இன்fபோ சிஸ் என்ற பல் தேசிய இந்தியக் கம்பனியின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவில் பல மில்லியன்களுக்கு அதிபதியுமான நாராயண மூர்த்தி இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜானதிபதி செயலகத்தில் “2009 வருடத்திற்கான தகவல் தொழில்நுட்பமும் ஆங்கிலமும்” என்ற வைபவத்திற்குத் தலைமை வகித்த நாராயணமூர்த்தி, வைபவ விருந்தின் சற்றுப் பின்னதாக ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கன்னடாவின் மாதவ பிராமண வகுப்பைச் சேர்ந்த மூர்த்தி உருவாக்கிய நிறுவனமான இன்fபோசிஸ் தொடர்பாக, நோபல் பரிசு பெற்ற பொருளியலாளரான ஸ்ரிகிட்ஸ் “உலகமயமாதல் வெற்றியின் உதாரணம் எனக்குறிப்பிட்டார்”.
இவ்வைபவத்தின் போது உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, இந்தியாவின் தகவற்தொழில் நுட்ப வளர்ச்சியின்பால் ஆட்கொள்ளப்பட்டதாகவும், இந்திய தகவற்தொழில் நுட்பத்தின் தந்தையான மூர்த்தியின் வருகையால் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாகவே இலங்கையின் பலதுறைகளில் இன்fபோசிஸ் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது. தவிர, இனப்பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்படிற்கும் இந்திய தொழிலதிபர்களின் முதலீடுகளிடையேயும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பொறுப்பை ஏற்க நாராயண மூர்த்தி ஒப்புக் கொண்டதாகவும் சிறிலங்க அயலுறவு செயலர் பலிதா கோகோனா தெரிவித்தார்.
பர்மா என்ற சர்வாதிகார ஆட்சி நிலவும் நாட்டில் 2007 வருடத்தில் மட்டும் 83 மில்லியன் டொலர்களை முதலீட்டிருக்கும் இந்தியாவிற்கு இலங்கை இன்னொரு ஆரம்பம் எனக்கூறப்படுகிறது.








//மேற்கில் தோல்வியடைந்து போன உலக மயமாதலும், நவ தாராளவாதமும் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவல்ல ஒரு வர்த்தக குழாமை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தான் அரசை ஆட்டுவிக்கும் ஆண்டவர்கள். இவர்களின் நலனுக்காகத் தெற்காசியாவில் தேவைப்பட்ட சாக்கடைதான் இலங்கைத் தீவு. இஸ்ரேலின் பாசிசம் எவ்வாறு அமரிக்க அணிக்குத் தேவையானதோ அதே நியாயப் படிமங்கள் தான் இலங்கையின் பாசிசம் இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது.// – மகிந்த அரசின் மரணச்சமன்பாடு என்ற கட்டுரையிலிருந்து….