அறுபது நீண்ட ஆண்டுகள், தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது.
கொன்று போடப்பட்டவர்கள், சாம்பலாக்கப்பட்டவர்கள், விரட்டியடிக்கப்பட்டவர்கள், சிதைத்துச் சிதைது குடியேற்றப்பட்டவர்கள் என்று வடக்கும், கிழக்கும், மலையகமும் மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.
இவையெல்லாம் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையும் சிவில் யுத்தமல்ல. பின் காலனியக் காலகட்டம் முழுவதுமே தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் அழிப்பிற்கான காலகட்டம் தான்.
மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு புறத்தில் இராட்சத வியாபாரிகள் ஆயிரமாயிரமாய் கொலைகளை நிகழ்த்திவிட்டு “வீர சிம்மாசனத்தில்” வீற்றிருக்க அவர்களின் பின்னால் இன்னும் ஆயிரம் “புதிய நியாயங்களோடு” குட்டி வியாபாரிகள் மக்களைச் சூறையாட அணிவகுத்து நிற்கின்றனர்.
ராஜபக்சவைப் பிடித்துத் துவம்சம் செய்து விடுகிறோம் என்று மக்களை மாயவலைக்குள் வைத்திருக்கும் திருடர்கள் கூட்டம் அவலங்களின் மீது அரசியல் நடத்துகிறது.வட கிழக்கு பௌத்த சிங்கள மயமாவதற்குக் கூட இலங்கை அரசின் தமிழ் உளவாளிகளும் அரசின் புலம் பெயர் நீட்சிகளும் நியாயம் சொல்கின்றன. நாளாந்த உணவிற்காக, குழந்தை செத்துப் போகாமல் வளர்வதற்காக அநாகரிகமான இராணுவத்திற்கு உடலை விற்கும் தமிழ்ப் பெண்களின் சோக வரலாறுகள் நெஞ்சைப் பிழிகின்றன.
புலம் பெயர் அரசியல் பொழுது ஒன்றாய், ஒரு குடையின் கீழ் அணிதிரள்வோம் என்ற குரல்களோடு எழுகிறது. முள்ளிவாய்க்காலில் மகிந்த அரசும் பேரினவாதமும் மனிதப்பிணங்களைக் குவித்துக்கொண்டிருந்த வேளையில் புலம் பெயர் சூழலில் ஈழக் கனவிம் கருப்பைக்குள் நெருப்பைச் சுமந்துகொண்டு லட்சம் லட்சமாய் ஐரோப்பிய, அமரிக்கத் தெருக்களில் தமிழீழ முழக்கங்களோடு ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து பார்த்திருக்கிறோம்.
இரண்டு வருடங்கள் வெற்றுச் சுலோகங்களோடு கடந்துபோயின. அரச உளவாளிகள் புற்று நோய் போல புலம் பெயர் நாடுகளின் ஒவ்வொரு அங்கங்கங்ளுக்குள்ளும் தம்மைச் செருகிக்கொண்டுள்ளனர்.
அரச உளவாளிகள் தமக்கு மனிதாபிமான முலாம் பூசிக்கொள்கின்றனர். தமக்கு “வேறு எதிர்ப்பு அரசியல் உணர்ச்சியிருப்பதாக” விரல்களை நீட்டி முழக்கமிடுகின்றனர். ராஜ மரியாதையோடு, இலங்கை விமான நிலயத்தில் வந்திறங்கும் கே.பியின் முகவர்கள் கூட தமது இலட்சியம் தமிழீழம் தான் எனக் கூறுகின்றனர்.
வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட வேளையில் இலட்சோப இலட்சமாய் ஐரோப்பியத் தெருக்களில் ஒன்றிணைந்தும் ஏன் இனப்படுகொலையை நிறுத்த முடியவில்லை?
மூன்று லட்சம் பொது மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, சிறுகச் சிறுக அழிக்கப்பட்ட போது ஏன் ஒன்றிணைவு மட்டும் பலனளிக்கவில்லை?
அமரிக்க சட்டலைட்டுகள் படம்பிடித்துக்கொண்டிருக்கும் போது நிகழ்த்தப்பட்ட அழிவுகள் இன்னும் ஏன் உலக மக்களின் கவனத்திற்கு வரவில்லை?
இன்றும் சூறையாடப்படும் வட-கிழக்கு மக்களின் அவலத்தை ஏன் நிறுத்த முடியவில்லை, குறைந்த பட்சம் அவர்களின் குரல் உலகிற்குக் கேட்கும் வண்ணம் எம்மை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை?
