மத்தியகுழு உறுப்பினர்கள் நால்வரும் இப்போது இலங்கையில் தான் இருக்கிறோம். கோண்டாவிலில் பிரபாகரன் என்னைச் சந்தித்த மறுநாளே நாம் நால்வரும் இன்னும் சிலருடன் மாங்குளம் முகாமிற்குச் செல்கிறோம். பிரபாகரன் இப்போது என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. நாங்கள் பல தடவை மத்தியகுழு ஒன்று கூடல்களை நடத்துகிறோம்.
இது வரையில் மத்திய குழுக் கூட்டங்கள் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகவே நடத்தப்படும். முதல் தடவையாக நமது வழிமுறை தவறானது என்று கருத்துக் குறித்து விவாதிப்பதற்காக ஒரு இறுக்கமான சூழலில் ஒன்றுகூடல் நடை பெறுகிறது. யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. எதோ ஒன்றை இழந்துவிட்டது போன்ற சோகமான உரையாடல்கள் இடம்பெற்றன.
ஒவ்வொரு தடவையும் நான் முன்வைத்த முன் மொழிவுகள் குறித்தே பேசுகிறோம். குறிப்பாக மத்திய குழு கலைக்கப்ப்பட்டு செயற்குழு ஒன்றிடம் இயக்கத்தின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை உறுதியாக வாதட வேண்டிய தேவை எழுகிறது. பின்னர் இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி மக்கள் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும், தேடப்படுகின்ற உறுப்பினர்கள் அனைவரும் மார்க்சியக் கல்வி கற்றுக்கொள்வதற்காக தமிழ் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதையும், அரசியல் பத்திரிகை ஒன்றை வெளியிட வேண்டும் என்பதையும் மத்திய குழுவில், நீண்ட விவாதங்களின் பின்னர் பிரபாகரனின் உடன்பாட்டுடன் முடிவெடுக்கிறோம்.
பிரபாகரன் முழுமனதுடனும் கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை. ஆரம்பத்திலிருந்து பிரபாகரனோடு முழுமையாக ஒத்துழைத்த என்மீது பிரபாகரன் வெறுப்படைந்திருந்தது போலத் தென்பட்டது. எனக்குப் பின்பு எம்மோடு மத்திய குழுவிலிருந்த நாகராஜாவும் எனது கோரிக்கைகளுக்காகக் குரல்கொடுக்கிறார். இவையெல்லாம் பிரபாகரனை மேலும் அதிர்ப்த்திக்கு உள்ளாக்குகின்றது
இவ்வாறான வெறுப்புணர்வுடனும் வெறுமையுடனும் தான் செயற்குழு நியமனக் கூட்டம் நடத்தப்படுவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
பதினேழு வயதில் இராணுவம் சார்ந்த நடவடிக்கைகளில் வெற்றிபெற்றிருந்த பிரபாகரன் தூய இராணுவ நடவடிக்கைகள் மட்டும் தான் வெற்றிக்கான ஒரே வழி என்பதை உறுதியாக நம்பியிருந்தார்.அதனை விமர்சிக்கின்ற யாரும் போராட்டத்தைக் சிதைவடையச் செய்வதாக எண்ணினார். நீண்ட விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள் ஊடாக தவிர்க்கவியாமல் எமது கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்கிறார்.
செயற்குழுவை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகவே ஆரம்பித்துவிட்டோம். அதுவும் உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து செயற்குழு ஒன்றை ஒரு மனதான நியமன அடிப்படையில் உருவாக்குவது என்று முடிவு செய்கிறோம். யாழ்ப்பாண மாவட்டமே சந்திப்பிற்கு வசதியானதாக அமையும் என்ற அடிப்படையில் அங்கு எமது செயற்குழுவை உருவாக்குவதற்கான கூட்டத்தை ஒழுங்கு செய்வதாக முடிவெடுக்கிறோம்.
நீர்வேலியில் வாய்காற்தரவை என்ற இடத்தில் எமது ஆதரவாளர்கள் புதிய உறுப்பினர்கள் போன்றோர், அங்குள்ள ஒரு மைதானத்தில் கிரிககட் விளையாடுவதாகவும் அதே வேளை அதற்கு அருகில் நாங்கள் செயற்குழுவை உருவாக்குவதற்கான கூட்டம் நடத்துவதாகவும் தீர்மானிக்கிறோம்.
எமக்கு ஆதரவு வழங்கியவர்கள், தொடர்பாளர்கள், புதிய உறுப்பினர்கள் போன்றோர் அங்கு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டனர்.உளவாளிகளும் காவல் துறையினரும் சுதந்திரமாக நடமாடிய அந்தக் காலத்தில் யாரும் சந்தேகப் படாமல் இருப்பதற்காகவே துடுப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். மறுபுறத்தில் அதே மைதானத்தின் பின் பகுதியில் நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய செயற் குழுவை உருவாக்குவதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.
வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ஈழத் தமிழ்ப்பேசும் மக்களின் நாளாந்த வாழ்வில் முக்கிய பங்காகிவிடப் போகின்ற விடுதலை இயக்கம் ஒன்றின் வரலாற்றில் திரும்பல் புள்ளியாய் வாய்க்கால் தரவை மாறிவிடப் போகின்றது என்பதை அறியாமல் சில வயோதிபர்கள் துடுப்பாட்டத்தை இரசித்தபடி நடந்து சென்றார்கள். அவசர அவசரமாக சைக்கிளில் சென்ற மனிதர்களுக்குக் கூட நாம் ஒன்று கூடியிருப்பது அவர்களின் எதிர்காலத்தைக் குறித்துப் பேசுவதற்காகத் தான் என்பதை அறிந்திருக்க நியாயமில்லை.
மத்திய குழு உறுப்பினர்களான எம்மோடு,சாந்தன், சுந்தரம், மனோ, மாத்தையா, குமரப்பா, நந்தன், குமணன் மாதி,ராகவன் போன்ற உள்ளிட்ட அனைவரும் அங்கு சமூகம் தந்திருந்தனர்.
பண்ணைகள், முகாம்கள், குறிப்பிடத் தக்களவு பணம், கணிசமான தொடர்புகள், உறுப்பினர்கள் என்று அவ்வேளையில் கோடுட்டுக் காட்டத்தக்க இராணுவ அணியாக வளர்ந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் மாற்றம் ஒன்றிற்கு உள்ளாவதைப் சில உறுப்பினர்கள் ஆர்வத்துடன் அவதானித்தனர். சிலருக்கு அனாவசியமான குறுக்கீடாகத் தெரிந்திருக்கும். எது எவ்வாறாயினும் நூறு கருத்துக்கள் மோதின.
வாக்கு அடிப்படையில் அன்றி ஒரு மனதான நியமன அடிப்படையிலேயே செயற்குழுவைத் தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. நபர்கள் குறித்து நீண்ட விவாதங்கள் ஏற்படுகிறது. செயற்குழு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் சென்று வெகுஜன வேலைகளை முன்னெடுகும் திறமை வாய்ந்தவர்களாக அமைய வேண்டும் என்பதை நாம் முன்னமே தீர்மானித்திருந்தோம். சட்டத்தின் வரம்புகளுக்குள் குற்றவாளிகளாகக் காணப்படாதவர்கள், தேடப்படாதவர்கள் போன்றோரை செயற்குழுவில் இணைத்துக் கொள்வதற்காகப் பிரேரிக்கிறோம். பலரின் பெயர்கள் முன் மொழியபடுகின்றன. பிரதேசங்களுக்கும் பிரதிநிதிகள் போன்ற அமைப்புக்கள் வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. செயற்குழு பன்முகத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்ற நோக்கம் அனைவருக்கும் இருந்தது. மட்டக்கள்ப்பைச் சேர்ந்த டானியல் மட்டக்களப்பிற்கு ஒரு பிரதிநிதிதுவம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்.
அதே போல் திருகோணம்லைப் பிரதிநிதிதுவத்திற்காக ஆசீர் நியமிக்கப்படுகிறார். இவர்கள் தவிர, சாந்தன், அன்டன் சிவகுமாரன், குமணன் ஆகியோர் செயற்குழுவிற்குத் தெரிவாகினர்.
செயற்குழுவிற்குத் தெரிவான சிலர் இன்னமும் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ்வதால் இவர்கள் குறித்த வேறு விபரங்களை இச்சந்தர்ப்பத்தில் வெளியிடுவது பொருத்தமானதாகக் கருதவில்லை.
பிரபாகரன் இல்லாத தலைமை ஒன்று முதல் தடவையாக விடுதலைப் புலிகளை வழி நடத்தும் நிலை உருவாகிறது. அனைவரும் புதிய நம்பிகையுடனேயே இந்தத் தெரிவினை மேற்கொண்டோம். மிக நீண்ட நேரத்தை செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதிலேயே செலவழித்து முடித்திருந்தோம். துடுப்பாட்டம் பாதி நேரத்தைக் கடந்து உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது. சூரியன் கூட உச்சியைக் கடந்து சற்றுக் கீழே இறங்கியிருந்தது நிழலுக்கான நம்பிக்கையை தந்தது.
செயற்குழு உருவாகிவிட்டது. இனி நாம் எம்மை மக்களுக்கு அறிமுகப்படுதும் நுளை வாயிலாக சஞ்சிகை ஒன்றை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். நான் முன்வைத்த முன்மொழிவுகளிலும் சஞ்சிகை அல்லது பத்திரிகை குறித்துக் குறிப்பிடப்படிருந்தது. செயற்குழு உருவாக்கத்தின் பின்னர் பத்திரிகை வெளியிடுவது குறித்து அனைவரும் புதிய உற்சாகத்துடன் பேசிக்கொள்கிறோம். பத்திரிகையின் பெயர் “உணர்வு” என்று ஏறத்தாள ஒரு மனதாக முடிவெடுக்கப்படுகிறது.
அதே வேளை தேடப்படுகிறவர்கள் அனைவரும் இந்தியா சென்று அங்கு மார்க்சியக் கல்வியையும் பயிற்சியையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
மத்திய குழுவிலிருந்த நாகராஜா, நான், பிரபாகரன்,மற்றும் ராகவன், செல்லக்கிளி ஆகிய அனைவருமே அரசியற் கல்விக்காக தமிழ் நாடு செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டம் முடிவடைந்து அனைவரும் பண்ணைகளுக்கும் இருப்பிடங்களுக்கும் செல்கின்றனர். செயற்குழு தெரிவாகிய இரண்டாவது நாள் நான் எனது சகோதரி வீட்டிற்குச் சென்று ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு இந்தியாவிற்குச் செல்வது குறித்தும் தகவல் தெரிவித்துவிட்டு வரலாம் என எண்ணினேன். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கு சென்று ஒரு நாள் தங்கியிருந்து விட்டு மறுபடி வரும் போது நிலைமை தலை கீழாக மாறியிருந்தது.
செயற்குழு தெரிவான பின்னர் கலாபதி மனோ மாஸ்டருடனும் பிரபாகனுடம் பேசியிருக்கிறார்.
மனோமாஸ்டரிடம் பேசிய கலாபதி இது வெறுமனே பிரபாகரனிற்கு எதிரான காழ்ப்புணர்வைத் தீர்த்துக்கொள்வதற்கான செயற்பாடே தவிர, மக்கள் அமைப்புகளை உருவாக்கி புதிய திசைவழியில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான செயற்குழு அல்ல என்று கூறிருக்கிறார். பிரபாகரனிடம் பேசிய கலாபதி இந்தச் செயற்குழு எல்லாம் பிரபாகரனை வெளியேற்றுவதற்கான சதிட்டம் என்றும் இதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
இதே வேளை நந்தனுக்கும் மனோ மாஸ்டருக்கும் இடையேயான விவாதம் மறுபடி எழுந்த வேளையில் நாங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டோம் இப்போது பிரபாகரன் வெளீயேறப்பட்டுவிட்டார் என மனோ மாஸ்டரிடம் கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பாக, மத்திய குழுவில் நாங்கள் விவாதம் நடத்த நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருந்த வேளைகளில் பிரபாகரனுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனங்களைச் சுந்தரம் போன்றோர் பண்ணைகளில் இருந்த ஏனைய உறுப்பினர்களுடன் மிகவும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர்.
இவை அனைத்தும் ஒருங்கு சேர, செயற்குழு என்பதே பிரபாகரனை அன்னியப்படுத்துவதற்கான சதித்திட்டம் என்ற ஒரு சிலரின் கருத்துக்கள் உள்ளரங்கிற்கு வருகிறது.
இவ்வாறு செயற்குழுவிற்கு எதிரான அபிப்பிராயம் குறித்த சில உறுப்பினர்களிடையே விவாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக சுந்தரம் தலைமையில் ஒரு குழுவும் பிரபாகரனுக்கு ஆதரவாக ஒரு குழுவும் உருவாகிறது. நான் எனது சகோதரி வீட்டிலிருந்து திரும்பி வந்த வேளையில் சுந்தரம் குழுவும் பிரபாகரன் குழுவும் தமக்குத் தெரிந்த ஆயுதங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியினர் மறப்பகுதியினரைச் சந்தித்தால் கொலை செய்துவிடுகின்ற கோரம் இரண்டு பகுதியினரிடமும் காணப்பட்டது.
