இந்திய கொம்பனி-இன் ஓபியம் மற்றும் தேயிலை போன்ற போதைப்பொருள் வியாபாரத்தின் கள்ளச் சொத்துக்களும் ஓரளவிற்கு தற்போதைய சர்வதேச புகையிலை வியாபரத்தினால் உள்வாங்கப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் அமைப்பை டோனி ப்லேயார் எனும் பாதகன் 1997-இல் ஸ்கொட்லாந்தின் எடின்பர் நகரில் வைத்து அதனை நவீனமுறையான முதளாலித்துவ கொள்கைகளை பரப்பும் நோக்கில் ‘கொமன்வெல்த் பிஸினஸ் கவுன்ஸில்’ (அண்மையில் லைக்கா நிறுவனம் ‘கோல்ட் ஸ்பொன்ஸ்ர்’-ஆக இந்த உப அமைப்பையே ஆதரிக்க முற்பட்டு சர்ச்சைகளில் சிக்கியது) எனும் மாபாதக உப-அமைப்பை நிறுவ வழிவகை செய்தான். அதற்கு கனிமவள சூறையாடல் துறையை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு முகமாக தென்னாபிரிக்காவின் தற்போதைய உப-ஜனாதிபதி சிரில் ராமபோஸாவை முன்னிறுத்தி இன்னொரு இயக்குனனாக செயற்பட்டது கயார்ன்ஸ் பிரபு (Lord Cairns) — ஸ்கொட்லாந்திலிருந்து அயர்லாந்தை பிரித்தானியாவுக்காக நில-அடிமைப்படுத்தும் தொடர் வேலைகளில் ஈடுபடுத்தும் அடிவருடிக் குடும்பத்தின் இன்றைய தலைவன் தான் கயார்ன்ஸ் பிரபு.
கயார்ன்ஸ் பிரபு தலைமை தாங்குவது தான் ‘பிரிடிஷ் அமெரிக்கன் டொபாக்கோஸ்’. அடிமை வியாபரத்தால் எழுந்த இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரத்தில் இருந்து இயங்கும் ‘இம்பீரியல் டொபாக்கோ கொம்பனி’ ஒரு முக்கிய துறைமுக நகரத்தையே உருவாக்கும் வேலை காரணமாக ‘பிரிடிஷ் அமெரிக்கன் டொபாக்கோஸ்’ -இல் இருந்து வேறாக வளர்ந்து பின்னர் கல்கத்தாவிலும் காலுன்றியது. பிரிஸ்டல் நகரிலும் பெயர் திரிபுற்று ‘ஐ.டீ.சீ’ ஒரு பன்முகப்பட்ட குழுமமாக பங்கு சந்தைகளில் ‘இம்பீரியல் டொபாக்கோ க்றூப்’ எனும் குழுமமாக மாறியது. எனினும் இக்குழுமத்தின் பிரதான வியாபாரம் புகையிலையே – ‘பிரிடிஷ் அமெரிக்கன் டொபாக்கோஸ்’ அடுத்ததாக இரண்டாவது பெரிய உலக புகையிரத வியாபாரம்!
கல்கத்தாவில் ‘இந்தியன்’ எனப் பேய்க்காட்டி இயங்கும் ‘ஐ.டீ.சீ’ நிறுவனமும் பன்முகப்படுத்தப்பட்டது. அதனாலேயே உல்லாசவிடுதிகள் கட்டும் வியாபாரம் எனும் சாட்டில் கொழும்பில் காலூன்றுகிறது. கட்டடக் கலையில் ‘ஐ.டீ.சீ’ தட்டுத்தடுமாறி எதோதெல்லாம் செய்யவும் பார்க்கிறது. ஆனால் இந்திய ‘ஐ.டீ.சீ’ நிறுவனத்தின் எண்பது சதவீதத்துக்கும் மேலான வருமான இந்திய மக்களின் சுவாசப்பைகளை எரித்துத் தள்ளும் தரங்குறைந்த (கலப்படப் பொருளாகவும் இருக்கவேண்டும்!) புகையிலையே. ஆனால் இனியொரு எழுதியுள்ளது போல் காலப்போக்கோடு ‘பிரிடிஷ் அமெரிக்கன் டொபாக்கோஸ்’-க்கு முப்பது சதவீத பங்கு இந்திய ‘ஐ.டீ.சீ’ நிறுவனத்தில் உண்டு. அதனை நிர்வாகிக்க ஏர்ல் லேர்வில் (Earl Lerwill) எனும் பிரித்தானிய சொறியனும் தற்போதைய ‘ஐ.டீ.சீ’ இயக்குனனாக இயங்குகிறான். இப்பங்கினை, முழுநிறுவனத்தையும் திரும்பவும் பிரித்தானியா ‘பிரிடிஷ் அமெரிக்கன் டொபாக்கோஸ்’-இனூடு தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரும் பிரயத்தனங்கள் சில காலங்களாக அண்மையில் தொடர்கின்றன. பிரித்தானிய பிரதமன் டேவிட் கமரூன் 2013 நவம்பர் மாதம் ஸ்ரீலங்காவில் கொமன்வெல்த் மாநாட்டுக்கு போகும் வழியில் இந்தியாவில் மன்மோகன்சிங்-ஐ சந்திக்கப் போனான். ஆனால் எவ்வளவோ முக்கிய விடயங்கள் ஸ்ரீலன்காவில் இருந்தும் ஒரு நாளை கல்கத்தாவிலே மர்மமான முறையில் கழித்தான். அங்கே பிரித்தானிய வரலாற்றுப் புகழ் பாடுவது போல் பாசாங்கு செய்தான். மேற்குவங்காளத்தின் சக்திமிக்க முதலமைச்சி மமதா பனர்ஜி-யை அவசர அவசரமாக சந்தித்ததும் கல்கத்தாவின் ஹூக்லி நதிக்கரையை லண்டன் தேம்ஸ் நதிக்கரையைப் போல் கட்டடங்களால் திணிப்பது பற்றிக் கதைத்து ‘ஐ.டீ.சீ’ சம்பந்தமான கதையாக இருக்குமோ என ஆகலும் குறைந்த தடங்களையே விட்டு ஸ்ரீலங்காவின் தமிழர் இனப்படுகொலையில் தனது ஏமாற்றுவித்தை அத்தியாயத்தை எழுதப் புறப்பட்டான்.