ஆக, “ஒரு குடையின் கீழ் இணைதல்” என்பது மட்டும் போதுமானதா?
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய இனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வு இன்னும் ஏன் ஏற்படவில்லை?
அழிவுகளுக்குத் துணை சென்றவர்களும் கொலைகாரர்களும், திருடர்களும், வியாபாரிகளும் அரசியல் அதிகாரத்தில் இன்னமும் நிலைப்பது ஏன்?
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் மரணித்த போது அஞ்சலி கூடச் செலுத்தாமல் அனாதைப் பிணமாக்கியவர்கள் யார்?
இந்தியா உட்பட அனைத்து ஏகபோக அரசுகளாலும் தேசிய விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் தலைமைகள் இந்த நாடுகளின் உளவுப்படை போல் தொழிற்படுவது ஏன்?
யார் காட்டிக் கொடுக்கிறார்கள்?
யார் உளவாளிகள்?
யார் சமூகப்பற்றுள்ளவர்கள்?
யாரோடு ஒன்றிணைய வேண்டும்?
யாரை நிராகரிக்க வேண்டும்?
இது ஒரு மீள் பதிவு : Published on: May 11, 2011 @ 0:08
ஓரே குடையின் கீழ் மழைக்கு கூட நாம் ஒதுங்குவதில்லை,தனித்துவம் பார்ப்பவர்கள் எப்படி இணவோம்.சாதியைப் பேசி அதற்குள்ளூம் சுத்தமானவரைத் தேடுபவர்களாயிற்றே எப்படித் தமிழராவோம்.என்னத்தச் சொன்னாலும் சிங்களம் ஒற்றூமையாக செயற்படுகிறது நமக்குள்தான் அது சுட்டாலும் வராதே.நாமெல்லாம் நாய் இனம் நமக்கு நடுக்கடலிலும் நக்குத் தண்ணீதான்.
. இத்தனை வருடங்கள் தமிழ் மக்கள் உயிர், உடமை, சொந்தம் , சொத்து , இரத்தம் , கண்ணீர் என்று எல்லாம் கொடுத்து போராடும்போது உங்களைப் போன்ற்வரகள் பீச்சிலே குடையின் கீழ் இருந்தவர்கள் தானே. தமிழ் மக்களின் போராட்டததை , தனியே புலிகளின் போராட்டம் என்று சொல்லி ஒரே குடையின் கீழ் வராமால் , தனிக் குடையின் கீழ் நின்று போராட்டததை காட்டிக் கொடுத்தவர்கள் தானே நீங்கள் எல்லாம். நீர் பிடிக்கும் குடையின் கீழ் மற்றவர்கள் எல்லாரும் வர வேண்டும் எதிர்பார்க்கும் சுயலனம் பிடித்த தலைக்கனம் பிடித்த முட்டாள்கள் நீங்கள்:
தமிழ் மக்களின் போராட்டம் அவசியமானதக இருந்தாலும் அதுநடத்தபட்ட முறையும் பிழை தலைமையும் பிழை
ஏன் வீரன் இனி மக்களை ஒன்று திரட்டி நீர் போராட்டத்தை தலைமை ஏற்று 🙂 நடத்தக் கூடாது. இப்பொழுதான் உங்களைப் பொறுத்த வரையில் புலிகள் இல்லையே. இனியும் ஏன் வீட்டில் வெட்டியாய் முடங்கிக் கிடந்து வீரம் பேசுகிறீர் . வீதிக்கு வந்து பாரும், அப்போது தெரியும் போராட்டம் எவ்வளவு கடுமையானது , வலியானது , சுமையானது என்று. போராடுவதற்கெல்லாம் வாய் வீரம் போதாது, செயலில் வீரம் வேண்டும். சும்மா சும்மா புலிகளை குறை சொல்லாமல் பொத்திக் கொண்டு போர்த்திக் கொண்டு படும். இவ்வளவுநாளும் அதைதானே செய்தனீர். இனி எதற்கு சுடலை ஜானம். அந்திம காலத்தில் எதற்கு 😀 வீண் வேலை. உமக்கு மட்டுமல தமிழ் மாறனுக்கும் இந்த கருத்துப் பொருந்தும்….. ஒன்றில் பயத்தை விடு…..இல்லையேல் இலட்சியத்தை விடு…….
மக்கள் ஒரு குடையில் இணைவது தேவை தான் ஆனால் அப்படி இருந்தாலும் ஏன் தோல்விகளையே சந்திக்கிறோம்?