பிரபாகரன் குழுவினர் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த ஆயுதங்களையும் சுந்தரம் குழுவினர் முத்தையன்கட்டுப் பகுதியிலிருந்த ஆயுதங்களையு கையகப்படுத்தியிருந்தனர். பிரபாகரன் தனக்குத் தெரிந்த பண்ணைகளில் சென்று தனது அனுமதியின்றி ஆயுதங்களை யாருக்கும் கொடுக்கவேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார். இதையறிந்த செல்லக்கிளி சுந்தரத்திடம் பிரபாகரன் ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களைக் கொலைசெய்யத் திட்டமிடுவதாக நடந்தவற்றை மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார். இதன் விளைவாக சுந்தரம் குழுவினர் முத்தயன்கட்டுப் பகுதியில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி அங்கு பிரபாகரன் குழுவினர் வந்தால் திருப்பித் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற முடிபுடன் இருந்தனர். அனைவரையும் விரக்தியும் வெறுப்பும் வெறுமையும் ஆட்கொண்டிருந்தது.
முன்னர் பிரபாகரனின் சர்வாதிகாரத்திற்கு எதிராக மட்டுமன்றி ஒரு மக்கள் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்துதை ஆதரித்தவரும் ஏற்கனவே இடது அரசியலில் குறித்தளவு ஆற்றல் பெற்றவருமான மனோ மாஸ்டர் பிரபாகரன் சார்பு நிலை எடுத்திருந்தது பலரை விரக்திக்கு உள்ளாக்கியிருந்தது. அவர் தான் எமக்கு எல்லாம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். இவரின் இந்தத் திடீர் முடிபு இன்றைக்கு வரைக்கும் என்னால் மட்டுமல்ல பலராலும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது.
மனோவின் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன? நந்தனுக்கும் மனோவிற்கும் தொடர்ச்சியாக நிலவிவந்த முரண்பாடா, சுந்தரம் அரசியலை அன்றிப் பிரபாகரனை முதன்மைப்படுத்தி முன்னெடுத்த தனிநபர் தாக்குதல்களா என்று பல வினாக்கள் எனது வாழ்நாள் முழுவதும் விடையின்றியே தொக்குநிற்கின்றது.
மனோ மாஸ்டரைத் தொடர்ந்தே மாத்தையாவும் பிரபாகரனின் பக்கத்தை நியாயப்படுத்த ஆரம்பித்தனர்.
நான் முதலில் முத்தையன்கட்டுப் பண்ணையை நோக்கிச் செல்கிறேன். மக்கள் அமைப்புகளூடாக ஆயுதப் போராட்டத்தை உருவாகுகின்ற அரசியல் வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் என்று கூறுகின்ற சுந்தரம் குழுவினரிடமும் கூட ஆயுதங்களுக்காகச் சண்டை போட்டுக்கொள்கின்ற குழுவாதப் போக்கைக் காணக்கூடியதாக இருந்தது.
மக்கள் சார்ந்த அரசியல் வழிமுறை என்பது மிகக் கடினமான ஆனால் ஒரே சாத்தியமான வழிமுறை என்பதை உலகத்தில் வெற்றிபெற்ற போராட்டங்கள் எல்லாம் ஒரு முறை இருமுறை அல்ல ஒவ்வொரு தடவையும் தீர்க்கமான அனுபவங்களை எம்முன்னால் விட்டுச் சென்றிருக்கின்றன. பல ஆயிரம் வருடங்கள் சமூகத்தின் அழுக்குப் படர்ந்த சிந்தனை முறை எம் ஒவ்வொருவரையும் ஆட்கொள்வது உண்மைதான். ஆனால் அவை முன்னிலைப்படுத்தப்படும் போது தான் அழிவுகள் நிறைந்த முடிபுகளை நோக்கி வழிநடத்தப்படுகிறோம்.
சுந்தரம் குழுவினரிடம் ஆயுதங்களுக்காகச் சண்டை போட்டுக்கொள்வது தவறு என விவாதிக்கிறேன். பலர் உடன்படுகிறார்கள்.சுந்தரம் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்ற தனது நியாயத்தைச் சொல்கிறார்.நாகராஜா,சாந்தன்,குமணன்,நந்தன் போன்றோரும் ஆயுதங்கள் உடனடி அவசியமில்லை நமது உடனடி வேலை மக்கள் அமைப்பை உருவாக்குவதே என்று என்னுடன் சேர்ந்து உறுதியாக வாதிடுகின்றனர்.
முதலில் சுந்தரம் இதற்கு உடன்படவில்லை. ஒரு வகையில் தவிர்கவியலாத நிலையிலும், பல உறுப்பினர்களின் உந்துதலுக்கு உள்ளான நிலையிலும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு சுந்தரத்துடனிருந்த அனைத்து உறுப்பினர்களும் உடன்படுகிறோம்.
இப்போது பிரபாகரன் குழுவைச் சார்ந்த எம்மை முழுமையான எதிரியாகக் கணக்கிடாத ஒருவரைத் தெரிவு செய்து ஆயுதங்களை ஒப்படைப்பதாகத் தீர்மானிக்கிறோம்.
பிளவு ஏற்பட்ட வேளையில் பிரபாகரன் குழுவோடு இணைந்து கொண்டவர்களில் ராகவனும் ஒருவர். ராகவனுடன் பகைமுரண்பாடற்று உரையாடக் கூடிய சூழல் ஒன்று இருந்தது.
ஆக, நான் ராகவனை அழைத்து அவரூடாக ஆயுதங்கள், ஏனைய உரித்துக்கள், எஞ்சியிருந்த பணம் போன்ற அனைத்தையுமே பிரபாகரன் சார்ந்த குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றேன். சுந்தரத்தின் சலிப்பான பதிலுக்கு மத்தியில் எல்லோரும் ஒரே முடிவாக இதனை ஏற்றுக்கொள்கிறோம்.
இன்னும் வரும்..
குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி இனியொருவிலும் சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.
முன்னையவை…
பாகம் 18 | பாகம் 17 | பாகம்16 | பாகம்15 | பாகம்14 |
பாகம்13 | பாகம்12 | பாகம்11 | பாகம்10 | பாகம்9 |
பாகம்8 | பாகம்7 | பாகம்6 | பாகம்5 | பாகம்4 |
பாகம்3 | பாகம்2 | பாகம்1 |
துடுப்பாட்டம் அற்புதமான தேர்வு.
“11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்க 11 முட்டாள்கள் ஆடுவது” “…………..ஒவ்வொரு தடவையும் நான் முன்வைத்த முன் மொழிவுகள் குறித்தே பேசுகிறோம்…….” உங்கள் நெறிப்படுத்தலில் ஆட்டம் நன்றாக களைகட்டியதோ? மக்களை துடுப்பாட்ட பந்தாக அன்றே முடிவு செய்துவிட்டீர்களா? முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தை அன்றைய நாயகர்கள் யாராவது நெறிப்படுத்தினார்களா?
Is there any sense in your comment? ..He is just telling what was happened in earlier days. …not trying to justify anything.
Iyar!
I have couple of questions. 1) Since you and Nagarajah were in same thinking group how come both of you started different movements. (NLFT & Peravai) 2) How come Kumarapa & Anton were joined Pirab later on.
ஐயரே 20ம் பாகத்துக்குச் செல்ல முன்னர் சில விடயங்களைத் தெளிவுபடுத்துவீர்களா?
துரையப்பா கொலை தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் எவருடையதும் அறிவுறுத்தலின் படி மேற்கொள்ளப்பட்டதா அல்லது பிரபா குழுவினர் தனித்து மேற்கொண்டதா? (அக் கொலையின்பின் எம்.பி. யோகேஸ்வரன் வீட்டிற்குச் சென்ற) பிரபாகரனுக்கு தான் தேனீர் கொடுத்ததாகவும் அதனால் தன்னைப் புலிகள் ஏதும் செய்யமாட்டார்களென்றும் கொல்லப்பட்ட முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரன் கூறியது இதுகுறிந்த கேள்வியைத் தோற்றுவிக்கிறது. வரலாற்றுச் சம்பவமான இதில் நிட்டசமான உண்மை வெளிப்படவேண்டும். உங்களிடம் தகவல் இருந்தால் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். துரையப்பா கொலைக்கு தலைமை தாங்கியது யார்? செட்டிக்கு என்ன நடந்தது?
/மனோவின் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன? நந்தனுக்கும் மனோவிற்கும் தொடர்ச்சியாக நிலவிவந்த முரண்பாடா, சுந்தரம் அரசியலை அன்றிப் பிரபாகரனை முதன்மைப்படுத்தி முன்னெடுத்த தனிநபர் தாக்குதல்களா என்று பல வினாக்கள் எனது வாழ்நாள் முழுவதும் விடையின்றியே தொக்குநிற்கின்றது./–திரு.ஐயர் அவர்கள்.
இதற்கு இதுதான் விளக்கம்!.– /பல ஆயிரம் வருடங்கள் சமூகத்தின் அழுக்குப் படர்ந்த சிந்தனை முறை எம் ஒவ்வொருவரையும் ஆட்கொள்வது உண்மைதான். ஆனால் அவை முன்னிலைப்படுத்தப்படும் போது தான் அழிவுகள் நிறைந்த முடிபுகளை நோக்கி வழிநடத்தப்படுகிறோம்./.
பல ஆயிரம் ஆண்டுகள் படிந்துவிட்ட அழுக்குகளை அகற்ற,அது இல்லை என்று மறுப்பதால் அகற்றிவிட முடியாது!.அதை ஏற்றுக் கொண்டு,”சக மனிதனை,”சமூக மூக்கு கண்ணாடியுடன்” அணுக வேண்டும்!.
உலகின் பல ஆயுதப் போராட்டங்களில்,(பிடல் காஸ்ட்ரோ,செகுவேரா,இந்தோனேஷியாவின் “ஆட்ஷே” விடுதலை இயக்கத்தின் தலைவர்கள்….) போன்றோர்கள்,முதலில்,சட்டத்திற்கு புரம்பான வழக்குகளில்,சிக்கியிருந்தவர்களே!.அதனுடேனேயே போராடி அவர்கள் கரை சேர்ந்த பிறகு,அந்த வழக்கு கள் பதக்கங்களாக மாறின.ஆனல் அங்கு,”பல அயிரம் ஆண்டுகளாக படிந்த அழுக்குகள் இல்லை”!.”காந்திய தோற்றம்” போல் வேஷம் போட்டு,பலவிதமான “ஆபாச வேலைகள் செய்துக்கொண்டு”,இளைஞர்களை உசுப்பு ஏற்றிவிட்டு,அவர்கள் வழக்குகளில் சிக்கியவுடன் அதை வைத்து அவர்களை,பதவிகளுக்கு வரவிடாமல் “குசும்பு வேலைகள்” செய்து,தாங்கள் மட்டுமே “பதவி சுகங்களை அடைய வேண்டு” என்ற நல்லெண்ணத்துடன்??,”வழக்குகளிலிருந்து வெளியேறவிடாமல் “பெட்டிஷம்” எழுடி,போட்டுகொடுப்பதே இத்தகைய நடவடிக்கைகள்!-/சட்டத்தின் வரம்புகளுக்குள் குற்றவாளிகளாகக் காணப்படாதவர்கள், தேடப்படாதவர்கள் போன்றோரை செயற்குழுவில் இணைத்துக் கொள்வதற்காகப் பிரேரிக்கிறோம். பலரின் பெயர்கள் முன் மொழியபடுகின்றன. பிரதேசங்களுக்கும் பிரதிநிதிகள் போன்ற அமைப்புக்கள் வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.பிரபாகரன் இல்லாத தலைமை ஒன்று முதல் தடவையாக விடுதலைப் புலிகளை வழி நடத்தும் நிலை உருவாகிறது. அனைவரும் புதிய நம்பிகையுடனேயே இந்தத் தெரிவினை மேற்கொண்டோம். /- இதை ஆராய்ந்தீர்களா?
என்ன பிறப்போ? அட நீ
ஏன் தமிழன் எனும் பெயரை
உன்னுடலுக் கிட்டாயோ?
உண்மையில் நீ தமிழனோடா?
என்னருமைத் தமிழனெனில்
எழு! பகைவன் உடல்பொழியும்
செந்நதியில் ஆடி எழு!
சிவந்த விழி கொண்டெழடா!
கைநெடுவேற் படை எங்கே?
கணை எங்கே? வில்லெங்கே?
மை நெடுவான் வரையெழுந்த
தோள் எங்கே? மறமெங்கே?
ஐயிரண்டு திசை மோதி
அகன்ற தமிழ் மார்பெங்கே?
அஞ்சிப் பகைவர் அதிர்ந்து நிலைகுலைய
நெஞ்சில் கனல்தாங்கி நின்றானை
வெஞ்சிறையில்
பொன்னாய்ப் பழுத்த புகழுக்குரியானை
எந்நாள்யாம் காண்போம் இனி?
பாரில் தமிழர் படைவெல்லப் போராடி
போரில் கொடுமை பொழுதெல்லாம்
நேரில்
விருப்பாய் மகிழ்ந்தேற்ற வீரர் மறைந்தார்!
நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!
