இன்று (15/12/2010) மாலை 6 மணிக்கு கலந்துரையாடலும் கருத்தாடலும்:
பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த ஸ்கந்ததேவா சமகால அரசியல் குறித்தும் , புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியைச் சேர்ந்த தோழர் தம்பையா சமகால தேசிய அரசியல் குறித்தும் கருத்துரை நிகழ்த்துகின்றனர். மாலை 6:30 இலிருந்து 9:30 வரையான இந்தநிகழ்வைப் புதிய திசைகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வமைப்பைச் சார்ந்த பாலன் நிகழ்வைத் தலைமை தாங்குகிறார்.
காணமல் போவோருக்கு எதிரான சர்வதேச மாநாடு ( 6th International Conference Against Disappearances (ICAD))
மாநாட்டில் இலங்கையில் அரச அடக்குமுறையினால் காணாமல் போவோர் குறித்து சர்வதேச மாநாட்டில் பேசும் பொருட்டு தோழர் தம்பையா அழைக்கப்பட்டிருந்தார். 12ம் திகதி நிறைவுற்ற இந்த மாநாட்டின் பின்னர் இலங்கை அரசியல் நிலை குறித்து விரிவான கருத்துரை மற்றும் விவாதம் போன்றவற்றில் இன்று தம்பையா பங்குபெற்றுகிறார். மலையகத்தைச் சேர்ந்த சட்டத்தரணியான தோழர் தம்பையா பல சர்வதேச முற்போக்கு இயக்கங்களோடு தொடர்புகளைப் பேணிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடம் : தமிழர் தகவல்நடுவம்.
Tamil Information Centre
Thulasi
Bridge End Close
Kingston Upon Thames KT2 6PZ
(United Kingdom)
Nearest Tube : Norbiton
Telephone: +44 (0)20 8546 1560
காலம் மாலை : 6:30 – 9:30
தொடர்புகள் : 07969925882 / 07926933161
அனைவரும் நட்புடன் அழக்கப்படுகின்றனர்.