ஏனென்றால் ஒரு குடையில் இணைவதை வைத்து பிழைப்பு மட்டுமே ஒரு கூட்டம் நடத்துகிறது. இன படுகொலைக்கு மட்டும் இப்போது இணைந்து ஊர்வலம் போய்விட்டு பின்னர் இவர்களை
ஒரு குடையின் கீழ் வருவது எப்போதுமே ஆரோக்கியமான விடயமே, ஆனால் தனிப்பட்ட கோசங்கள் பதாதைகள் தாங்காது இணைவதும், புலம் பெயா்ந்த நாடுகளின் அரசியல்,சமூக நிலைகளையும் சட்டதிட்டங்களையும் நன்றாக அறிதலும் அதற்கேற்ப செயற்படுதலும் மிகவும் அவசியம். புலம் பெயா்ந்தவா்களில் பெரும்பான்மையான மக்கள் இவைகளில் நாட்டம் அற்று இருப்பது கவலைக்குரியது.
விலை போகும் கூட்டங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள் அதிலும் தாமே விடுதலையின் உரிமையாளா்கள் என்று தம்பட்டம் அடிக்கும் கூட்டங்களே இலகுவில் ஏமாற்றக்கூடியவா்கள் மிகவும் விளிப்பாக இருக்கவேண்டிய நேரமிது.
தமிழ் மாறன் இந்த மாதம் உம்மோடு லண்டனில் ஒரு குடையின் கீழ் இணைவதற்கு விரும்புகிறேன்.
எல்லோரும் ஒன்றாகச சேர்ந்து நம் உள்ளத்து எரிமலையை உலகுக்கு காட்டும் நாளீல் உங்களப் போன்ற தமிழ் இனப்பற்றாளர்களச் சந்திப்பது மிகவும் பெருமிதமானது குமார்.நாம் உடைந்து போனாலும் உணர்வால் நிமிர்ந்து நிற்கிறோம் என்பதை ஆட்சியாளர்களூக்கு உணர்த்த, தாயகத்தில் வாழும் நம் உறவுகளூக்கு நம்பிக்கை தர நாம் ஒன்றாதல் இன்றூ மிக அவசியம்.
தமிழர்கள் ஓர் குடையின் கீழ் இணையவேண்டும்.இதற்கு இதுதான் சரியான தருணம்.உலகம் நாம் பட்ட அடிகளை உணரத்தொடங்கிவிட்டது.பேரினவாதிகள் தண்டிக்கப்படும் அதே நேரத்தில் தமிழ் ஈழம் மலர வேண்டும்.இல்லையென்றால் இனிஇருக்கும் தமிழினத்தையும் காப்பாற்றமுடியாது.இலட்சக்கணக்கில் கொடூரமாக கொல்லப்பட்டார்களே அதற்கப் அர்த்தமில்லாமல் போய்விடும்.
//இலட்சக்கணக்கில் கொடூரமாக கொல்லப்பட்டார்களே அதற்கப் அர்த்தமில்லாமல் போய்விடும்.
// இலட்சக்கணக்கில்
பலி கொடுத்து தப்பியுள்ளோமே அதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என்பதே சாலப்பொருந்தும்.-துரை
இனி நாம் எதற்கு சாதிபார்க்கவேண்டும் சாதிபார்த்து அழிந்ததுபோதும் .சிங்களபேரினவாதம் நம்மை வெளியில்இருந்து அழித்தது என்றால் சாதி நம்மை உள்ளுக்குள் இருந்து அழித்துவிட்டது.நாம் மண்காப்பதில் தமிழ் தேசியத்தில் நாம் தமிழ் சாதி.மானுடநேயம் காப்பதில் நாம் மனிதசாதி.
நாம் சாதிக்க நிறய இருக்கிறது,எனவே ஒன்றாவோம்.
இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து அப்புக்காத்து மாரும் அவர்களால் உசுப்பேத்தப்பட்ட ஆயுதக் குழுத் தலைமைகளும் தங்கள் அதிகாரங்களை தக்கவைக்க உருவாக்கப்பட்டதே இந்த தேசிய விடுதலைப் போராட்டம். இந்த போராட்டத்தால் இனவாதிகள் கொம்பு சீவப்பட்டு நன்கே மோதி வருகின்றனர். இதை மாற்ற ஒரே வழி வந்த பாதையை நிதானமாக ஒரு தரம் திருப்பி பார்த்த்து விட்ட தவறுகளை ஏற்று புதிய வழி சமைப்பது. அதை விட்டு இப்படி உணர்ச்சி கொப்பளிக்க நிங்கள் எழுதும் கட்டுரைகள் மீளவும் கொம்பு சீவும் நிகழ்வுகளை. புலிகள் பாணியில் உளவாளிகள் என்று நீங்களே அடுத்தவர்களை சாடுவது உங்களையே சந்ததேகிக்க வைக்கிறது.