ஆற்றல் மிகுபேச்சால் ஈழத்திலே சூறைக்
காற்றை எழுப்பியவன் கண்துயின்றான்!
நாற்றிசையும்
பொங்கு தமிழ்முழக்கம் செய்த களத்தின்போர்ச்
சங்கை நொறுக்கியதோ சாவு
எத்தனை நாளாயிற்றூ இனிய தமிழ் கேட்டு தூயாவன் பொங்கிப் பாயும் தங்கள் தமிழ்க் கவிதை எங்கள் நென்சில் எரிமலை ஏற்படுத்துகிறது.இனி தமிழ்க் கவிதை இனியொரு தளத்திற்கு இதுவும் பெருமை.
//பத்திரிகையின் பெயர் “உணர்வு” என்று ஏறத்தாள ஒரு மனதாக முடிவெடுக்கப்படுகிறது.//
ஏறத்தாள
என்பது சமனிலையை வெளிப்படுத்தும் அடைச் சொல்லாகவே பயன்படுத்தப்படும்.இங்கு மட்டும் ஏன் உணர்வற்று,ஒரு மனதாக உபயோகிக்கப்பட்டது?
எல்லாம் பார்த்த பின் படித்த பின் கேட்டறிந்த பின், என்னுள் உதித்த ஒரு கேள்வி. அதாவது உரிமை கேட்டு போராடுவோரை, தனியாராயினும் அல்லது குழுக்களாயினும் அவர்களை பயங்கரவாதிகள் எனவும் அவர்கள் போராட்டங்களை பயங்கரவாதம் எனவும் சித்தரிக்கிறார்கள்.
பயங்கரவாதி அல்லது பயங்கரவாதம் இல்லாமல் உலகம் இயங்கமுடியுமா?
சீனா ஒரு சோசலிசநாடு, இந்தியா ஒரு குடியரசுநாடு, அமெரிக்கா ஒரு சனநாயகநாடு.
இலங்கை ஒரு சனநாயக சோசலிச குடியரசுநாடு. அதனால்தானோ என்னவோ உலக பயங்கரவாதம் என்ற பெயரில் இலங்கைக்குள்ளே போன இந்தியனும் சீனனும் அமெரிக்கனும் இன்னமும் கிண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த பயங்கரவாதப் பூதத்தைக்காட்டித்தான் அமெரிக்கா எண்ணெய்க்காக ஈராக்கிக்குள்ளேயும் தாதுப்பொருளுக்காக ஆப்கானித்தானுக்குள்ளேயும் போய் நிற்கிறார்கள். இப்படியொரு பயங்கரவாதச்செயல் இல்லையெனில் ஆட்சியாளர்கள் தாங்களே உருவாக்குவார்கள். உதாரணத்துக்கு சமீபத்தில் தமிழ்நாட்டில் புகையிரதபாதை தகர்ப்பு நாடகம்.
Can the world survive without terrorism?
சீனா ஒரு சோசலிச நாடல்ல, இந்தியா ஒரு குடியரசு நாடல்ல, அமெரிக்கா ஒரு சனநாயக நாடல்ல.
சமகால நடத்தைகளே சான்று
இது விளங்கினால் சனநாயக சோசலிச குடியரசு நாடல்லாத இலங்கையை ஏன் ஆதரித்தார்கள் என விளங்கும்.
இந்த் பரந்த பூவுலகில்,
முடிந்தவரை அனைவரையும் ,
பகையாக்கிக் கொண்டு,
ந்ண்பர்களே இல்லாமல்,
பல துரோகம் செய் து,
விரோதிகளை வளர்த்து,
நவீன யுக அரசியல் புரியாமல்,
உணர்ச்சியே முடிவாய்,
துன்பியல் வரலாற்றுப்
பிழைகள் செய்து,
இனப்பலி இட்டனரே!
ஐயர் அவர்களுக்கு,
எவ்வளவு காலம் நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் செயலாற்றினீர்கள்?
உங்களுடைய திட்டங்களின் அடிப்படையில் ஏன் நீங்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பித்துச் செயற்படவில்லை? அதற்கான தடைகள் எதுவாகா இருந்தன? இவ்வளவு காலமும் மெளனமாக இருந்ததன் காரணம் என்ன? இனிமேல் தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.? இவ்வளவு தெளிவாகப் பேசும் நீங்கள் தமிழர்களின் எதிர் காலத்திற்கு ஏதாவது செய்ய வாய்ப்புக்கள் உள்ளனவா? நீங்கள் இருக்கும் ஐரோப்பாவில் தொடங்கப்பட்டிருக்கும் நாடுகடந்த தமிழ் ஈழத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
Dear Iyer,
I got to know that Kandeepan, the eldest son of A.Amirthalingam was with Pirapakaran when Alfred Duraiyappah was murdered. He had given a car drive to them after the assasination. Amir’s driver told police that he had erased finger prints from the revolver and took care of it. He spilled the beans when tortured by Bastiampillay. Was Kandeepan an active member of LTTE? He was wanted by police and escaped to England. Please confirm.
Ananthan
It is a great Kavithai of Thuyavan. Thank you for your contribution in the name of the comments to Iyar’s article.
Here, Iyar was little smart that is why he handed over the weapons and the money to Prabhakaran. Because none of those,except Prabhakaran could lead the group at this point. Those who were talking about the central committee and the administrative committee, already lost their aim and then they had moved out of track of their journey.I think that Iyar had not been with them for long time. Let’s see what he says in his next article.
அய்யரின் மறுபக்கமாக……….. இதைப் படிக்கலாம்.
‘போராட்டப் பாதையில்’ …. புலிகளின் ஆரம்பகால அறிக்கை(http://maruaaivu.wordpress.com/)
80களில் புலிகளிலிருந்த 93 பேருக்கு பிரபா தரப்பால் வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரத்திலிருந்து….
எமது இயக்கத்தில் ஒரு சதிச் செயல் நடைபெற்று முறியடிக்கப்பட்டாலும் ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டே விட்டது. இதை நீக்கும் முகமாக எம்மியக்கத் தோழர்கள் அயராதுழைக்கின்றார்கள்.பதவி ஆசை, தெளிவற்ற அரசியல் ஞானம், கட்டுப்பாட்டுக்கு அமையாத தன்மை, முதுகில் குத்தும் முயற்சிகள், இயக்கத் தோழர்களை குழப்பல், தனிமனிதனைச் சர்வாதிகாரியாகக் காட்டல், இயக்க நடவடிக்கைகளைப் பழித்தல், பயங்கரவாதிகள் என வர்ணித்தல் என்பன சதிச் செயல்களில் அமைந்திருந்தன. தொடர்ந்தும் பழிவாங்கக் காத்திருக்கும்தன்மை, சந்தேகங்கள், நம்பிக்கையின்மை, தவறான அணுகுமுறையினால் ஏற்பட்ட பிழையான நடவடிக்கைகள், பிழையான விளக்கங்களால் ஏற்ப்பட்ட கொந்தளிப்புக்கள் சதிச் செயலின் உச்சக்கட்டமாக அமைந்தது. அமைப்பு மாற்றம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சில கலைப்புவாதிகள், இயக்கத்தை அடக்கும் சந்தர்ப்பவாதத்தை மேற்கொண்டனர். அதாவது வெகுசன அமைப்புடன் கூடிய இராணுவத்தை கட்டியெழுப்புவதை, புதிய அமைப்பாவதை இந்தியாவில் நின்ற கரிகாலனும், சதிகாரர்களால் வர்ணிக்கப்பட்ட கரிகாலனின் விசுவாசிகளும் தடைசெய்வார்கள் என்ற பிரச்சாரம்: இயக்க ஆரம்ப காலங்களில் இயக்கத்தில் நடைபெற்ற களையெடுப்புக்களுக்கு கரிகாலனே காரணம் என்ற பிரச்சாரமும்,இயக்கத் தோழர்கள் மத்தியில் விசமத்தனமாக பரப்பப்பட்டது.
இலங்கைத்தீவிலே எமது பண்ணைகளுக்கும் புதிய அங்கத்தவர்களுக்கும் பொறுப்பாக இருந்த ஐயா, குமணன் போன்ற பொறுப்பான உறுப்பினர்கள் பொறுப்பற்ற முறையில் தனிநபர் தாக்குதலை (கரிகாலன்) தொடுத்தும், இயக்கத்தைப் பற்றிய தவறான எண்ணங்களையும் வளர்த்தும் வந்தனர். இவர்கள் கரிகாலன் போன்றோர் இந்தியாவிலிருந்து வரமுன்னர் ஓர் சதிக்குழுவைக் கூட்டி புலி அமைப்பை சேர்த்து அழித்துவிட்டு, மக்கள் இயக்கம் என்று கூறி இலங்கைத் தீவில் பெரும்பாலும் இடதுசாரிகளின் வழியில் சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்கத் தலைப்பட்டனர். எமது கடந்தகால இராணுவ நடவடிக்கைகள் தேவையற்றது, பயனற்றது, இதனால் மக்களுக்கு தீமையே விளைந்தது, வேறு பயனில்லை என்றனர். கடந்தகால நிகழ்வுகள் பச்சையான பயங்கரவாதம் என்று வர்ணித்தனர். எமது குழு மார்வியா கும்பல், கார்லோஸ் கோஷ்டி எனக் கூறப்பட்டது. ஆனால் இப்படி விமர்சித்தவர்களுக்கு மார்வியா, கார்லோஸ் போன்றவர்களைப்பற்றி தெரியாது. புலியமைப்பு தேவையில்லை எனவும் நாங்கள் மக்கள் அமைப்பாக மாறி புலி அமைப்பை இல்லமல் செய்து விட வேண்டுமென்றும் துப்பாக்கிகள் ஏன்? வெறும் மக்கள் இயக்கமாக மாறினால் மக்களே சமாளித்துக் கொள்ளுவார்கள் என்றும் கூறினர். கரிகாலனின் விசுவாசிகள் என அவர்களால் கூறப்பட்டவர்கள் மீது தனிநபர் விமர்சனம் காரசாரமாக நடந்தது. அத்தனையும் அவர்களின் முதுகுக்குப் பின்னால் நிகழ்ந்தது. இயக்கத்தின் சில சம்பவங்களை ஆங்காங்கே பொறுக்கியெடுத்து இச்சம்பவங்களின் வரலாற்றுப் பின்னணியையும் சூழ்நிலைகளையும் ஆராயவோ, முன்னெடுத்து வைக்கவோ செய்யாது அச்சம்பவங்கள் இயக்கத் தோழர்கள் மத்தியில் வெறுமனே தூக்கிப் போடப்பட்டது. இதே அங்கத்தவர்களைக் குழப்பி அவர்களிடையே சந்தேகத்தை வளர்க்கத் தொடங்கியது. இச் செயலின் ஊடே வல்வெட்டித்துறை வாதம் முன்வைக்கப்பட்டு வல்வெட்டித்துறை மக்களையே இழிந்துரைக்கும் அளவிற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கரிகாலனும் அவர்போன்றோரும் மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்வதை அனுமதிக்க மாட்டார்கள்எனவும் ; வெறும் இராணுவ வெறிபிடித்த பயங்கரவாதக் குழுவாகவே இருக்க விரும்புவார்கள் எனவும் அடித்துக் கூறப்பட்டது. இயக்கத்தின் போக்கை விமாசித்தவர்கள், இயக்கத்தின் முக்கிய பகுதிகளில் இருந்தார்கள். இவர்கள் மத்திய குழுவின் மீது குற்றம் சுமத்தாமல் கரிகாலனே முழுப்பொறுப்புக்கு உரியவர் என்று எடுத்துக் கூறினர். இதுவரை காலமும் எம் இயக்கம் மத்திய குழுவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது. தனிமனிதனின் ஆளுமைக்குட்பட்டு அல்ல. ஆனால் கரிகாலன் அங்கத்தவர் மத்தில் செல்வாக்கு பெற்றிருந்தார் என்பது உண்மை. ஆனால் தனி மனித வழிபாடு செய்யப்படவில்லை. இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர் என்பதாலும் இயக்க செயற்பாடுகளில் முன்நின்று செயற்பட்டதாலும் இயக்கத்தின் சகல அம்சங்களிலும் தலையைக் கொடுத்து வேலை செய்ததாலும் அயராத உழைப்பாலும் இயக்கத் தோழர்கள் மத்தியில் தனிச் செல்வாக்குப் பெற்றது இயல்பானதே. சம உரிமை கொண்ட மத்தியகுழு அங்கத்தினர்கள் பலர் செயலாற்றல் அற்றவர்களாகவும் இக்கட்டான நிலையில் பிரச்சனை தோன்றினால் அதைச் சமாளிக்கும் ஆற்றலோ உடனடித் தீர்வைக் கொடுக்கும் தன்மையோ இல்லாதிருந்தனர். இதனால் எதற்கெடுத்தாலும் கரிகாலனையே அணுகினர். இயக்க ஆரம்ப வளர்ச்சி இத்தன்மையுடன் கூடியதால் ஏனைய மத்திய குழு உறுப்பினர்கள் இந்நிலையைத் தொடர வழிவிட்டதால் கரிகாலனின் அனேக முடிவுகள் இயக்கமுடிவுகளாயிற்று. இந்நிலைக்கு இயக்க மத்திய குழுவின் செயலற்ற தன்மைகளே காரணம். இயக்கச் சுற்றாடலில் அமைப்புக்களின் தன்மையே கரிகாலனின் தீர்மானங்களை இயக்கத் தீர்மானங்கள் ஆக்கியதை மறந்து அவர்கள் கரிகாலனை அருவருக்கத்தக்க சர்வாதிகாரியாக இயக்கத் தோழர்களிடம் படம்பிடித்துக் காட்டினர். இவர்களை நம்பிய புதிய அங்கத்தவர்களிடமும் இயக்கத்தில் உள்ள விசுவாசமான அங்கத்தவர்களிடமும் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
