ஐப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட இரு அணு குண்டுகளிலும் அகப்பட்டு அவற்றின் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து தப்பிப் பிழைத்தவராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே நபர் மரணமடைந்துவிட்டார்.
சுடோமா யமாகுசி என்ற அந்த நபருக்கு வயது 93. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியன்று இவர் அலுவல் காரணமாக ஹிரோஷிமாவுக்கு சென்றிருந்தார்.
அன்று தான் அங்கே முதல் அணு குண்டு வீசப்பட்டது. இதில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வீச்சால் பெருமளவு தீக்காயங்களுக்கு இலக்கான யாமாகுச்சி தனது வீடு இருக்கும் நாகசாகிக்கு அடுத்த நாள் திரும்பினார்.
ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நாகசாகியில் அணு குண்டு வீசப்பட்டபோது அவர் அங்கிருந்தார். இந்த குண்டு வீச்சில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.