கருணா டக்களஸ் சங்கரி என்று பலர் இன்று மகிந்தாவுக்கு ஒத்து ஊதியபோதும் அது ஏன் உங்களிற்கு கே.பி மீது அவ்வளவு கடுப்பு? ஏதும் குடுக்கல் வாங்கல் பிரச்சனையை?
வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட வேளையில் இலட்சோப இலட்சமாய் ஐரோப்பியத் தெருக்களில் ஒன்றிணைந்தும் ஏன் இனப்படுகொலையை நிறுத்த முடியவில்லை?
மூன்று லட்சம் பொது மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, சிறுகச் சிறுக அழிக்கப்பட்ட போது ஏன் ஒன்றிணைவு மட்டும் பலனளிக்கவில்லை?
நியாயமான கேள்விகள் – பின்னூட்டக் காரர்கள் விடை சொல்லலாமே.
உலக நாடுகள் அனைத்துமே தனது நலனை மன்னிலைப் புடுத்தியே தன் அரசியலை செய்து வருகிறது. மனித உரிமை மீறல் என்ற பதமே மேற்கு தன்னை பலமாக்க உருவாக்கிய பதே ஒளிய உண்மையான மனித நேய நோக்கோடு அல்ல. தென் ஆபிரிக்காவலில் இன வெறி தலை விரித்தாடியபோதும் பாலஸ்தீனத்தில் இன அழிப்பு நடந்த போதும் ஏன் மெளனமாக இருந்தார்களோ அதே மெளனம் தான் எம்மவர்கள் கொல்லப்படும் போதும் செய்தார்கள். இன்று ஐநா மூலம் இலங்கையை தம் வசப் படுத்த நடைபெறும் ஆடுகளமே இந்த ஐநா அறிக்கை.
நாம் ஒன்று பட முதலில் நாம் அனைவரும் ஒரு நேர்மையான சுய விமர்சனம் செய்ய வேண்டும். அதன் பின்னாக நாம் விரும்பபும் ஒற்றுமை தன்னால் வரும்!
தமிழ் மாறன், வீரன், துரை, ஜீவன், நந்த்தன், துரை, செல்வன், குமார் போன்ற அனைவரும் இதற்குப் பதில் சொல்லாமே ? விதண்டா வாதங்களை விட்டு விட்டு தேவையான விடயத்துக்கு வாருங்கள்.
ஒன்றிணைவு என்பதன் அா்த்தம் வீதியில் ஒன்றாக நின்று கொடி பிடிப்பதை மட்டும் கருத்தில் கொள்வது அா்த்தம் அல்ல, காலத்தின் தேவையறிந்து பழய புண்ணையே நக்கிக்கொண்டிராது மனரீதியில் உண்மையாக செயல்படுவதையே குறிப்பிடுகின்றோம்.
அதாவது நன்மை செய்யாவிட்டாலும் உளவாளிகளாகவும் துரோகிகளாகவும் இல்லாமல் இருப்பதும் ஒன்று படுவதாகவே நான் எண்ணகிறேன்.
13 வது சரத்தின் அடிப்படையில் தீா்வு என்பது ஒரு யாப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் தோ்தலில் யார் வெல்கின்றார்களோ அவா்கள் ஆட்சி நடத்தலாம் இது சாதாரண விடயம் ஆனால் அதை கூட்டமைப்பிடம் கொடுக்கமாட்டோம் டக்ளசிற்கும் ஒரு துண்டு கொடுப்போம் என்று அரசாங்கம் நாடகம் ஆடுகின்றது,டக்ளஸ் உண்மையில் தமிழ் இனத்திற்காக போராட புறப்பட்டவராயின் ஏன் அவரது நண்பா் ராயபக்சவிற்கு கூறமுடியாது பரவாயில்லை பிரச்சனையை தீருங்கள் என்னைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்று?இதிலே அவா்கள் தமிழரை பகடைக்காயாக பயன்படுத்தி மீண்டும் குழப்புவதற்கு முயல்கின்றார்கள் இப்படிப்பட்ட விடயங்களை உணா்ந்து செயல்படுவதே ஒரு குடையின் கீழ் வருவது.
துரை எனும் தத்துவஞானியையும் நீங்கள் எங்களோடு இணத்தது அவரை அவமானம் செய்வதாகும்.