சுய விமர்சனம் என்பது கடந்தகால வரலாற்றை ஆராயக் கூடிய முறையில் ஆராய்ந்து அதன் மூலம் இயக்கத்தை மேலும் உறுதியாக வளர்த்தெடுக்கும், இலட்சியத்தைப் பெற்றிடும் வழிமுறைகளைக் கூர்மைப்படுத்தவுமே உதவ வேண்டுமே ஒழிய இயக்கத்தில் குழப்பங்களையோ,அழிவுகளையோ ஏற்படுத்துவதற்காக அல்ல. அத்துடன் சுயவிமர்சனம் என்ற போர்வையில் வழமையான கட்டுப்பாடுகளை மீறி எல்லோரும் கன்னா பின்னா என்று கதைக்கவும் அனுமதித்தார்கள். அவ்வாறு கதைக்க அங்கத்தவர்களுக்கு பொறுப்பில் இருந்த ஐயா, குமணன் போன்றோர் விளக்கம் அளிக்க முடியாமல் அவர்களின் கதைகளை மேலும் சிக்கலாக்கி குழப்ப நிலைமையை மோசமாக்கி விட்டார்கள். இக்குழப்ப நிலையின் உச்சக் கட்டத்தில் நாம் ஒன்று கூடுதல் தவிர்க்க முடியாததாயிற்று. இதனால் பொதுச்சபை கூட்டப்பட்டது. சதிக்குழுவினர் தமது வெறுமையான மக்கள் அமைப்புத்திட்டத்திற்கு முரண்படக் கூடியவர்களை ஒதுக்கித்தள்ள திட்டமிட்டார்கள். கூடப் போகும் பொதுச்சபையில் தம் கருத்துடன் இணையக் கூடியவர்களையும் ஆதரவாளர்களையும் அமர்த்த இருந்தனர். மத்திய குழுவைக் கலைப்பதன் மூலம் அதிலுள்ளவர்களை அதிகாரமற்றவர்கள் ஆக்கி, அதற்குள்ளே ஐயா, சிவனடியார் இருந்தாலும் கரிகாலன் போன்றோரையே ஒதுக்கக் குறி பார்க்கப்பட்டது. அதன்படி ஐயா, சிவனடியார் அதிகாரம் பின்னணியில் இருக்கத் தக்க வகையில் புதிய குழு அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன்படி யாவரும் இலங்கைத்தீவு வந்தடைந்ததும் மத்திய குழு கூடி சில போலியான சுயவிமர்சனம் செய்து தன்னைத் தானே கலைத்துக் கொண்டது. பொதுக்குழு கூடி ஐயா போன்றோரின் சிபார்சில் புதிய தற்காலிக செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. இதைக் கரிகாலனோ உண்மையான இயக்கப் பற்றுடைய தோழர்களோ எவ்வித சந்தேகக் கண் கொண்டும் நோக்காது அவர்களின் உள்நோக்கங்களை அறியாது சம்மதித்தனர். இதன்பின் இவர்களுடைய துர்ப்பிரசார விடயங்களும் இயக்கத்தைப் பற்றிய துரோகத்தனமான விமர்சனங்களும் உண்மையான இயக்கத் தோழர்களுக்கு எட்டியது. சதிகளில் பங்குபற்றிய புதிய அங்கத்தினர்கள் கரிகாலனைப் பற்றிக் கூறப்பட்ட வாதங்கள் பிழையானதெனக் கரிகாலனின் சொல்லிலும் செயலிலும் கண்டு கொண்டனர். இயக்கத்தை பிழையான வழியிலிருந்து உண்மையான பாதையில் இட்டுச் செல்லப்படுவதாக கருதிய புதிய அங்கத்தினர் நாளடைவில் தாம் தவறு செய்து விட்டதை உணர்ந்தனர். சதிகாரரின் ஒரு பக்க நியாயங்களை கேட்டு ஏமாந்ததை உணர்ந்தனர். இந்நிலையில் நிலைமை வேறுவிதமாக கொந்தளிக்க தொடங்கியது. புதிய அமைப்பினர் ஆயுதங்களை நிராகரித்து இராணுவ முழுமையாக சிதைக்க ஆரம்பித்ததைக் கண்டு கொண்டனர். அவர்கள் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி பிறகு அதன் மூலம் ஒரு இராணுவ அமைப்பை உருவாக்கப் போவதாகவும் இப்போதுள்ள அமைப்பை முற்றாக கலைக்கப் போவதாகவும் கூறத் தலைப்பட்டனர்.
இது அங்கத்தினர்களிடையே சோர்வையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் புதிய அமைப்பின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் சதிகாரர்காளால் கூறப்பட்ட பொய்யான விமர்சனங்களை அம்பலப்படுத்த நேருக்கு நேர் எல்லா அங்கத்தினர்களும் தெரிந்து கொள்ள மீண்டும் பொதுச்சபை கூட்டுமாறும் வலியுறுத்தினர். கரிகாலனும் தன்னைப்பற்றிய பிழையான குற்றச்சாட்டுகளுக்கும் புதிய அமைப்பின் தற்காலிக செயற்குழுவிடம் நீதி கேட்டார். குற்றவாளியெனில் தண்டிக்கும் படியும் இல்லையெனில் இதற்கு பொறுப்பானவர்களை அத்தவறான பிரச்சாரங்களை அங்கத்தினர் மத்தியில் இருந்து நீக்கும் படியும் கோரினார். ஆனால் சதிகாரர் பொதுச்சபையில் சந்திக்க மறுத்து விட்டனர்.
தலைக்கு மேலே வெள்ளம் ஏறிய நிலையைக் கண்ட சதிகாரர் இயக்க இரகசிய இடங்களில் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்ற முனைந்தனர். அவ்வாறு சில இடங்களில் இருந்து தம் புதிய அதிகாரங்களைப் பயன்படுத்தி அப்பாவி அங்கத்தினரை ஏமாற்றி ஆயுதங்களை கைப்பற்றினர். இக்குட்டு அம்பலமாகவே எல்லோர் மத்தியிலும் குற்றவாளிகளாயினர். இதனால் இயக்கத்திலிருந்து வெளியேறி தப்புவது ஒரே வழியெனக் கண்டனர். கைப்பற்றிய ஆயுதங்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கும் புலி அமைப்பை அழிக்கவிருந்த அவர்கள் இயக்க உடைமைகளை எடுத்துச் செல்ல முடியாத நிலைக்கும் ஆளாகினர். இந்நிலையில் தான் தாம் கைப்பற்றிய உடைமைகளை இயக்கத்திடம் தாராள நோக்குடனும் பெருந்தன்மையுடனும் விட்டுச் செல்வதாக சொல்லிக் கொண்டனர். எமது வெளி அமைப்பின் ஆரம்ப வேலைத்திட்டங்களைக் கைப்பற்ற முனைந்து தோல்வியடைந்தனர். கடந்த எட்டு மாத காலமாக இயக்கத்துக்குள் இருந்து கொண்டு பல நாசவேலைகளை செய்து வெளியேறி விட்ட பதின் மூவரில் எழுவர் புதியவர்களாகும். இப்புதியவர்கள் ஆரம்ப காலம் தொட்டே ஐயா, குமணன் போன்றோரிடமே தொடர்பு கொண்டிருந்தார்கள். மேலும் அவர்களின் மூளை சதிகாரரினால் நன்கு கழுவப்பட்டு பொய்கள் திணிக்கப்பட்டள்ளது. அப்புதிய விலகிச் சென்ற அங்கத்தினர்கள் தம் நிலையை உணரும் காலம் அதிக தூரத்தில் இல்லை. விலகிச் சென்றவர்களின் விலகலை நாம் அங்கீகரிக்கவில்லை. அவர்களில்லாமலே அவர்களைப்பற்றிய விசாரணை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. குற்றவாளிகள் தவிர்ந்த பிழையான வழியில் இட்டுச் செல்லப்பட்டவர்கள் மீண்டும் வந்து இயக்க நிபந்தனையுடன் அனுமதிப்போம். மேலும் இச்சிக்கல்களால் சிலர் மிகவும் மனமுடைந்தார்கள். அவர்களை மாற்றி உற்சாகத்துடன் வேலைசெய்யும் பொறுப்பு எம்மிடம் உண்டு.
மேலும் பொறுப்பு வாய்ந்த இயக்கத் தோழர்கள் விலகிச் சென்றவர்களை திரும்பவும் இணைக்க முயற்சி செய்தார்கள். இதற்கு நாம் ஆதரவு அளித்ததோடு சமாதானக்காரரிடமும் பொதுக்குழு கூட்டப்பட வேண்டிய அவசியத்தையும் அதை விட வேறு நிபந்தனைகள் இடப்போவதில்லை யென்றும் கூறினோம். மத்திய குழுவை கலைத்து பொதுக்குழுவை கூட்ட மறுத்து முதற்கூடிய பொதுக்குழுவின் படி தெரிவு செய்யப்பட்ட தற்காலிக செயற்குழுவை அங்கீகரித்து தொடர்ந்து செயலாற்ற உடன்பட்டால் இணைவதாக கூறினர் சதிகாரர். நாம் அத்தற்காலிக செயற்குழுவை அங்கீகரித்து பொதுக்குழு கூடவேண்டிய அவசியத்தை வற்புறுத்தினோம். சில விடயங்களில் அவர்களுக்கு விட்டுக்கொடுத்து நடந்தும் கூட ஒற்றுமை ஏற்பட முடியாமல் போய் விட்டது.
இவ்வளவு குழப்பம் ஏற்றட்ட பிறகும் பொதுக்குழு சரியான விளக்கம் அளிக்காது இயங்க முடியாதென்பதே எமது வாதம். இதனால் இணைப்பை ஏற்படத்த முன் நின்ற இயக்க அங்கத்தினர் கலைப்பு வாதிகளின் சதிச் செயல்களையும் குதர்க்க வாதங்களையும் உள் நோக்கங்களையும் கண்டு கொண்டனர். இதனால் அவர்கள் ஒற்றுமை முயற்சியைக் கைவிட்டனர். எரிமலை வெடித்தது. வழிந்து, ஓய்ந்து உள்ளது.
எரிமலை வெடிப்பின் காரணங்களை அறிந்து, ஆராய்ந்து தோன்றியதற்கான நிலைமைகளை தெரிந்து கொள்ள முயல்கிறோம். இம் முயற்சி இயக்கத்தை உறுதியாக வளர்த்தெடுக்கவும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாது தவிர்க்கவும் வாய்ப்பாக இருக்கும். மொத்தத்தில் எமது தோழர்களின் அரசியல் சித்தாந்த வறுமையே எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. இதனால் அரசியல் தெளிவுடன் அனைவரும் செயல்பட்டு இராணுவ அமைப்புடன் இணைந்து கொள்வார்கள் எனின் உண்மையான விடுதலை வீரர்களாக மாறுவார்கள். இத்தயாரிப்புக்களில் ஈடுபடவும்; செயற்படவும் ;சீரமைக்கவும் ;மத்திய குழுவிற்காக தற்காலிக செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெகுவிரைவில் மத்தியகுழு செயற்படத் தொடங்கும்.
தற்காலிக செயற்குழு
(செயற்குழு சார்பில்)
குறிப்பு –
கரிகாலன் – பிரபாகரன்
சிவனடியார் – சுந்தரம்
ஐயர் திறமையாகத்தான் கதை எளுதியுள்ளார்.
ஐயரே 20ம் பாகத்துக்குச் செல்ல முன்னர் சில விடயங்களைத் தெளிவுபடுத்துவீர்களா?கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் 1970-களில் தமிழ்
மாணவர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.
சிங்கள அரசின் மீது கோபம் கொண்டிருந்த இளைஞர்கள் மாணவர் பேரவையை நாடிச்
சென்று இணைந்து கொண்டனர்.அதே வகையைப் பின்பற்றி சத்தியசீலன் தொடங்கிய தமிழ்
மாணவர் பேரவையில் (நவம்பர் 1970) பிரபாகரனும் இணைந்து கொண்டார். இப்பேரவையில்
தீவிரவாதக் குழு ஒன்றும் இருந்தது. அக் குழுவில் தங்கதுரை, சின்ன ஜோதி
போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் பெரியவர்கள்.
தங்கதுரையும் பிரபாகரனும் ஒரே ஊரானதால் இருவருக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது.
பிரபாகரனுக்குத் துப்பாக்கிச் சுடவும், தொடர்ந்து கைக்குண்டுகள் செய்யவும்
பயிற்சி அளித்தார்கள். அவர்களாக சொல்லிக் கொடுத்தது பாதி என்றால், இவராக
அறிந்து கொண்டதே அதிகம். இந்த நேரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி
நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் “தரப்படுத்துதல்’ என்கிற சட்டத்தைக்
கொண்டுவந்து மாணவர்களை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.
