அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் இனியொரு இணையத்தில் வெளியான ‘இரத்தச் சோறு உண்கிறார்கள்‘ என்ற கட்டுரையைக் குறிப்பிட்டு இனியொரு… வை மாபியா ஊடகம் என விழித்துள்ளனர். விழா ஏற்பாட்டாளர்கள் இந்த அவதூறுக்கு எதிரான கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதற்குப் பதிலாக கருத்துக்களை அவதூறுகள் என்று விழிக்கும் கோழைகளால் நிரம்பிவழியும் தமிழ் விமர்சன மரபின் அழுகிய பாகம் இன்று மேலும் முன்னிலைபடுத்தப்படுகிறது. புது டெல்லிக்கு எந்த வழியால் சென்றீர்கள் என்று கேட்டால் இந்தியன் ஏயர் லன் விமான நிறுவனத்தின் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கும் பிரசங்கங்கங்கள் எமக்குத் இனித் தேவையில்லை. உலகம் முழுவதிலிருந்தும் மக்களை அழிக்கும் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான உறுதியன அரசியலே இன்று எமக்கு முன்னால் உள்ள தேவை. இந்த அரசியல் பிழைப்புவாதிகளுக்கு மாபியாத் தனமாகத் தென்பட்டால், இனியொரு அவர்களுக்கு மாபியா ஊடகமாகவே இருக்கும்.
மாபியாத் தொடர்புகளூடாக அரக்கர்கள் கொடுத்த டிக்கட்டில் பயணித்து அவர்கள் போட்ட சோத்தைத் திண்டு . ஆற்றையோ மாபியாத் தன மானியத்தில் வாழும் ஆண்டிப் பன்டாரங்கள் தெருவோரத்து மதிலில் குந்தி இருந்து அணுஆயுத தடை பற்றி பேசினால் அதுக்கு பேர் …….
பேச்சு வார்த்தை பேரம் பேசல் என்பன சமனிலை , சம தளத்தில் இருந்து பேசவேண்டும் பயண ரிக்கட் வாங்க வழியின்றி , உணவு கூட மண்டை ஓட்டில் ஏந்தி வாங்கித் திண்டது போல் நடந்து கொண்டு ….
“கடந்த மாதம் ஜீன் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் இந்திய அரசின் உளவுத்துறையின் அணுசரணையுடன் உருவாக்கப்பட்ட ‘மனித உரிமைகள்இ உலக பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு’ (Pயசடயைஅநவெயசயைn குழசரஅ ழுn ர்ரஅயn சுபைாவள – குழுசு புடுழுடீயுடு னுநுஏநுடுழுPஆநுவேு –Pகுர்சுபுனு) என்ற என்.ஜி.ஓ (பேுழு) மாநாட்டில்இ தமிழக பாராளுமன்ற (மேலவை) உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் புலம்பெயர் “தமிழர்” தலைவர்களும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களும் பங்கெடுத்துக் கொண்டது அனைவருக்கும் நினைவிருக்கக் கூடும்.
புலம்பெயர் சூழலில் நன்கு அறியப்பட்டவரும் இனியொரு வெளியீடான ஜயர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” நூலை புலத்தில் முன்னெடுத்து சென்றவரும் பிரான்சில் அசை (சமூக அசைவிற்க்கான எழுத்தியக்கம்) முன்னின்று நடத்திய உரையாடலில் முதன்மைபடுத்தப்பட்டவருமான தமிழ் மாணவர் பேரவையினை சேர்ந்த திரு.சத்தியசீலன் அவர்கள்இ டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை முன்னின்று நடாத்தியதுடன் மாநாட்டில் முன்மொழியப்பட்டவைகளை தனது பெயரில் அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.”
தமிழரங்கத்திற்கு என்னே ஒரு சந்தோசம் இனியொருவை சகதியில் சேர்த்து விடுவதற்கு. ஏன் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் எழுதுகிறார்கள்?
