இலங்கையின் வடக்கே கைதுசெய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் 45 பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்துவந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்பதை நிச்சயமாக உறுதிசெய்ததன் பின்னரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கேள்விகளுக்கு பதிலளித்த பிரிஷாந்த ஜயக்கொடி, புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின் படி இன்னும் கைதுசெய்யப்பட வேண்டியவர்கள் வடபகுதியில் இருப்பதாகவும் கூறினார்.
ஒருவர் மாணவர், மூவர் பெண்கள்
இவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தமது ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி டி. கனகராஜா கூறினார்.
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் மூன்று பெண்களும் 19 வயதான பள்ளி மாணவர் ஒருவரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் போருக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும் போர் முடிந்த பின்னர் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2010ம்- ஆண்டளவில் மீளக்குடியேறியவர்கள் என்றும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.
என்ன லுசுதனம் கடந்த வாரங்களீள் நீண்டகாலமாக சேகரித்துவந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சொல்கின்றார்கள் .இதில் புலி ஆதரவாழர்கள் மிகவும் கொடுமை என்பதுதான் புல் அரிக்கிரது.இங்கேதான் உண்மைகள் சாகின்றது.உண்மையாக போராட வேண்டியவர்கள் யார் என்ற கேல்வி எலுகிறது குரல்வழைகள் நசுக்க படிகின்றது.உதாரணம்.. இந்தியன் ஆமி வேலியேறீய போது வடக்கு கிழக்கு பகுதியில் 48000 வாளீபர்களை ஒலிபெரிக்கி ஊடக சரனடயா வய்த்து எரு லோறீகளீள் எத்தி சென்ரதை நினைத்தால் என் மனம் இன்றூம் படபடக்கின்றது .எங்கே அவர்கள் …..இதில் ஆக கொடுமை புலி கடசி வரையும் இதய்தான் செய்தார்கள் . அதிலும் கொடுமை இப்போசெய்யும் கய்திகளூக்கு பிரபாகரன் வழப்பே காரணம்.வாழ்க தமிழ் வாழ்க புலி தொண்டு
Where to complain about ex LTTE persons who are terrorizing our villages now?
Which village ?