இந்தத் தரப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, கல்வி
அமைச்சரும் தமிழருமான பதியுத்தீன் முகமதுவையே அவர் பயன்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும்போது பதியுத்தீன் முகமது,
“மருத்துவம் பொறியியல் துறையில் மாணவர்கள் பயிலும்போது, தமிழ் மாணவர்களே அதிக
எண்ணிக்கையில் இடம்பிடிக்கின்றனர். சிங்கள மாணவர்கள் அவர்களைக் காட்டிலும்
குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு – தமிழ் மாணவர்களுக்கு, தமிழ்
ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் அளிப்பதே காரணம்’ என்று உண்மைக்கு மாறான தகவல்
ஒன்றை கூறி அவையில் பதிவு செய்தார். இதன் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வுகள்
ரத்தானது. இதனால் கோபமுற்ற மாணவர்கள் தமிழ்த் தலைவர்களை நெருக்கினர். தமிழ்த்
தலைவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவைச் சந்தித்து முறையிட்டபோது, “நீங்கள்
கல்வி அமைச்சரிடம் முறையிட வேண்டிய விஷயம்’ என்றார். கல்வி அமைச்சரான
பதியுத்தீன் முகமது, “இது அமைச்சரவை முடிவு; இதில் நான் வெறும் கருவி
மட்டுமே; எனக்கு பணிக்கப்பட்டதைச் செய்தேன்; இதில் மாற்றம் செய்யும் அதிகாரம்
எதுவும் எனக்கு இல்லை’ என்றார்.
இவையெல்லாம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததும், மாணவர்
பேரவையினர் இதற்குத் தக்க எதிர்ப்பைக் காட்ட விழைந்தனர். அரசுப் பேருந்து
ஒன்றை கொளுத்துவது என்று முடிவானது. இதில் பங்கு பெறப் பலரும்
போட்டியிட்டனர். கிட்டத்தட்ட இருபது பேர். அதில் நான்கு பேர் தெரிவு
செய்யப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவர். மற்றவர்களைவிடப் பிரபாகரன் வயதில்
சிறியவர் என்றாலும், அப்படியொருவர் தேவை என்று அவரைத் தேர்வு செய்தார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் மூவர் குறிப்பிட்ட நேரம் நெருங்க நெருங்க
பயந்து ஓடிவிட்டனர். நான்காவது நபரான பிரபாகரன் எப்படியும் பேருந்தைக்
கொளுத்தியே தீர்வது என்று, அன்று இரவு பணி முடிந்து, பணிமனையில் வண்டியை
விட்டுவிட்டுப் போகும் வரைக் காத்திருந்து, பேருந்தை எண்ணெய் ஊற்றி
கொளுத்தினார். பேரவையினர் பிரபாகரனின் வீரச்செயலைப் பாராட்டி, அணைத்துக்
கொண்டனர்.அப்பாவிகளை சிங்களவர்கள் கொல்கிறார்கள்.
நாங்கள் ஏன் இவர்களைத் திருப்பித் தாக்கக்கூடாது என்ற எண்ணம் இளைஞர்களாகிய
எங்களுக்கு ஏற்பட்டது. கர்ணன், வீமன், விவேகானந்தர் ஆகியோரை எங்களுக்குப்
பிடித்தது. “இளைஞர் அணி’ ஒன்றை உருவாக்கினோம். எங்களது வரலாற்றுப் பின்னணியே
எங்களை ஆயுதம் தரிக்கச் சொல்லிற்று. அப்போது எனக்கு வயது பதினாலுதான்’ என்று
ஒரு பேட்டியில் சிறுவயதைப் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார்.
பின்னர் ஒரு நாள் அதிகாலை பிரபாகரனைத் தேடி போலீஸ் வந்தது. கதவைத் திறந்தால்
பெருமளவில் போலீஸ். வீட்டைச் சோதனையிட்டும் பிரபாகரன் கிடைக்கவில்லை.
அப்போதுதான் பெற்றோருக்கு பிரபாகரனுக்குத் தீவிரவாத நண்பர்களுடன் தொடர்பு
ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. பிரபாகரன் வீட்டுக்கு வருவதை
நிறுத்திக்கொண்டார். ஆனாலும் பிரபாகரன் வீட்டைச் சோதனையிட போலீசார் அடிக்கடி
வந்தனர். பிரபாகரன் என நினைத்து அவரது அண்ணன் மனோகரனை அழைத்துச் சென்ற
சம்பவமும் நடந்தது. நீண்டநாள்கள் பிரபாகரன் வீட்டுக்கு வராததால் கவலையுற்ற
தந்தை வேலுப்பிள்ளை, பிரபாகரன் தங்கியிருந்த தீவிரவாதக் குழுவினரைக்
கண்டுபிடித்து அவரை அழைத்து வந்தார். போலீஸ் நடவடிக்கை தொடரவும் பிரபாகரன்
அங்கிருந்து கிளம்பினார். மாணவர் பேரவையின் தீவிரவாத செயல்களை ஒடுக்க
உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வலைவீச்சில் பேரவைத் தலைவரான
சத்தியசீலன் சிக்கினார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளான அவரைத் தொடர்ந்து ஸ்ரீ
சபாரத்தினம் கைதானார். பிரபாகரனைத் தேடுவதில் போலீஸôர் தீவிரமாக இருந்தனர்.
87: முதலாவது கொரில்லாத் தாக்குதல்!
தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா
தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும்
அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து
கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார்.
அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார். பிரபாகரனுக்கு சென்னையில்
இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை
உள்ளிட்டோர், “இலங்கைக்கு இப்போது செல்வதோ – குழுவாக வேலை செய்வதோ தற்சமயம்
சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை’ என்று தடுத்தனர்.
குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம்
தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில்
தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு
செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச்
சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் பிரபாகரனைத் தனது குழுவில் சேர்ந்து
கொள்ளும்படி வற்புறுத்தினார். இதுகுறித்து தங்கதுரையிடம் தெரிவித்ததும்,
“செட்டி நல்லவர் அல்ல. அவருக்கு விடுதலைப் போராட்டம் மட்டுமே நோக்கம் அல்ல;
அவரை நம்பிப் போக வேண்டாம்’ என்று அவர் தடுத்தார்.
இயங்க வேண்டும் என்ற வெறி, பிரபாகரனை “செட்டியை’த் தொடர வைத்தது. யாழ்ப்பாணம்
கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டி என்கிற தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார்.
இந்தக் குழுவின் ஆரம்பகால நோக்கம் அரசு ஆதரவாளர்களையும், போலீசுக்குத் தகவல்
கொடுப்பவர்களையும் தண்டிப்பதுதான். இந்தச் சமயத்தில் தமிழ் தேசிய அரசியல்
பார்வைக்கு இவர்களை முழுமையாகத் திருப்பியவர் தமிழரசுக் கட்சியிலிருந்த
ஏ.இராஜரத்தினம்தான். அவரால் உற்சாகப்படுத்தப்பட்டு (1972) ஏற்பட்ட
இயக்கத்துக்கு “தமிழ்ப் புதுப்புலிகள்’ (பஹம்ண்ப் சங்ஜ் பண்ஞ்ங்ழ்ள்-பசப)
என்று பெயர் வைத்துத் தொடங்கினர். செட்டி அவ்வப்போது கைது செய்யப்படுவதும்
விடுதலையாவதுமாக இருந்தார்.
“செட்டி’யை நம்பிப் போக வேண்டாம் என்று சொன்ன தங்கதுரையிடம், “என்னை அவர்
வழிக்குக் கொண்டு செல்ல முடியாது – முடிந்தால் அவரைத் திருத்துவேன்’ என்று
சொன்ன பிரபாகரனால் அவரைத் திருத்த முடியவில்லை என்பது உண்மையாகிப் போனது.
இயக்க முடிவுகளுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்க வேண்டியதாயிற்று. பின்னர்,
பிரபாகரன் குழுவினர் குட்டிமணி, தங்கதுரையுடன் மீண்டும் இணைந்தனர்.
அதுவும் சிறிது காலம்தான். அதன்பின்னர் தமிழ்ப் புதுப்புலிகள் இயக்கத்துக்கு
பிரபாகரன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதுகுறித்து பிரபாகரன் தெரிவித்ததாவது:
“”பின் 1976-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று
இயக்கம் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட
காலத்திலிருந்தே உறுதியும்-அர்ப்பணிப்பும்-பேரார்வமும் கொண்ட இளம்
புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக்கொண்டது. நகர்ப்புற கெரில்லா
அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற
லட்சியத்தில் தோய்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் விரைவிலேயே தமிழ் மக்களின்
புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக்
கோட்பாட்டை வரித்துக்கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாக தன்னை
நிறுவிக்கொண்டது” என்பதாகும். (1985-ஆம் ஆண்டின் வெளியீடான “விடுதலைப்
புலிகளின் போராட்ட வரலாறு’).
அதே வெளியீடு தங்களின் போர்முறையையும் தெளிவாகக் கூறுகிறது: “”ஆயுதப்
போராட்டமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொரில்லாப் போர்முறையானது நமக்கு மிகவும்
பொருத்தமான போர் வடிவமாகும். நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழ் மக்கள்,
சிங்கள இனவாத அரசின் பெரிய ராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட
கொரில்லா யுத்தப் பாதையே பொருத்தமானது என்பதால், இந்த யுத்தியைக்
கையாண்டோம்” என்றும் கூறுகிறது. தொடர்ந்து அவர்களின் தாக்குதல் குறித்து
அவ்வெளியீடு கூறுகையில், “”அரசின் ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து
அவர்களது மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் குலைத்துவிட்ட எமது கொரில்லாப்
போர் முறையானது. ஸ்ரீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங்காணச் செய்திருப்பதுடன்
தமிழர் பிரச்னையை சர்வதேசப்படுத்தவும் உதவியுள்ளது” என்று தெரிவிக்கிறது.
இவ்வியக்கத்தின் நோக்கம் என்னவென்பது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம்
விவரிக்கையில், “”கொரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச்
செய்து, அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையைப்
பெரும்பாலான மக்கள் போராக விரிவாக்குவதே எமது நோக்கமாகும்” என்றும்
தெளிவுபடுத்துகிறது. அவ்வெளியீட்டில் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் குறித்தும்,
அதன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பது
என்னவென்றால், “”எமது இயக்கத்தின் ஆரம்பாகால நடவடிக்கைகள் போலீஸ்
உளவுப்படையைச் சிதைப்பதை மையமாகக் கொண்டிருந்தது. போலீஸ் உளவுப்படையில்
போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல; எமது இயக்க நடவடிக்கைகளைப் பற்றி தகவல்கள்
வழங்குவோரும் துரோகிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் எம்மைப் பற்றி
அளிக்கும் தகவல்களுக்கு ஈடாக, சன்மானமாக பெருந்தொகையை ரகசியமாகப் பெற்று
வந்தனர். இந்த உளவு அமைப்பானது, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த விடுதலை
அமைப்புக்கு, பொதுவாக தமிழர்களின் தேசியப் போராட்டத்துக்கு பெரும்
அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே அவ்வகை போலீஸ் அமைப்பைச் சிதைப்பதையே
நோக்கமாகவும் செயலாகவும் கொண்டிருந்தது.
இரண்டாவது நடவடிக்கை, தமிழ் ஈழத்தில் போலீஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச்
செய்வதை மையமாகக் கொண்டிருந்தது. மூன்றாவதாக, எமது கொரில்லாப் போராளிகள்
ராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்” என்று தங்களது கொள்கைத்
திட்டத்தை அவ்வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தனர். தமிழர் விடுதலைக்
கூட்டணியினரால் தமிழர் துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட, யாழ்ப்பாண நகர மேயர்
துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பு
பிரபலமடைந்ததுடன் பிரபாகரனும் பிரபலமடைந்தார்.
துரையப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து உரும்பராயில் அரசு உருவாக்கிய புதிய
உளவுப்படைப் பிரிவு அமைக்கப்பட்டது. அந்தப் பிரிவு முழுவதுமாக விடுதலைப்
புலிகளால் அழிக்கப்பட்டது. உளவாளிகள் ஒழிப்பு மாவிட்டபுரத்திலும்,
இனுவிலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி
எம்.பி.எம்.கனகரட்னம் யு.என்.பி.க்குத் தாவினார். இவரின் செயல் துரோகச்
செயலாகக் கருதப்பட்டதையொட்டி, கொழும்புவிலுள்ள கொள்ளுப்பட்டியில் உள்ள
இல்லத்தில் சுடப்பட்டு, தப்பினாலும் பின்னர் அவர் மரணம் நேர்ந்தது. இந்தச்
சம்பவத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடித்தேடி
வேட்டையாடினார்கள். இதிலும் சித்திரவதைப் புகழ் பஸ்தியாம்பிள்ளை குழுவினர்
ஈடுபட்டதையொட்டி அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து விடுதலைப் புலிகளால் நேர்ந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து
அவ்வியக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு மே மாதம்
“விடுதலைப் புலிகள் மற்றும் இதுபோன்ற இயக்கங்களைத் தடை செய்தல் சட்டம்’
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பாதுகாப்புப்படையினருக்கு
சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது. விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை
ஆதரிப்பதாகச் சந்தேகப்படும் எந்த நபரின் சொத்துகளும் பறிமுதல் செய்யவும்
சட்டம் வகை செய்தது. “ஆனால், அரசு நினைத்ததற்கு மாறாக, இச்சட்டமானது எமது
இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதுடன், எமது இயக்கத்துடன் தொடர்பு கொள்வது
ஆபத்தானது என்று தெரிந்தும், தமிழ்மக்கள் தங்களது ஆதரவை வழங்கியதாக’
இவர்களின் வெளியீடு கூறுகிறது.
