நாட்டில் இனவாதத்தை தொடர்ந்தும் தூண்டிவருவதற்கான பொறுப்பை ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்கவேண்டும் என ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் தம்புர அமில தேரர் தெரிவித்துள்ளார். இனவாதத்தை தூண்ட இடமளித்து விட்டு, கீழ்ப்படிந்த ஆட்சியாளர்களாக மாறி, நாட்டு மக்களின் முழுமையான சுதந்திரத்தை, அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஹிலாரி கிளின்டனிடம் காட்டிக் கொடுத்துள்ளார்.
இலங்கையின் பிள்ளைகளான சிங்கள, தமிழ், முஸ்லீம், மலாயர், பறங்கியர் ஆகிய மக்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாசாரம் என்பவற்றை முன்னேற்றும் தாமதமின்றி பணியை மேற்கொள்வதே எமது நோக்கமாகும். தற்போது, சரியான முகாமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு வீழ்ந்துள்ளது. நாடு அரசியல் ரீதியான பலவீனமடைந்துள்ளது எனவும் தம்பர அமில தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
மதகுருக்கள் மதத்தோடு ஐக்கியமாகி மக்களை வழிநடாத்துவதே சாலச்சிறந்தது. புத்தபிக்குகள் காலம் காலமாக அரசியலிலும் ஐக்கியமாகிய காரணத்தினால்தான் இலங்கையில் மகிந்தாபோன்ற அரசியல் தலைவர்கள் உருவாக காரணம் என்பதை மறுக்கமுடியாது.