ஒருவருடங் கழித்து கொழும்பில் காலனித்துவக் கால ஆபிரிக்க அடிமைகளை சிறைபிடித்த ‘ஸ்லேவ் ஐலன்ட்’ (அடிமைத் தீவு எனப் பொருள்படும்) அமைந்த பேரா குளத்தின் கடலை நோக்கிய கரையில் ‘ஐ.டீ.சீ’ கோத்தபாயவின் திட்டத்தின் கீழ் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டு கட்டக்கலை என்று பேய்க்காட்டுகிறது.
ஏற்கனவே கொழும்பு தற்போது பங்குசந்தையில் முதலீட்டளவில் இரண்டாம் இடத்தில் உள்ள ‘சிலோன் டுபாக்கோ கொம்பனி’ ஸ்ரீலங்கா ஆதிக்க வர்க்கத்தோடு பின்னிப் பிணந்த நிறுவனம். அது மட்டுமல்ல கொமன்வெல்த் அமைப்பு நாடுகள் பூராக அமைக்கப்பட்டது போல ‘சிலோன் டுபாக்கோ கொம்பனி’ முழுக்க முழுக்க ‘பிரிடிஷ் அமெரிக்கன் டொபாக்கோஸ்’-இன் ஒரு உப நிறுவனம்.
*இப் பதிவில் நற்காரியங்கள் எவையேனுமிருப்பின், வாழ்க்கை நிலைத்ததொன்றல்ல என உணர்த்தும் ஆயுதப் போராட்டச் சுழல் ஒன்றிலும் புகைபிடித்தல் தவிக்கப் படவேண்டியது என அற்புதமான சிந்தனையை பெருமளவில் கைப்பிடித்து, அடிமையாய் வாழ்வதிலிருந்து விடுபடும் முயற்சிக்காக மாண்ட மற்றும் ஊனமுற்ற சகோதர சகோதரிகளுக்கு அர்ப்பணிப்போம்*
http://www.imperial-tobacco.co.uk/
http://www.itcportal.com/about-itc/profile/history-and-evolution.aspx
http://www.takingontobacco.org/letter/ctc/web.html
தொடர்புடையதும் மைத்திரிபால சிறிசேன சொறியனின் அந்திரத்தை உணர்த்துவதுமான ஒரு செய்தி:-
கொமன்வெல்த் மாநாட்டுக்கு ஒருமாதம் முன்னராக நிகழ்ந்த சம்பவம். மைத்திரிபால எல்லா சுகாதார அமைச்சன்களும் ஆடவேண்டிய நாடகமாக புகைப்பிடிப்பதை தவிர்க்கும் ஒரு செயற்திட்டத்தை முன் வைத்தானாம். ‘சிலோன் டுபாக்கோ கொம்பனி’ அவனை அணுகி உலகம் பூராக நடப்பது போல் தமது எதிப்பை வெளிப்படுத்தியதாம். கதையில் குற்றச்சாட்டு நன்கே அளந்து முன்வைக்கப்படுகிறது. அதாவது எப்படி பிரித்தானியாவும் கொமென்வெல்த் அமைப்பும் ராஜபக்சவினால் இனப்படுகொலைக்கு உடந்தையானதுக்கும் அப்பால் வளைத்து எடுக்கப் படுகின்றது என்பதை அவதானிக்கவும். அரிச்சந்திரன் வேடம் பூணும் மைத்திபால சிறிசேன ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை? அதே சொறிப் பத்திரிக்கைக் கதையில் ‘பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோஸ்’-இன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்ற கருத்து திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகிறது.
http://www.ft.lk/2013/09/26/maithripalas-outburst-shocks-sri-lanka-inc-ctc-denies/
2013 செப்டம்பர் மாதமளவில் சுகாதார அமைச்சன் மைத்திரிபால சிரிசேன-வுக்கு ‘சிலோன் டுபாக்கோ கொம்பனி’ லஞ்சம் கொடுக்க முற்பட்டதாம்.