ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய சீன துருவ வல்லரசுகள் அதிக அதிகாரத்தைக் கோரும் இன்றைய நிலையில் இந்த நாடுகளைத் திருப்திப்படுத்த நிறுவனம் பல வழிகளில் முயன்று வருகிறது. இலங்கை இனப் படுகொலைக்கு அதிக அழுத்தம் வழங்கக் ஐ,நா தலையிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு அதன் உள்ளக மறுசீரமைப்பில் சீன இந்தியா போன்ற நாடுகள் பங்களிப்பதும் இந் நாடுகள் இனப்படுகொலைக்கு ஆதரவு வழங்கியவை என்பதும் குறிப்பிடத் தக்கது.
மனித உரிமைகள் சம்மந்தமான விடயங்களில் பொறுப்பேற்றல் குறித்து இலங்கை அரசு ஏற்கனவே அளித்த உறுதிமொழிகள் எந்த அளவுக்கு அமல் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சர்வதேச அளவில் உள்ள அனுபவங்கள் மற்றும் ஏற்கப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் தனக்கு அறிவுறை கூறக்கூடிய நிபுணர் குழு அமைப்பது குறித்து முயற்சி எடுத்து வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை கூற ஒரு நிபுணர் குழுவை அமைக்கப் போவதாக ஐ நா பொதுச் செயலர் கூறி 80 நாட்கள் ஆன நிலையில், இது தொடர்பில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் போனதற்கு இலங்கை அரசின் அழுத்தம் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இவன் நாசமா போவன்
தெரிந்த விடயம்தானெ.
தயவு செய்து பான் கீ மூனின் அரசியலை இவ்வளவு எளிமையாக்கிக் கொச்சைப் படுத்தாதீர்கள்.
பான் கீ மூனின் எசமான் யாரென்று எல்லாரும் அறிவோம்.
சீனாவையும் இந்தியாவயும் சமன்படுத்தி இரண்டினதும் செயற்பாடுகளின் அளவையும் தன்மையையும் நோக்கையும் குழப்ப வழி செய்யாதீர்கள்.
இலங்கைக்கெதிராக மேற்குலகு என்ன “மனித உரிமை மீறல்” நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு மூண்றாம் உலக ஒத்துழைப்புக் கிடைக்காது. அதை விளங்கிக்கொள்ள உலக அரசியலை நாம் பார்க்கிற விதம் கொஞ்சம் மாற வேண்டும்.