1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-இல் ஜெயவர்த்தனாவுக்கு சர்வ அதிகாரங்களையும்
வழங்கும் அரசியல் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் அரசின் தலைவர்,
முப்படைகளின் தளபதி, அமைச்சர்களை நியமிக்க, விலக்க, நாடாளுமன்றத்தைக் கலைக்க
அதிகாரம் வழங்கப்பட்டது. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் சிறப்பு
அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதே
நாளில், விடுதலைப் புலிகள் “ஆவ்ரோ’ விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து
வெளிப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக 1979, ஜூலை 20-இல் பயங்கரவாதத் தடைச்
சட்டமும் அமலுக்கு வந்தது. 18 மாத காலம் ஒரு நபரைத் தனிமைச் சிறையில்
வைக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் அவசரச் சட்டமும்
பிரயோகிக்கப்பட்டது. முன்பே விவரித்திருந்தது போல பிரிகேடியர் வீரதுங்கா
பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டார். இதன் காரணமாக 1979 மற்றும் 1980-ஆம்
ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு,
இயக்கத்தை பலப்படுத்துவதில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர். 1980-இன்
முற்பகுதியில் தங்கதுரை, குட்டிமணி தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலை
இயக்கத்துடன் கூட்டாகச் சேர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று
விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. நீர்வேலி வங்கிக் கொள்ளையை
அடுத்து, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டதையடுத்து இவ்வியக்கத்துடனான உறவு முடிவுற்றது.
பிரிகேடியர் வீரதுங்கா, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று ராணுவத்
தளபதியானார். யாழ் படுகொலையைக் கெüரவிக்கவே இந்த
ஐயர் அவர்களுக்கு, ஆற்றலுள்ள எமது இளைஞர்களின் சக்தி எப்படி வீணாகிப்போனதென்பதை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு தலைமுறை அற்புதமான மனிதர்களை இழந்துள்ளது. இது அணுகுமுறையால் ஏற்பட்ட பேரிழப்புத்தான். கொள்கை வேறுபாடுகளைவிட உண்மையில் தன்மானப்பிரச்சினை முதன்மைப்படுத்தப்பட்டிருகிறது. உங்களிலும் உங்களைப்போன்ற ஒத்த சிந்தனை உள்ளவர்களிலும் வாசிப்புக்களாலும் தொடர்ந்த உரையாடல்களிலும் ஏற்பட்ட மாற்றத்தை திரு பிரபாகரனிலும் அவரைப்போன்ற ஒத்த சிந்தனை உள்ளவர்களிலும் உடனே எதிர்பார்த்தது தவறாகப்போயுள்ளது. அது தவிர தனிப்பட்ட கோபத்தினை முதன்மைப்படுத்தியது இன விடுதலைப் போராட்டத்திற்கு பாரிய இழப்பாக போயுள்ளது. இழந்து போன எதையும் நாம் இனி மீளப் பெற முடியாது. இனி என்ன நிகழப்போகிறதென சொல்வதற்கு நாம் தீர்க்கதரிசிகளும் அல்ல. எல்லா இயக்கங்களிலும் அற்புதமான மனிதர்கள் இருந்துள்ளார்கள். மனிதனின் விடுதலைக்குரிய பயணம் தொடர்ச்சியானது. இன்று எமது இனத்திற்கு முதன்மையானது முற்றான இன அழிவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டிய இனவிடுதலை. ஒரு சரியான சிந்தாந்தம் ஒரு நாள் வெற்றியடையும். அதனுடைய வெற்றியை நாம் விரும்புகிறோம் என்பதற்காக அவசரப்படுத்த முடியாது. அது அதன் போக்கில் வெற்றி அடையும். நாம் இன்று என்ன சரியாக செய்யமுடியும் என்று சிந்திப்போம். நாம் யாராக இருந்தாலும் எமது இனத்திற்கும் எம்மைப்போன்ற நிலையில் வாடும் இனங்களிற்கும் நன்மையே செய்வோம் என தினமும் ஒரு தடவையாவது உறுதி மொழியெடுப்போம். உங்கள் எழுத்து வெறுப்பு படர்ந்து போயிருக்கும் எமது இனத்திற்கு ஒற்றுமையை தருவதாக முடியட்டும். அடிவரை ஆட்டம் கண்டபோதும் விடுதலை உணர்வு குன்றாது இறுதியில் வெற்றி கொண்ட இனம் என்று வரலாறு எழுதட்டும்.
Bastiampillai killed by Chellakkili: Chellakkili killed by pirapakaran. pirapakaran killed by Kothabaya. How the justice works..
ஷெல்லக்கிளி சுந்தரத்தை அய்யரின் தீட்டிய திட்டப்படி நிராயுதபாணியாகக்கொல்லப்பட்டதாக பேரவை உறுப்பினர்கள் அந்தநாளில் சென்னையில் பேசிக்கொண்டனர் என்றாலும் உறுதியான் தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை
மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்வதற்கு எம்மைத்தயார் செய்துவிட்டு மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் கோவில் தேர்முட்டியில எமமை காக்க வைத்துவிட்டு சித்திரா அச்சகத்தில் அச்சடிக்கக் கொடுத்த பெங்கல் வாழ்த்து மடல்களை எடுத்துவரச்சென்றவர்தான் சுந்தரம் திரும்பி ஒரு மணிநேரமாகியும் வரவில்லை திடீரென மக்கள் அவசர அவசரமாக யாழ்ப்பாணத்திருந்து எம்மை விலத்திக்கொண்டு போகின்றார்கள் விசாரித்தபோது யாழ்ப்பாணத்தில் கலவரம் என்றார்கள் எமக்கு ஓரளவுக்கு புரிந்துவிட்டது நாங்கள் யாழ்ப்பாணத்தை விரைந்து சென்றேம் அங்கு “நிராயுதபாணியாக அரசியல் தெளிவுடைய ஒரு மக்கள் தலைவன் ஒரு சிந்த போராளி பிணமாகக் கண்டோம்” தமிழ்மக்களின் தலைவிதி அன்றே மாற்றப்பட்டுவிட்டது
பார்த்தி உங்கள் பெயருக்கு முன்னால் இருக்கும் பெயர் புளட்டினதா? புலியினதா ?
சாதி , பிரதேச வேறுபாடு, துரோகம் தமிழனை பிரிக்க புலி உதிர்க்கும் மூன்று பிரதான வார்த்தைகள். சுந்தரத்தின் மீது வேறு குற்ற சாட்டுகள் வைக்க முடியாதவிடத்து ஆடும் அழுகுண்ணி ஆட்டம். நான் சுந்தரத்துடன் நேரடி தொடர்பில் இருந்ததில்லை ஆனால் அவருடன் நெருக்கமானவர்களுடன் இப்போதும் தொடர்புண்டு. ஆதாரத்துடன் அல்லது ஏதேனும் ஒரு சம்பவத்தை குறிப்பிடுங்கள் நெருங்கியவர்களை நேரடியாக இணைய தளத்திற்கு கொண்டு வருகிறேன்.
ஐயர் இன்னும் ஒரிரு முறைதான் இந்தத்தொடர் எழுதமுடியும். அய்யர் பிரபாகரனை விட்டுப்பிரிந்து சென்ற பிறகு அவ்ர் எதையும் விடுதலைக்காகச்செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு இத்தொடரை முடிப்பபார் எனநம்புவோம். பிரபாகரன் துரையப்பாவை சுட்டதனால்தான் இவர் புதிய் புலிகள் இயக்கத்தில் இனைந்தார். புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் பிரபாகரனே.கொழும்புவில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த உமாமகேசுவரன் 1976 இல் பிரபாகரனுடன் வந்து இனைந்து கொண்டார். இவர்கள் எல்லாம் பிரபாகரனின் வன்முறைப்பாதை பிடித்துபோய்தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் வந்து இனைந்து கொண்டார்கள். பிரபாகரனைவிட்டுப்பிரிந்த உமா பின்னர் தன் அமைப்பை தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகம் என்று ஆரம்ப்புத்து எந்த ஒரு தாக்குதலையும் நட்த்தாமல் தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்து கொண்டார்கள். பிரபாகரனை குற்றம் சாட்டுவோர் எல்லலாம் போரடாமலே தங்க்ளுக்குள் சண்டையிட்டு அழிந்து போன உமா மகேசுவரனின் கூட்டத்தினர் தான். இவ்ர்களால் இன்னும் ஒரு இரண்டு தொடர்தான் எழுதமுடியும். அய்ய்ர் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த் இனத்திற்கு என்ன நன்மை செய்தார் என்று எழுத்லாமே/ இவரால் முடியாது. இவ்ர் முத்லில் தன்னிலை விளக்க வேண்டும்.
மாறன்! ஐயர் புலிகளை விட்டு பிரிந்த பின்னர் என்ன செய்தார்? அவற்றை எழுதுவது அழ்கல்ல என்பதால் விட்டுவிடுகிறேன் அய்யர் தாமாக முன்வந்து எழுதுவார் தன் மறுபக்கத்தை என நம்புகிறேன்?….. அடுத்ததாக ஐயர் சுய விளம்பரத்திற்காக எழுதுகிறாரா அல்லது அக்கறையில் எழுதுகிறாரா என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும்.
அவர் ஏன் எழுதுகிறார் என்ற விசாரணையை விட அவர் தரும் தகவல்களின் செம்மை முக்கியமானது. தகவல்களைச் சரிபார்த்து முழுமைப் படுத்த முயல்வது, முத்திரை குத்தி எல்லாவற்றையும் மறுப்பதை விடப் பொருத்தமானது.
இந்த விடுதலைப்போர் தோல்வியில் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றுத்தற்கு பிரபாக்ரன் மட்டும் காரணமல்ல.. அவ்ரின் பாதையில் அவ்ர் போராட்டதை கொண்டு சென்றிருந்தால் இந்தபோரட்டம் வெற்றிபெற்றிருக்கும்.அவரைபேச்சுவார்த்தைக்குபோகும்படிதூண்டியவர்கள்தான் இந்த நிலைக்குக்காரணம். அய்நா உதவிக்கு வ்ருகிறது என்று கதைவிட்டு அவர்க்ளை கெரில்லாபோராளிகளாக் மாறாமல் த்டுத்து அழித்தவர்கள். இன்று மக்கள் ப்ணத்தை ஏப்பம் விட்ட் வெளினாடுகளில் வசிக்கும் உண்டியல் ஏந்திகளே. இவ்ர்கள் என்று திரும்பவும் விடுதலை என்ற பெயாரால் மக்கள் பணத்தில் உண்டிய்ல் ஏந்தி வாழலாம் என்றுதான் காத்திருக்கிறார்கள். மக்கள் இவர்கள் பின்னால் செல்வதைவிட்டு விழிப்புடன் எம்மினத்தின் விடிவுக்கான வ்ழிகளைத்தேட வேண்டும்.எம்மால் முடிய்ம் என்று ஒவ்வொரு தமிழ்னும் பாடுபடவேண்டும்.
விடுதலைப் புலிகளால் பேச்சு வார்த்தைகளைத் தவிர்த்திருக்க முடியுமோ என்பது ஒரு பெரிய கேள்வி.
இந்தியா 1991 முதல் தீவிரமாகவும் அமெரிக்கா 2001 முதல் அதேயளவு தீவிரமாகவும் விடுதலைப் புலிகளை முற்றாகப் பலவீனப் படுத்துவது அல்லது அழிப்பது என்றநிலைப்பாட்டுக்கு வந்த பிறகு, விடுதலைப் புலிகள் சர்வதேச அளவில் மிகத் தனிமைப்பட்டுப் போனார்கள்.
உலகில் எங்குமே ஏகாதிபத்திய எதிர்ப்போ தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்போ பற்றி அக்கறை காட்டாத விடுதலைப் புலிகளால் தங்களை ஒத்த — தங்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடிய — எந்தப் போராட்ட அமைப்புடனும் தாபன முறையிலான நல்லுறவை வளர்க்க முயலவில்லை.
இருந்தும் இந்திய மாஓவாதிகளும் பிற மர்க்சிய லெனினியவாதிகளும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட்டத்துக்குத் தன்னலமற்ற ஆதரவு தெரிவித்தே வந்தனர். நேபாள, பிலிப்பினிய மாஓவாதிகளும் அவ்வாறே.
இந்தநட்புச் சக்திகள் பெருமளவும் அலட்சியம் செய்யப்பட்டன.
