இன்று மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை பறை – விடுதலைக்கான குரல் என்ற அமைப்பு போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட தமிழகத் தொழிலாளர்களுக்கு நீதி கேட்டும், அவர்களின் கொலைகளைக் கண்டித்தும் இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.
இது தொடர்பாகக் பறை விடுதலைக்கான குரல் சார்பில் கருத்துத் தெரிவித்த குமார், முள்ளிவாய்க்காலின் பின்னர் மனிதப் படுகொலைகள் சாதாரண நிகழ்வாகிவிட்டது. உலகம் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்க சாட்சியின்றிக் கொலைகளை நடத்தும் அதிகாரவர்க்கம் அதனை போலிக் காரணங்களால் நியாயப்படுத்துகிறது. செம்மரங்களைக் கடத்தும் மாபியாக் கும்பல்களைப் பாதுகாக்கும் இந்திய அரசு அப்பாவித் தொழிலாளரகளை கொலைக்களத்திற்கு அனுப்பிவைக்கிறது.
ஒடுக்குமுறைகு எதிராகப் போராடும் தேசிய இனத்தின் அங்கமாகிய நாம் தமிழகத் தொழிலாளர்களின் கொலையில் வலியை உணர்ந்துள்ளோம். படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கான குரல் எமது தேசிய இனத்தின் குரலாக உலகம் உணரட்டும். லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்னால் அணிதிரண்டு போராட வருமாறு அவர் அழைப்புவிடுத்தார்.