இந்திய மத்திய அரசாங்கத்தில் மட்டும் குறைகாண்பதோ அவர்களை மட்டும் நம்பிக்கை கொள்வதோ அல்ல ஒரு இனத்தின் விடுதலை என்ற உண்மையை கைவிட முடியாது விட்டாலும். பல ஆயிரம் வருடங்களை ஈழமண்ணின் வரலாறுகளை அழிக்க உருவாக்கப்பட்ட மாவம்சம் எனும் இனவாதக் கொள்கை எமது மண்ணிற்கு எதிரானது அதனை வளர்க்க ஈழத்தமிழினம் தொட்டு அனைத்துலக அரசியல் சமூகம் வரை சிங்கள தேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆதரவளித்தமை ஏற்க்க முடியாத இனஅழிப்பினற்கான காரணம் அதனை த்தான் இந்த நாலுவருடம் மாற்றி உள்ளது என்றால் எதிர்காலம் பற்றி எதிர்கால யதார்தமும் இயற்கையின் தெரிவும் பற்றி புரியவில்லை என்பதனை விட ஏற்கத் தயாராக இல்லை என்பதே உண்மை ஆகும்.
காரணம் இயற்கையோடு போராடி வெற்றி பெற முடியாத மனிதன் மனிதனாக சிலகாலம் வாழ்வதற்காக ஒரு தேசத்தினது மண்ணை மாற்ற முடியாது என்ற உண்மையை மனிதகுலம் ஏற்கத்தயாராக வேண்டும். காலம்
ஒருநாள் பதில் கூறும் என்பதனை இனியும் நாம் எதிர்பார்த்து காத்திருக்க முடியாது. அதனால் இந்தியா உட்பட அனைத்துலக அரசியல் சமூகமானது தமது நம்பிக்கைக்கு ஏற்ப்ப ஈழத்தமிழினத்தின் விடுதலையை அங்கீகரிப்பதே காலத்தின் அவசியமாக உள்ளது அதற்கு எதிராக எந்த முடிவுகளையும் எதிர்பார்க்க முடியாது . ஈழத்தின் விடுதலைக்கான நகர்வினை ஏற்படுத்தாமல் பொது நல வாய மகாநாட்டை நடத்துவது எதிர்காலத்தினை பாதிக்கும் வடக்கு கிழக்கு மகாணங்களில் உள்ள இராணுவம் வெளியேற்றப்படாதமையும் சிறையில் உள்ள கைதிகள் விடுதலை பெறாமல் தொடர்ந்து தடுப்புக் காவலில் இனவாதச்சிறையில் புனர்வாழ்வு முகாம் என்பன இலங்கை அரசாங்கத்தினது பழிவாங்கல்கள் . அவற்றில் இருந்து தமிழினம் விடுதலை பெறாமல் இலங்கையில் எந்த நகர்விலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது யதார்தத்திற்கு எதிரானது.
காரணம் ஈழத்தின் விடுதலை ஆனது இயற்கையினது முடிவு யதார்தத்தினது தெரிவாக கொள்ளப்பட வேண்டுமானால் மனிதகுலம் மனிதனாக மாற வேண்டும். தமிழர்கள் தமிழர்களாக மாறாத போது தமிழினம் எப்படி தமிழ் ஈழத்தை அடைவது ? அரசாங்கத்திற்காக குரல் கொடுக்கும் தமிழர்களும் அனியாயத்தை கண்டு கொள்ளாத அரசியல் வாதிகளாலும் ஈழத்தின் விடுதலைக்கு எதிரி . இதுவரை எமது போராட்டம் அதற்கான தேவை என்ன என்பதனை புரியாமல் அத்தனை பேரும் தமிழர்களுக்கு தலைவர்களாக வரலாம் என்று போராடுவதும் உண்மைகளை அழித்து தம்மை முதன்மைப்படுத்தலாம் என எதிர்பார்பதும் தவறு. காலத்தினது வழிகாட்டல் எதுவொ அதுவே ஈழத்தின் விடுதலைக்கு ஏற்தாக அமையும். 64வருட போராடத்தில் அகிம்சை வழியிலும் ஆயுதவழியிலும் போராடிய இனம் அத்தனை நகர்விலும் பல உண்மைகளை புரிந்திருந்தால் காலத்தை வீணடிகத் தேவை இல்லை. தந்தை செல்வா அவர்களது அகிம்சைவழியையோ தலைவர் பிரபாகரன் அவர்களது ஆயுதப்போராடமோ தவறு என்பதனை ஆராய்வது காலத்தினது தேவை அல்ல அதில் நாம் சரியாக நடந்து கொள்ளாதமைதான் இத்தனைபின்னடைவாக இன்று நாம் நிற்பதற்கான காரணம் . ஈழத்தின் விடுதலை வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது என்ற உண்மைக்கு மதிப்புக் கொடுகப்பட வேண்டும். அதற்கு தகுதியானவர்களாக எம்மை அடையாளம் காணாதவரை உலகத்தோடு போராட வேண்டியது உலக யதார்தமும் கூட.