சபா நாவலன் இன்னொரு காசிஆனந்தனாக உணர்ச்சி வழிந்தோடப் பேசுகிறார். அருமையான அடைமொழிகளுடன்> இரத்தம் கொதிக்க வைக்கலாம் யாருக்கு? உலகத்தின் நாலாவது இராணுவத்தை வெற்றிகொண்ட புலிகள் ஏன் இந்த இலங்கை இராணுவத்திடம் தோற்றுப்போனார்கள் என்று உளம்கொதித்துக் கிடக்கும் அதே மறத்தமிழர்களுக்கு. உங்கள் கட்டுரைக்கு உணர்ச்சியூட்ட தமிழ் பெண்களை அவமானப்படுத்த வேண்டாம். கணவனை இழந்து> உறவுகளை இழந்து வன்னிப் பெண்கள் இன்றும் மனம்தளராமல் முன்னோக்கிச் செல்லத் துடிக்கிறார்கள். அரசாங்கத்தின் தகரக்கொட்டிலில் வெக்கை தாளாமல் இருந்தபோதும்> புலம்பெயர்ந்தவர்களை நம்பமாட்டார்கள். ஆயுதங்களுக்கு அள்ளிக்கொடுத்த தமிழர்கள் தங்கள் இனத்திற்கு தன்மானத்தை கற்றுக்கொடுக்க மட்டும் ஆயத்தமாக இருக்கிறார்கள். இலங்கை மீது பொருளாதாரத் தடையைக் கொண்டுவர ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள். அது நிறைவேறினால் எமது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற நாகரீகமான ஐரோப்பிய இராணுவத்திற்கு உடலை விற்கலாம் என்பீர்களோ? கட்டுரையாளரே இன்னமும் நீங்கள் நிதானமாகச் சிந்திக்காவிட்டால்> உங்களை புலிகளுடன் சேர்ப்பதா? அல்லது உளவாளி என்று நினைப்பதா? அல்லது இலங்கையின் அழிவை விரும்பும் எதிர்ப்புரட்சியாளர் என்று நினைப்பதா?
என்றாலும் நீங்கள் ஓர் மாக்சியவாதி. ஆனால் மார்க்ஸ் காலத்தில் நின்று பேசுகிறீர்கள். யதார்த்த காலத்திற்கு வந்து மார்க்ஸ் கருத்துகளைப் பற்றி யோசியுங்கள். உங்களை அப்படி யோசிக்கவிடாமல் தடுக்கிறது தமிழ்தேசிய வெறி. அப்பாவிகளின் பிள்ளைகளை இனிமேலும் அழிப்பதற்கு வழிகாட்டாதீர்கள். அவர்களும் படித்து> பட்டம்பெற்று கொஞ்சம் வசதிகளுடன் வாழட்டும்.
யார் 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்படவில்லை?
யார் 30 வருடகால யுத்தத்தில் தம் உறவுகளை இழக்கவில்லை?
யாருக்கு இலங்கை நாட்டில் உறவுகள் இல்லை?
யார் தம் உறவுகளுக்கு பணம் அனுப்பாமல் அவா்களை பட்டியினில் விட்டுள்ளார்கள்?
புலிகழுக்கு பணம் கொடுத்தவா்களில் எத்தனைபோ் உண்மையில் விரும்பி கொடுத்தார்கள்??
இவைகளைப்பற்றி ஏதாவது தெரியுமா?
என்ன புலம்புகிறீா்கள்!! நாங்கள் இங்கே எமது தனிப்பட்ட கண்ணீா்க்கதைகளை சொல்ல முடியாது, அதன் தேவையுமில்லை அழிந்தது அழியப்போவது சகோதரா்களால் அழிக்கப்பட்டது எதிரிகளால் அழிக்கப்பட்டது யாவும் அறிவோம் ஆனால் மனிதன்பூமியில் வாழும் வரை போராடவேண்டியே உள்ளது வயிற்றை நிரப்புவதற்காக அடிமைகளாக வாழ்ந்து முடிக்கமுடியாது அவ்வளவுதான்.
நான் வெளிநாட்டிற்கு வந்ததும் எனது சகோதரா் வரமுடியாமல் போனதும் நாங்கள் செய்த குற்றம் இல்லை அது காலத்தின் செயல் இதில் யாரை யார் நோவது.
விபச்சாரம் என்றவுடன் ஏனோ இந்த மண்டைகள் உடனே பெண்களையே முன்னிறுத்துகின்றார்கள் இலங்கையில் 20 வீதமான விபச்சாரிகள் ஆண்கள் என்று புள்ளிவிபரம் சொல்கின்றது அதாவது உல்லாசப்பயணிகள் இலங்கையை நாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
என இனிய நண்பர் என்னை நீ ஒரு செம்மறீ என்றூ சொல்லுவார் இன்னொருவர் சரியான ட்யூப் லைற் என்பார்.அன்பாக வைகிறார்கள் என நான் அர்த்தம் புரியாமல் சந்தோசப்பட்டிருக்கிறேன்.இப்போது இணயங்கள வாசிக்கும் போதுதான் நான் அதை அனுபவ பூர்வமாய் உணர்கிறேன்.
