இலங்கையின் வடக்கு, கிழக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற பல்வேறு செயற்பாடுகள் குறித்து இந்தியாவிடம் முறையிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயை நேற்று கொழும்பில் வைத்து சந்தித்த போது வடக்கில் தமிழர்கள் காணிக்கள் பதிவு செய்யப்படுவது குறித்து முறையிடப்பட்டது.
அத்துடன் சிங்கள குடியேற்றங்களுக்காக எல்லை நிர்ணயம் செய்யப்படுவது குறித்தும் முறையிடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
உலகின் அத்தனை பயங்கரவாதிகளிடமும் முறையிட்டாயிற்று, என்றாவது ஒரு நாள் மக்களிடம் முறையிட்டு அவர்களை அணிதிரட்டிப் போராடும் போதே விடுதலை கிடைக்கும்.