மே மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகள் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். 2009 ஆண்டு மே மாதம் 17 ஆம் 18ஆம் திகதிகளில் முடிவுக்கு வந்த யுத்தத்தில், வன்னியில் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு சாரிசாரியாக மக்கள் பலியாகினர். இரத்தமும் சதையுமய் ஒரு நிலப்பரப்பு முழுவதையும் மாற்றிய இந்த நாளின் அவலங்களை மனிதர்கள் யாரும் மறந்துவிடவில்லை. இந்த நாளை நினைவு கூருதல் என்பதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அது நிராகரிக்கப்பட முடியாதது.
வெறுமனே களியாட்டங்கள் போலன்றி, தென்னித்திய சினிமா மற்றும் அரசியல் வாதிகளின் உணர்ச்சிப் பேச்சுக்களாகவன்றி புரட்சிகர எழுச்சிக்கான நாளாக உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு இனப்படுகொலையை நினைவுபட்டுத்தும் நாளாக அமைய வேண்டும்.
இந்த இரண்டு நாளையும் தெரிந்தெடுத்த புலம்பெயர் இலங்கை அரச தொங்கு தசைகள் பலர் இணையும் கூட்டமைப்பு ஒன்று ஜேர்மனியில் 42வது இலக்கியச் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறும் இச்சந்திப்பு கடந்த தடவை புலம்பெயர் நாடுகளிலிருந்து மீண்டும் பின்புறமாகப் புலம்பெயர்ந்து இலங்கையில் நடத்தப்பட்டது.
இவர்கள் குறிப்பாக இந்த் இரண்டு நாட்களைத் தெரிவு செய்தமைக்கும், இனப்படுகொலையின் நினைவு நாளில் இதனை நடத்துவதற்கும் பின்புலம் என்ன என்பது குறித்து ஆழ அகலமான ஆய்வுகள் தேவையில்லை.
\\புரட்சிகர எழுச்சிக்கான நாளாக உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு இனப்படுகொலையை நினைவுபட்டுத்தும் நாளாக அமைய வேண்டும்.// 42வது இலக்கியச் சந்திப்பு ஏன் அப்படி அமையாது என்று ஊகிக்கிறீர்கள் ?
சாதாரண மக்கள் தமது சொந்த தனிப்பட்ட விடயங்களை செய்வதற்கே அந்த இருநாட்களிலும் பின்னிற்கிறார்கள். இவர்களோ மக்களின் உணர்வுகளுக்கு கடுகளவும் மதிப்புக் கொடுக்காமல் போலிப் புரட்சி பேசி குடித்து கும்மாளமடிக்க போகிறார்கள்.
புலிகளின் படுகொலைகளிலிருந்து தப்பியவர்களினால் வருடாவருடம்
நடத்தப்படும் நிகழ்ச்சிதான் இது. இதில் கலந்து கொண்டவர்கழும்
ஆரம்பித்துவைத்தவ்ர்கழும் புலிகளினால் கொலைசெய்யப்பட்டும்
இயற்கை மரணமும் அடைந்துவிட்டார்கள்.
இறுதி யுத்தத்தின் அழிவிற்கு உடந்தையாக இருந்த் தமிழர்கள்
பலர் நாள்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் பணப்பையை நிரப்புகின்றார்கள். ஒருநாளில் துக்கநாளாக்கி அதனையும்
தமது வருவாய்க்காகவே பயன்படுத்துகின்றார்கள்.
மனிதரை விழுங்கும் மிருகங்களை கண்ணில் காணாமல்
இருந்து கொண்டு காலில் கடிக்கும் எறும்பினை அடிக்க ஓடித்திரிய
வேண்டாம்.
புலிகள் வேறு , மக்கள் வேறு என்று வக்கனை பேசியவர்கள் இன்று புலிகளும் மக்களும் ஆயிரக்கணக்கில் மரணித்தநாளில் வம்படியாக கூடுவதன் மூலம் புலிகளும் மக்களும் பிரிக்கப்பட முடியாதவர்கள் என தம்மையறியாமலே ஒப்புக்கொண்டு விட்டார்கள் ..
# நாள்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் பணப்பையை நிரப்புகின்றார்கள். ஒருநாளில் துக்கநாளாக்கி அதனையும்
தமது வருவாய்க்காகவே பயன்படுத்துகின்றார்கள்.##
நீங்கள் இப்படி சொல்வதைப்பார்த்தால் நம்மளுக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கவில்லையே என அங்கலாய்ப்பதாகவல்லவா படுகிறது ??
தாயகத்தில் உயிருடன் வாழும் குழந்தைகளப்பற்றி சற்று சிந்தித்து
மானமுள்ள தமிழனாக ஒரு நாள் உழைப்பை வழங்கினால் நல்லது
மரணித்த மகத்தான தியாகச்சுடர்களை வைத்து வயிறுவளர்ப்பவர்களை
விரட்டுங்கள்
http://www.iptvtamil.net
இது தான் அவர்களீன் கடைசி சந்திப்பாம்.இவ்வளவு நாளூம் சந்தித்து விண்ணாணம் கதைதவர்கள் இப்போ பிரிந்து விட்டார்கள். அவர்களீல் சிலர் இந்த மேயொடு இது ஆரம்பித்த இடத்திலேயே புதைக்கிறநாள்
வீல வீல எழுபவன் தான் தமிழனடா
இதை புரியும் காலம் மிக மிக விரைவில்
வரும் என்பதை நினைவில் வைக்கவும்