இலங்கையின் இந்த நிலைக்கு காரணம் சிங்கள பவுத்த பயங்கர பேரினவாத வெறி.வரலாறு நெடுக சகதியாய் இருப்பது தமிழினத்தின் குருதி.மார்க்சியப்படியே பார்ப்போம். உணர்ச்சிக்கவிஞர்களோ கட்டுரையாளர்களோ ஆயுதம் தரித்தவர்களோ தானாகத் தோன்றிவிடுவார்களா?விடுதலைக்கருத்தியல் தாய்ப்புலத்தில் இருந்தாலும் அயற்புலத்தில் இருந்தாலும் உற்பத்திஉறவுகள் இழப்பு ,தாய்புலத்தில் இருந்து விரட்டியடிப்பு போன்றவைகளினால் வலுவடையவே செய்யும்.வரலாற்றுப்பொருள்முதல்வாதஅடிப்படையில் சிங்களம் முற்போக்கூக்கூறுகளுடன் இயங்கியிருந்தால் தமிழ்தேசியசிக்கல் தீர்ந்திருக்கும்.இப்பொழுதூட காலம் கடந்துவிடவில்லை.இனி இதைவிட பேராபத்துக்கள் வரும் .
தேசியத்தை வரையறுப்பதில் அடிநாதமாய்த் திகழ்பவை தனிமொழி .பண்பாடு,பொருளியல் ,நிலவியல் ,வரலாறு என்பவையே.இந்தஅடிப்படையை சிங்களம் உணராமல் பேரினவாதவெறியாட்டத்தை 1900 தொடக்கம்தமிழ்இசுலாமியர் மீதானதாக்குதல் தொடங்கி தமிழினம் இருக்கும் வரை மறக்கமுடியாத அளவுக்கு நடத்தி முடித்துவிட்டது.இலங்கை ஒருநாடாக இருக்கவாய்ப்பே இல்லை.அப்படிக்கட்டிக்காத்து தமிழினத்தை சிங்ங்களத்துக்கு காவுகொடுத்துவிட்டோம்.கட்டிக்காத்து சாதிக்கப்போவது என்ன?இனவாதம் வளர்ந்து இன்னும் பல முள்ளிவாய்கால்களையும் இன்னும் பல வலுவான போராளிக்குழுத்தலைமையையும்தான் உருவாக்கும்.அது ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஆபத்தாகவேமுடியும்.இப்பொழுதுகூட போர்குற்றவழக்கு தண்டனை தனிநாடு இரட்டை ஆட்சி எதுவுமே இன்றி இலங்கை தப்பிவிடவாய்ப்பே இல்லை.ஒருக்கால் அப்படித்தப்பினாலும் பாதிக்கப்பட்ட தமிழினம் சிங்களத்தை அழித்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.தமிழகத்தின் நிலை இன்று போல் நாளை இராது.இந்தியப்பெருங்கடலில் சிங்களத்தின் எதேச்சதிகாரப்போக்கு தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.1950கள் தொடங்கி சிங்களத்தின் தமிழின அழிப்பு எண்ணிக்கை அதிகரித்து வளர்ந்து வரவர தமிழினத்தின் விடிதலைப்போராட்ட வீச்சும் வடிவும் பண்புக் கூறுகளும் மாறிவந்துள்ளது.தமிழர்களுக்கு போரில் கிடைத்த தோல்வியை மிகச்சாமர்த்தியமாக இராசதந்திரப்போராக மாற்றிவிட்டுள்ளனர்.ஆயுதரீதியாக இலங்கையை வீழ்த்தியிருக்கக்கூடிய புலிகள் அதை ஏன் செய்யவில்லை.அதற்காக வீராப்புடன் சிங்களம் முரண்டு பிடிப்பதும் ஒட்டுமொத்த தமிழ் சிங்கள இனங்களுக்கு நல்லதல்ல.சிங்களத்துக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.இனி இருவரும் உட்கார்ந்துபேசி தோழமையுடன் பிரிந்து செல்வதே இரு தேசியினங்களுக்கும் நல்லது.இறையாண்மை அது இது ஒருநாடு என்றெல்லாம் பேசி காலத்துக்கும் இவற்றை வைத்திருப்பது இந்தியா போன்ற நாடுகள் குளிர்காயத்தான் உதவும்.ஒருநாட்டின் அனைத்துத்துறைகளிலும் அனைத்து இனமக்களும் இடம் பெற வேண்டும்.இலங்கை மிக எனிதாக மாட்டிக்கொள்ளும் அளவுக்கு பல கொடுரங்களை நிகழ்த்திவிட்டது.1900 தொடக்கம் கூட இப்பொழுது வந்துள்ள அறிக்கை கொண்டு விசாரிக்க பன்னாட்டுச்சட்டங்கள் இடமளிக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.