எல்லாப் போட்டி இயக்க உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் பகையாகப் பார்த்ததும் பிற அரசியற் கருத்துக்கட்கு இடமளியாததும் விடுதலைப் புலிகளை மேலும் தனிமைப் படுத்தியது.
மிக எளிதாக துரோகிப் பட்டம் சூட்டி நிராகரிக்கும் போக்கை ஆதரித்தோர் மறுமொழி சொல்ல வேண்டிய கேள்விகள் உள்ளன.
ஒற்றுமை என்பது நேர்மையான் விமர்சன சுய விமர்சன அடிப்படையிலன்றி இயலாதது.
தமிழ்த் தேசியவதத்தினுள் அம் மரபு இனித் தான் கட்டி எழுப்பப்பட வேண்டும்.
எம்மால் முடியும்!. இன்னும் ஒரு புத்தகம் படிக்காதே ..ஆயுதத்தை தூக்கு கொல் கொல்..என்ற மரமண்டைகள் உருவாகாமல் தடுக்க !
வணக்கம் ஐயர்
தாங்கள் கம்யூனிஸ்டுக்களைப் பற்றி மறைமுக குற்றச்சாட்டை முன்னைய பகுதிகளில் எழுதியிருந்தீர்கள். உங்கள் எல்லோருக்கும் ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள் (என். சண்முகதாசன் )
வாசித்துப் பாருங்கள. அதில் பலவிடயங்களை அறிந்து கொள்வீர்கள். இப்புத்தகம் எம் எல்லோருக்குமே பெரும் அனுபவத்;தை அள்ளிக் கொடுக்கக் கூடிய புத்தகம். இதனை பதில் ஏற்றிய தமிழ்தேசிய ஆவணச் சுவடிகளுக்கு நன்றிகள். இடதுசாரிகளின் போராட்டத்தை திரித்துக் கூறுபவர்கள் அனைவரும் இதனை வாசித்தபின்னர் வரலாற்றை ஆராயுங்கள்
நன்றி இவை தகவலுக்காக மட்டும்
ஓ சுந்தரத்தை சதியில் வீழ்த்தியது நீங்கள்தானா? அந்த விசுவாசத்தில்தான் கரிகாலன் உங்களை மன்னித்திருக்கிறான். எனது 27 வருட கேள்விக்கு இன்று விடை கிடைத்திருக்கிறது.
தவளையும் தன் வாயால் கெடும் என்பார்கள் அதற்கு சிறந்த உதாரணம் இது. பிளவின் பின்னர்வேறு ஒரு அமைப்புடன் சேர்ந்து அடிக்கப்பட்ட வங்கிக்கொள்ளை பண்ம் என்னவாயிட்டுது? “அந்த அமைப்பு கலைக்கப்பட்டபோது எஞசிய ஆயுதங்கள் என்னவாச்சு? எந்த சர்வதேச கிரிமினிலிடம் உள்ளது? தெளிவுபடுததுவார்களா? உண்மை பேசும் உத்தமர்கள்!
தானறியா சிவப்பு மட்டையில் சிக்கி,
மக்கள் அமைப்பு பற்றி பேசியபடியே,
வட்டுக்கோட்டை தபால் கந்தோர் கொள்ளை,
ஆனைக்கோட்டை ஆயுதக் கொள்ளை எனத் தொடர்ந்து,
கலண்டர் வியாபாரத்திற்காக சித்திரா அச்சகத்தில் வாடிக்கையாளராகி,
துவாரத்தினூடு சுட்டு விடு எனக் காத்திருந்தது சுந்தரத்தின் அங்கலாய்ப்பு.
இதற்கு அய்யரில் பழி போட 27 வருடம் காத்திருந்து,
கண்டு பிடித்த விடையெனக் கதறுவது,
mmaniயின் அறியாமையின் புலம்பல்.
அறியாமைதான் . அறிந்து கொண்டு அறியாமை கொள்ள நானொன்றும் விதண்டா வாதமல்ல. கப்பல் வரும் நாம் எல்லோரையும் கூட்டி செல்ல கப்பல் வருமென காத்திருந்த அறியாமையை விட சுந்தரம் ஒன்றும் அங்கலாய்ப்பில் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. தானறியா சிவப்பு மட்டையென்று எப்படி கூறுகிறீர்கள். சுந்தரம் ஆசிரியராக இருந்த “புதிய பாதை” இதழ்களின் சுந்தரத்தின் கொலைக்கு முன்னைய இதழ்களை வாசித்தால் இருந்த போராளிகளில் ஓரளவேனும் அரசியல், இராணுவ அறிவுடையவர் சுந்தரம் என்பதை விளங்கி கொள்வீர் . வன்னிய சிங்கம் வீட்டு கொள்ளை அதனை எதிர்த்த சுருட்டு தொழிலாளி கொலை எத்தனை அப்பாவிகளை கொன்ற வி.பி எங்கே தனது போராட்ட வாழ்க்கையில் முன்னோடியான சில தாக்குதலில் ஈடுபட்டாலும் எந்தவொரு உயிரையும் கொல்லாத சுந்தரம் எங்கே? வி.பி கொலைகளிகளிலே ஈழப்போராட்டத்திற்கு பேரிழப்பு சுந்தம் கொலையே!
சுவப்பு’ மட்டைக்காரனை மாக்சிசவாதியாகவும்,
சுடுகலன் காவியை விடுதலைப் போராளியாகவும்
பார்த்துப் பரவசப்பட்டுப் போய்,
ஒரு இனத்தின் தலைவிதியே,
இன்று மாறுபட்டுப் போய் விட்டது.
ஒரு கீழ்த்தரமான எடுகோளை (சுந்தரத்தை…..நீங்கள்தானா?),
இணையத்தில் ஊசாலாட விட்டதற்கான,
எனது விளக்கத்தின் வரிகளை உணர்வில் கொள்ளாது,
பொதுவான
புலம்பல்களில் புதியபாதை தேடக்கூடாது.
வாதம் உங்கள் விவாதம் நன்றாக இருக்கிறது. புலி எதிர்ப்பு, பிரபாகரன் தூற்றல் என்று சிங்கள வெறியர்போல் பலர் இன்னமும் குப்பை கிளறிக்கொண்டிருக்கிறார்கள். புலிகள் தண்டனை கொடுத்தபோது ஏதோ தாம்தான் வெட்டிவிழுத்தியதுபோல் தம்பட்டம் அடிதவர்கள் இப்போது அவர்கள் இல்லை என்றவுடன் எமக்கு ஒன்றுமே தெரியாது என்று கைகளுவி கதை அளக்கிறார்கள். பிழைகளை தனிமனிதனில் முற்றும் சுமத்திவிட்டு இப்போது வாயகிழியக் கத்தி என்ன பலன்?
Rahavan is in London, why doesn’t he open his mouth verify Iyer’s credibility?
Is he legally obliged to respond? And this is not a court of inquiry.
There are plenty of reasons for people to respond or not to statements in the public domain.
For a start, Ragavan has not been an Iniyoru correspondent.
Let us respect the democratic choices of individuals.
If you are keen, you may plead with him personally to respond in a way he chooses.
போராட்டத்தை ஆரம்பித்துவைத்தவர்கள் என்ற முறையில் வாய் திறந்தே ஆகணும்.
ஒருவர் எங்கே வாய் திறப்பது என்பது அவரது தெரிவு.
அவர் அரசியல் பேச முற்படுகிற இடத்தில் கேள்விகளை எழுப்பினால் அங்கே அவரால் பதில் தராமல் விலக முடியாது.
மற்றப்படி, இக் களத்தில் அவர் இல்லாதளவும் அவரிடம் பதில் கோரவோ பெறவோ எப்படி இயலும்? அவர் பதில் தர வேண்டியடில்லை என்பதோ தர மாட்டார் என்பதோ என் கருத்தல்ல.
ஆனால் இந்த இடத்தில் (“this is not a court of inquiry”) அவர் பதில் தர வேண்டிய நிலையோ நிர்ப்பந்தமோ இல்லை.
Mano-Master at which time he went to TELO?…..
சுந்தரம் இருந்திருந்தால் விடுதலை கிடைத்திருக்கும் என்று சொல்பவர்கள் அவரின் ஜாதிய உணர்வு தான் அவ்ரிடம் அதிகமாக இருந்தது என்பதை அறிவார்கள். எப்பொழுது இவர்கள் தங்கள் சாதிய உணர்வை கைவிடபோகிறார்களோ?
மிக அபாண்டமான குற்ற சாட்டு.
ம்னோ மாஸ்டர் சிறீசபாரத்தினத்தை ஒரு மாக்சியவாதியாககருதியபடியால் 1982 இல் டெலோவில் சேர்ந்தார். சிறீசபாரத்தினம் செய்த சாதனை என்ன என்று கேட்டால் அவர் நடிகை ந்ளினியை வைத்திருந்தார் என்றுதான் டெலோ உறுப்பினர்கள் சொல்வார்கள். பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு விருந்துககு அழைத்து தாசைக்கொன்றவர்தான் இந்த் சிறீச்பாரத்தினம். ரமேஸ் மற்றும் சுதா போன்ற தன் அடுத்தநிலைத்தலைவர்களை வ்ஞசகமாக கொன்றவர். இவ்ர் த்ன் தேசபிதாவின்(வடமொழி) அக்காள் உடன் கள்ளத்தொடர்பைபேணி தலைமை விசுவாசத்தைக்காட்டியவர்தான் இந்த சிறீசபாரத்தினம். இவரிடம் மாகசியம் படிக்க சென்றவர்தான் இந்த ம்னோ மாஸடர். ஏனென்றால் சிறீ மாக்சியப்புத்தகங்களை தூக்கி எறியவில்ல்லை.நீர்வேலியில் அடித்த் கொள்ளைப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவ்ர்.
“சுந்தரம் இருந்திருந்தால் விடுதலை கிடைத்திருக்கும் என்று சொல்பவர்கள் அவரின் ஜாதிய உணர்வு தான் அவ்ரிடம் அதிகமாக இருந்தது என்பதை அறிவார்கள்.” — maaran on June 27, 2010 10:41 pm
இது முன்னுக்குப் பின் முரணாக அல்லவா உள்ளது.
சாதிய உணர்வு உள்ளவர்களால் இன விடுதலையை வென்று தர முடியாது என்று தான் விடுதலை பற்றிப் பேசுவோர் கூறுவர்.நீங்கள் சுந்தரத்தை நம்பினோர் மீது சாதிய முத்திரை குத்துகிறிறீர்களா? அதையே வெறெவரும் உங்களுக்குச் செய்ய முடியுமல்லவா!
அரசியல் வேறுபாடுகட்கெல்லாம் மலிவான சாதிய விளக்கங்கள் நல்லவையல்ல. அப்பட்டமான சாதியப் பாகுபாடாயினும் மறைமுகமான சாதியப் பாகுபாடாயினும் தகவல்களைத் தந்து விமர்சியுங்கள்.
ஈழவராக மேல் எழுவோம் வாருங்கள்!
“புலிகளால் எதிர்கால ஈழத்தின் ஒரு மாதிரி கிராமத்தை கூட உருவாக்க முடியவில்லை.” இந்த வரிகள் இணையத்தளம் ஒன்றில் ஐயர் எழுதிய கட்டுரைக்கு ஒரு வாசகர் எழுதிய எதிர்வினை ஆகும். இதுவே என்னை பாதித்தது, என்னை சில வரிகள் எழுத தூண்டியது. ஏனெனில், இதில் உள்ள உண்மை தன்மை மிகவும் ஆழமாக உற்று நோக்கப் படவேண்டியது. வன்னியில் இரண்டு வருடங்கள் சமாதான காலத்தில் அரச திணைகளத்தில் பணியாற்றி உள்ளேன். அந்த அனுபவங்களுடன் கண்ட கேட்ட விடயங்கள் அனைத்தும்!, எதிர்கால அனர்த்தங்கள் குறித்து பல ஐயங்களை என் மத்தியில் உருவாக்கியிருந்தது. இன்று அது நிதர்சனமாக போனதை இட்டு மிகவும் வேதனை படத்தான் முடிகிறது. ஆனால் இன்று நாம் வேதனை படுவதோடும், விமர்சனம் செய்வதோடும் வாழ்கையை கழிக்கிறோம்.
இன்று (ஐயர் உட்பட) பலர் இணையங்களை துறந்து கோவணத்தை இறுக்க கட்டி பூசையாக்க வெளிக்கிட்டார்கள், அன்று பலரும் இணைந்து விடுதலை புலிகளை, விடுதலை பாதையின் பால் குறைந்த பட்சம் எழுத்துக்கள் மூலமாவது அழுத்தங்களை கொடுத்திருக்கலாம், பல விடயங்களை சுட்டி காட்டியிருக்கலாம். ஆனால் எம்மில் பலர் அதனை அன்று செய்யவில்லை, இன்று இவற்றை எழுதுவதில் பயனில்லை. ஏனெனில் அவர்களது எழுத்துக்களில் தமிழர் தேசத்தின் நிகழ் காலத் தேவை அல்லது காலத்தின் தேவை உணரப் படவில்லை அல்லது உணர்த்த படவில்லை. இப்போதைய தேவை உடனடியான மீள் கட்டுமானம் அது அரசியல் பொருளாதார கவனிப்போடு பாதிக்கப் பட்ட தமிழர் வாழ் விடங்களில் வாழ்வாதாரங்களை கட்டி எளுப்புவதாக இருத்தல் வேண்டும்.
