இலங்கையால் பயங்கரமான போர்க் குற்றங்கள் புரியப்பட்டன என்பதற்கு ஆதாரங்கள் உள்ள போதிலும் இந்நாட்டுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆயுதங்களை விநியோகித்து வருகின்றது என ஆயுத வியாபாரத்துக்கு எதிரான பிரச்சார அமைப்பு கண்டனம் வெளியிட்டு உள்ளது. இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்களை மற்றுமொரு வீடியோ மூலம் சனல் 4 தொலைக்காட்சி மீண்டும் வெளிப்படுத்தி உள்ள போதிலும் எதற்காக ஆயுதங்களை இலங்கைக்கு விற்று வருகின்றது? என இவ்வமைப்பு விளக்கம் கேட்டு உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தோற்கடிக்கப்பட்டதற்கு பின்னர் 3 மில்லியன் பவுண்டு பெறுமதியான ஆயுதங்கள் இலங்கைக்கு விற்கப்பட்டு உள்ளன என்றும் இதில் 2 மில்லியன் பவுண்டு பெறுமதியானவை என்றும் இவ்வமைப்பு சுட்டிக் காட்டி உள்ளது.
இலங்கையில் அரசு – புலிகள் ஆகிய தரப்பினரால் பாரதுரமான போர்க் குற்றங்கள் புரியப்பட்டு உள்ளன என்று ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு அறிக்கையிட்டு உள்ளது எனவும் இவ்வமைப்பு கோடி காட்டி உள்ளது.
2011 ஆம் ஆண்டின் கடைசி ஒன்பது மாதங்களில் மாத்திரம் 1.5 மில்லியன் பவுண்டு பெறுமதியான ஆயுதங்கள் பிரிட்டனால் இலங்கைக்கு விற்கப்பட்டு இருக்கின்றன .