இன்னும் பல காலங்கள் கடந்தாலும் போர்க்குற்ற வழக்கை நடத்தி தண்டனை கொடுக்கவும் விடுதலை பெறவும் வழி இருக்கிறது.மேற்குலகம் முடிவெடுத்தால் இலங்கைச்சிங்களத்தின் நிலை மிகமோசமாகும்.அரபுநாடுகளைப்போல இலங்கையின்மீது கடும் நடவடிக்கைகள் தாக்குதல் கூடநடக்க வாய்ப்பு உள்ளது.ஆனால் அதிலிருந்து தமிழர்க்கான தாயகம் என்ற தீர்வின் மூலம் இலங்ங்கையை காப்பாற்றலாம்.ஆனால் இராசபக்சேபோன்றவர்களை காப்பாற்ற இயலாது.இன்னும் பல அதாவது இலங்கைப்போரின்இறுதிக்கட்டத்தின் போது சிங்களம் தமிழர்க்கு செய்த கொடுமைகள் உலகைஅதிர்ச்சிக்கு உறைநிலைக்கு கொண்டுசெல்லக்கூடியவை வரக்கூடும் என்ற பேச்சு உள்ளது .அப்படி வந்தால் இலங்கையின் நிலைமிகமோசமாகும்.நம்புவது.தேரைஇழுத்து தெருவில்விடும் வேலையைத்தான் இந்தியா செய்யும்.சிங்களப்பொதுப்புத்தி பாவம் தமிழர்கள் அவர்கள் நாட்டை அவர்கள் கேட்கிறார்கள் என்று எளிதாக வந்துவிடும்.போரினால் அவர்களும் பேரிழப்புக்களை சந்தித்திருக்கிறார்கள்.சனநாயகத்தன்மைகளுடன் இரு தேசியினங்களும் அணுகினால் தத்தம் பகுதிவாழ் சிங்களர் ,தமிழர் ,தமிழ் இசுலாமியமார்க்கத்தினர் மலையகத்தமிழர்கள் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும்.தமிழனம் ஓர்ஒருமைக்குள் வரவேண்டும்.இருதேசிய இனங்களை உள்ளடக்கிய இரு நாடுகளுக்கும் நல்லது.ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரச்சனை தீர வாய்ப்புஇல்லை.பிரச்சனைகள் கூடத்தான் வாய்ப்பு உண்டு.
இனி ஒரு இலங்கை மக்களின் நிலையை விளங்கிக் கொள்ளவில்லை. தேவை இல்லாமல் இன்னும் போராட்டம் புரட்சி என்று எழுது கிறார்கள். மக்கள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறார்கள்.
please let us tamils in sri lanka be, mahidha and the government want to resolve tamils issues. we can do it witth them.
ஆக, “ஒரு குடையின் கீழ் இணைதல்” என்பது மட்டும் போதுமானதா?
எ
ன்பது மிகப்பொருத்தமான கேள்வி. குடைச்சொந்தக்காரன் யார்? குடையைப்பிடிப்பவன் யார்?
என்பது அறியாமலேயே குடைநிழலில் ஒதுங்கியவர்கள் கதி அதோகதியாய்ப்போன பலநிகழ்வுகள் எம்முன்நடந்தேறிப் போயிருக்கிறது. பலதடவைகளில் ஒரு குடையின் கீழ ஒன்றாதல் என்பது குடைக்காரனுக்கு அடிமையாதல் என்பதே பொருளாக நாம் அவதானிக்க முடிந்திருக்கிறது. மதக்குடை,மொழிக்குடை,கலாச்சாரக்குடை,என்று பல பெருங்குடைக்காரக் கொம்பன்களும் சரி,தனிக்குடைக்கார லும்பன்களும் சரி தங்கள் நலனுக்காக மானிடமேன்மையை தங்கள்தங்கள் காலடிக்கீழ் நசிக்கிற கருப்பொருளாகவே இந்தக் குடைகளைக் காவி வந்திருக்கின்றார்கள்.இப்படிதான் புலிக்குடை முதலாளிகள் வீழ்ந்தபோது புகலிக்குடைநிழலில் நின்றவர்களும் குடைசாய்ந்து போனகதை. முன்னர் ஒரு முஸ்லிம் மந்திரி அடிக்கடி இப்படிச் சொல்வார்.”நாம எல்லாரும் முன்னுக்கு வந்து ஒண்ணுக்கு நிக்கணும்” என….இப்படியக எல்லாரும் தமிழர்தலையில் ஒண்ணுக்கு இருந்து அவர்கள் தலைவிதியை நாறப்பண்ணியதுதான் கண்ட மிச்சம். இன்னும் ஒரு குடையின் கீழ்திரண்டு எதைப் பிடுங்கப் போகின்றார்கள்..
