இன்று (26.03.2009) பிற்பகல் 16:00 மணிக்கு பாரீஸில் அமைந்துள்ள PLACE ST. MICHEL யில் பிரான்ஸில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்களின் ஒன்றுகூடல் இடம்பெற இருக்கிறது. இவ் ஒன்று கூடலில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள், தீர்வுகள் பற்றி ஆராயப்படும். இவ் ஒன்றுகூடலை சமூகப் பாதுகாப்பு அமைப்பினரும் ( Comité de Défense Social ) 9ème COLLECTIF அமைப்பினரும் ஒருங்கிணைக்கின்றனர். எனவே வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்களையும் சமூக அக்கறையாளர்களையும் தோழமையோடு அழைக்கின்றனர்.