இதற்க்கு எம்மத்தியில் இருந்து தன்னார்வ குழுக்களாக நாம் மேலெழுதல் வேண்டும். அரசாங்கத்தையோ, வெளிநாடுகளையோ, தமிழ் தேசிய கூட்டமைப்பையோ நம்பியிருப்பதையோ! விட்டு விட்டு காலத்தேவையில்! உடனடியாக நாம் கால் பதிக்க வேண்டும். தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்த காந்தீயம் போன்ற அமைப்புகளை உருவாக்கி மக்களின் இருப்புகளை அவர் தம் சொந்த மண்ணில் மேம்படுத்துவதே இன்று முதன்மையானது. இன்று தமிழர் தாயகம் கபளீகரம் செய்யப்படுவதில் இருந்து தடுப்பதற்கு இதுவே முதன்மை வழி. வாருங்கள் வன்னியிலும் வாகரையிலும் சம்பூரிலும் எமது நிலங்களை எமதுடையாக்குவோம். அகதியாக வாழ்வாதாரம் அற்று வழிதெரியாது இருக்கும் மக்களை குறைந்த பட்சம் ஒரு குடிசை போட்டாவது கொடுப்போம் தம் தாய் நிலத்தில் குந்துவதற்க்கு.
இதன் மூலம் நாளை குடிசைகளிடையே பாதை சமைப்போம் நல் வாழ்வு படைப்போம். பருத்தித்துறையில் இருந்து பாணமை வரை உதவும் கரங்களை நீட்டி செல்வோம். இந்த பாதையில் பயணிக்க நீங்கள் எத்தனை பேர் தயார்? நீங்கள் சிலர் தயாரானால் நாளைய விடியல் நம் கையில்.
எனவே
சொந்த மண்ணில் மக்கள் வாழ்வதற்க்கு என்று ஆசை படுகிறார்களோ அன்று விடுதலையும் அவர்களுடன் கூடப் பயணிக்கும். சொந்த மண்ணில் வாழ அல்லாடும் மக்களிடம் எப்படி விடுதலை தீ முளை விடும். (“வீதிக்கு இறங்கி கொடியை தூக்கி கோசம் போடுதல் மாத்திரம் மக்கள் போராட்டம் என அர்த்தம் கொள்ளுதல் ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் அனர்த்தம் மாத்திரமே! அது தான் மக்கள் போராட்டம் என்றால் ஒரு புரட்சிகர உழைப்பிற்க்கு அர்த்தம் இருக்காது”.)
ஒபாமாவுக்கு காவடி தூக்கி என்ன கண்டோம்?, தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் காவடி ஆட்டம் பார்த்தோம் என்ன கண்டோம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்தோம் என்ன கண்டோம்? சம்பூர் வாகரை வன்னி படுகொலைகளை தடுத்தோமா? இல்லையே! தவறுகள் நம் மிடையே பல உண்டு.
வன்னியில் சமாதான காலத்தில் நான் பணியாற்றிய போது முல்லை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க பணிமனையில் எனது சேவையை தொடர்ந்தேன் அரச காணிகளில் வீடமைப்பு செய்வதற்கான உடனடி செயற் திட்டத்திற்காக மக்களிற்கு காணிகளை உரிமம் ஆக்கும் வேலையில் இரண்டு மாவட்டங்களிலும் குறைந்தது 8500 விண்ணப் பங்களை பரிசீலித்து பெரும்பாலானோருக்கு உரிமம் வழங்க ஆவன செய்திருக்கிறேன். 1990 களில் இருந்து நான் சேவை ஆற்ற தொடங்கிய 2005 ஆரம்பம் வரை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே வன்னி இருந்தது. புலிகள் இக்காணிகளை மக்கள் உடைமையாக்க அரச அதிகாரிகளை நிர்ப்பந்திக்கவில்லை அல்லது அசமந்த போக்கில் இருந்தனர்.
கண்டாவளையில் குடியிருப்பு காணிகளை பார்வையிட சென்று இருந்தேன். அங்கு குடும்ப பெண்மணி ஒருவர் கண்ணீர் விட்ட படி அழுத வண்ணம் வந்தார். 1977 இல் இருந்து அகதியா க வந்த காலம் தொட்டு இன்று வரையில் தமக்கு ஒரு சொந்த காணி இல்லை ஐயா! நாங்கள் மலையகத்தில் இருந்து வந்ததால் தான் இந்த புறக்கணிப்பா என என்னிடம் முறையிட்டார் அந்த மாது. பாவப்பட்ட அம்மாதுவின் ஓலை குடிசையை நோட்டம் விட்டு மெல்ல அவர்களின் குடும்ப நிலைமையை விசாரித்த வண்ணம் சற்று தலையை குனிந்து பார்த்த போது, மாவீரர்களின் படங்கள் தொங்கியது. ஒன்றல்ல இரண்டல்ல ஆறு படங்கள். அது ஒன்பது பிள்ளைகளை உள்ளடக்கிய குடும்பம், அன்று மூன்று பிள்ளைகளை உள்ளடக்கிய ஐந்து பேராக குறுகியிருந்தது. நான் கேட்டேன் இயக்கம் உங்களுக்கு ஒன்றும் தரவில்லையா? அவர்களின் குடும்ப தலைவன் சொல்கிறார் அவர்கள் பண மின்றி இருப்பார்கள் அதில் எமக்கு எப்படி தருவார்கள் என அப்பாவித்தனமாக. ஓலை குடிசையில் அன்று இருந்த குடும்பத்தின் நிலை இன்று அதுவும் இல்லையோ நானறியேன்.
அன்று விடுதலை புலிகள் பல ஏற்ற தாழ்வுகளை இயக்கதிற்ற்குள்ளும் வெளியிலும் பேணியதை என் கண்கள் ஊடாக கண்டு இருக்கிறேன். வன்னியில் புலிகளின் திருமணம் முடித்த ஒரு இடை நிலை தளபதி மனம் பொருமி சொன்ன விடயத்தை இங்கு பதிகிறேன், அவங்கள், அவங்கள் எல்லாம் பெரிய காணியிலும் பெரிய வீடுகளிலும் இருக்கிறாங்கள் எங்களுக்கு குடியிருக்க ஒரு துண்டு நிலம் பெற முடியாமல் அலைந்து திரிகிறோம், என வேதனை பட்டதை என் காதுகளால் கேட்டு இருக்கிறேன். அத் தளபதி, அவங்கள் என குறிப்பிட்டது விடுதலைப் புலிகளின் செல்வாக்கு உள்ள தளபதிகளையும் பிரமுகர்களையும் தான்.
வன்னியில் திருமணம் முடித்த விடுதலை புலிகளுக்கு 3 லட்சம் இயக்கத்தால் வீடுகட்ட கொடுக்கப்பட்டது. (ஓலை குடில் போடவும் காணாது) ஆனால் வசதி படைத்த போராளிகள் மேலதிகமான பணத்தை போட்டு வசதியான வீடு கட்டி கொள்ளலாம். இப்படித்தான் வன்னியில் திருமணம் முடித்த சில போராளிகளின் வீடுகள் ஓலை குடில் களாகவும் சிலரின் வீடுகள் வசதி படைத்த கல் வீடுகளாகவும் இருந்தன. இந்த ஏற்ற தாழ்வுகள் போராளிகளின் மனத்தை கடுமையாக பாதித்தது. இதனை இயக்கத்தின் தலைமை கண்டு கொள்ளவேயில்லை. குறிப்பாக திருமணம் முடித்த போராளிகள் பலர் நீண்ட கால போராட்ட அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் இந்த ஏற்ற தாழ்வுகளாலும், திருமணம் முடித்து இருந்த காரணத் தாலும் போர்முனையை விட்டு விலகியும், போரில் ஆர்வம் அற்றும் இருந்தனர்.
விடுதலை புலிகளிற்குள் சாதி மாறி திருமணம் செய்தவர்கள் பலர். சமாதான காலத்தில் தமது பிள்ளைகளை பார்க்க, பெற்றோர் வன்னி சென்றனர். அங்கு குடும்பம் குட்டியாக தமது பிள்ளைகள் இருப்பதை பார்த்து சந்தோசமடைந்த புலிகளின் பெற்றோர், தமது மருமக்களின் அந்த தொந்தங்களை தோண்டி எடுத்தனர். ஐயகோ! அங்குதான் அவர்களிற்கு தாங்கள் நீண்டகாலமாக கட்டி காத்து வந்த சாதீயப் பெருமையெல்லாம்? காற்றோடு போய்??.., தமது பிள்ளைகள் கலப்பு திருமணம்? (இந்த வார்த்தையை பாவிப்பதில் எனக்கு உடன் பாடில்லை) செய்ததை அறிகின்றனர். வெட்டு ஒன்று துண்டு இரண்டாக புலிகுடும்பத்தை அவர்களின் பெற்றோர் பிரித்து விடுகின்றனர். இவ்வாறான விவாகரத்துகள் வன்னியில் மிக அதிகமாக நிகழ்ந்தன. இதற்கு புலிகள் சமரசம் செய்ய முற்பட்டாலும் சாதீய வெறித்தனம் அதற்கு இடங் கொடுக்கவில்லை. இதனால் விடுதலை புலிகள், தமக்குள் காதலித்து திருமணம் முடிக்கும் உறுப்பினர்கள், தமது சாதியை வெளிபடுத்த வேண்டும் எனக் குறிப் பிட்டதாக அறியக் கிடைக்கிறது. இதில் குறிப்பாக சாதீய அடிப்படையில் தாழ்ந்த மட்டத்தில் இருந்த பெண்களே அதிகம் பாதிக்கப் பட்டதாக கேள்வி பட்டேன். ஆக விடுதலை போராட்டம் சமத்துவம் இன்றியும், ஆணாதிக்க சிந்தனை தலைதூக்கியுமிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
விடுதலை போராட்டம் வெறும் ராணுவ வாத கண்ணோட்டத்தில் மாத்திரம் கட்டியெழுப்ப பட்டதன் விளைவுகளே இவை. இதன் காரணமாக எமது விடுதலை போராட்டம் தவறானது என்ற கருத்துக்கு நான் வரவில்லை. நாம் பல தவறுகளை செய்துள்ளோம் தொடர்ந்தும் செய்கின்றோம் என்பதை நினைவில் வைத்து புதிய பாதையில் பயணிப்போம். அப்துல்லாவையும், அன்பழகனையும் ஒன்று சேர்ப்போம். ஆண்டான் அடிமை பேதைமை ஒழிப்போம். கீழவர் மேலவர் என்ற வேற்றுமை துறப்போம். ஈழவராக மேல் எழுவோம் வாருங்கள்.
நன்றி
S.G.ராகவன்
ராகவன் அவாகளுக்கு
உங்கள் எழுத்துக்களைப் பார்த்த பின்பே எனக்கும் முதன் முதலாக எழுதுவதற்தகு மனம் உந்தப்பட்டது. இன’று நமக்கிருக்கும் தலையாய கடமை என்னவென்றால் இடம்பெயா;ந்தோ இடம்பெயராமலோ இருக்கும் வசதியற்றிருக்கும் நமது மக்களுக்கு உடனடி நிவாரணம் உடனடியான மீள் கட்டுமானப்பணி. நமது சமுதாயம் கல்வியில் மிகவும் சிறந்து விளங்கிய சமுதாயம். இன்று ஆயிரகணக்கான சிறுவர்கள் படிக்க தேவையானவை இல்லாமலும் வசதியின்றியும் இருக்கின்றர்கள். இவர்களுக்கு கைகொடுப்போம்.
ஜயர் நன்றாக அம்புலிமாமா கதை எழுதுகின்றார் என்று எல்லோருக்கும் தெரியும் 1980 ம் ஆண’டுகளுக்கு பிறகு பிறந்த (“வீதிக்கு இறங்கி கொடியை தூக்கி கோசம் போட்டு ஒட்டுமொத்த தமிழர்களின் மானத்தையும் இவர்களின் நடவடிக்கைகளால் காற்றில் பறக்க விட்டவர்கள்} வர்களைத்தவிர. ஜயர் சுந்தரத்தின் சகோதரர்கள் உரும்பிராய் பாலா பரமதேவா போன்றோரும் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார்கள்
அய்யர் அவர்கள் எழுதும் அம்புலிமாமா கதையால்தான் திரு ராகவன் அவர்களப் போன்றோர் ஆக்க பூர்வமான வெளீப்பாடுகளூம் சிந்தனைகளூம் வெளீவருகின்றன.குப்பைகளூக்கிடையே முத்துப் போல் ஒரு வரலாற்றூப் பதிவு அது.அய்யர் இதை புத்த்கமாக எழுதும் போது ராகவன் அவர்களது குறீப்பையும் இனைப்பது அவசியம்.
புலிகள் இருந்ததனால் தான்
கடந்த முட்பது வருடங்களாக சிங்கள குடியாட்டம் தடுட்கபட்டது. நன்றி
தலைவா.
நடந்து முடிந்த நல்லவை , நடட்கபோகும் நல்லவை ……ஏறக்