புலம் பெயர் நாடுகளில் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான அனுதாபக் குரல்களுக்கு அப்பால் ஆரோக்கியமான அரசியல் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். பழமைவாத அரசியல் முறைமைகளுக்கு அப்பால் முன்னோக்கிய நகர்வினை மேற்கொள்ள வேண்டிய குறிப்பான காலப்பகுதியில் நாங்கள் வாழ்கிறோம். இந்த நிலையில், ஏனைய சர்வதேச அமைப்புக்களுடனான செயற்திட்டங்கள், மனிதாபிமான அரசியல் நடைமுறைகள், ஈழத்தில் உருவாகும் எதிர்ப்பியக்கங்களை சரவதேச மயப்படுத்தல், இந்திய முற்போக்கு இயக்கங்களுடனான வேலை முறைகள் போன்ற விடயங்கள் குறித்தும், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்புப் போன்றவற்றிற்கு எதிரான சர்வதேசப் பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது. வரும் ஞாயிறு 26.06.2011 அன்று மாலை 5 மணியிலிருந்து 9 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்வு புதிய திசைகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தமிழ்ப் பேசும் மக்கள் சார்பாக செயற்படும் அனைத்து அமைப்புக்களுக்கும் தோழமையுட பகிரங்க அழைப்பு விடுப்பதாக புதியதிசைகள் அமைப்பினர் அறிவித்துள்ளனர். கருத்துக்களுக்கு செயல் வடிவம் வழங்குவதற்கும், புதிய வழிமுறையை நோக்கி நகர்வதற்கும் ஏற்ற சமூகச் சூழலில் காணப்படும் இன்றைய நிலையில் இப்பொதுக் கூட்டத்திற்கு அனைத்து சமூக அக்கறையுள்ளோரும் அழைக்கப்படுகின்றனர் என புதிய திசைகள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய அரசியல் சமூக அமைப்புக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைவரும் தமது கருத்துக்களை உரை அல்லது கலந்துரையாடல் வடிவில் தெரிவிக்கலாம் என நிகழ்ச்சியை ஒழுங்கமைக்கும் புதிய திசைகள் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.
London Sivan Kovil Hall, 4A Clarendon Rise Lewisham London .
Contacts : 07960484545