சிங்கள தேசிய இன ஒடுக்குமுறையும் அதற்கெதிரான தமிழர் எதிர்ப்பும் தொடர்கிறது. வடக்க> கிழக்கு பகுதிகளில் இராணுவ நிர்வாகமே நடைபெறுகிறது. கிராமங்கள் இராணுவத்தின் பிடிக்குள் சிக்கிக் கிடக்கிறது. துணைப்படைகள் நிழல்களாய் திரிகிறார்கள். இந்த நிலைமைகளின் கீழ் வாழும் மக்கள் பற்றி மேலதிகமாக எதை எழுதுவது? நிலைமைகள் மோசமடந்து வருகின்றன. சாதாரண மனித நடமாட்டமும் இராணுவ கண்காணிப்பில் கீழ் நடைபெறும் கிராமங்களும் உள்ளன. தொலைது}ரக் கிராமங்களில் ஊடகங்கள்-நீதி – சட்டம் – காவலதுறை எதுவுமே செல்லாக்காசுகள்.நிலைமை எவ்வளவு விபரீதமானது? தமிழர்கள் அழிவைச் சந்தித்தோம் இனி வாழ்வோம் என எழு விடமாட்டார்கள் போலவே நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இனப்பிரச்சினை உணர்வுபூர்வமானதாகவே இருந்து வருகிறது. ஒடுக்குமுறையைக்குத் துணைபோகிற சிங்கள மக்களுக்கும் அது பொருந்தும் என்பதே இலங்கை வரலாற்றின் சாரம்சமாக இருக்கிறது. மாக்சிஸ்ட்டுக்கள் இனரீதியாகப் பிளவுண்டு சிங்கள – தென்னிலங்கை மாக்சிஸ்ட்டடுக்களாக இருக்கின்றனர். தமிழ் மாக்சிஸ்ட:டக்கள் போராட்ட மறுப்பியல் சித்தாந்தத்துடன் தங்கள் வாழ்வை தக்கவைத்துக் கொள்ள போரடி வருகிறார்கள். முற்போக்குவாதிகள் செயற்றிறன் அற்ற விமர்சனவாதிகளாவே இருந்து வருகிறார்கள். ஆயினும் சுமூக இயக்கம்’ நிறுத்தப்படுவதில்லை. மக்கள் போராடவேண்டியிருக்கிறது. முன்னர் புலிகளுடன் முரண்டு பிடித்தும் – ஆதரித்தும் இனவிடுதலைக்காகப் பாடுபட்டார்கள். இன்று தேசியவாதிகள் தலைமையை நம்பி வாக்களித்து வாழ்கிறார்கள். எது எப்படியோ மக்கள் விடுதலை-சமூக இயக்கம் தனிமனிதர்களின் சிந்தனையின் சாரம்சமாகவோ – து}ய்மையானதாகவே இருப்பதில்லை என்றே நினைக்கத்தோன்றுகிறது. சனநாயக வாதிகள் ஐ.நா அறிக்கையிலிருந்து ஆரம்பித்து – சனநாயக முறையில் பேச்சுவார்ததையின் மூலம் இன நெருக்கடியினைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதென்பது தற்காலத்தில் சாதகமானதும் சாத்தியமானதுவுமாக இருக்கும். இந்தப்புள்ளியில் தேசியவாதிகள்-முற்போக்குத் தேசியவாதிகள்-புரட்சியாளர்கள் -. சனநாயகவாதிகள் சகலரும் ஒன்றிணையலாம். மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடுகின்ற களமொன்று உருவாக்கப்படும். மனித சமூகம் சில முன்னேற்றங்களைப் பெற்றுக் கொள்ளும். விஜய்
நாவலன், உங்களைப் போன்றவர்கள் ,பழையதில் குறை காண்பதைத் தவிர்த்து , எமது சமூகத்திற்கான புதிய செயர்ப்பாடுகளையும், கருத்துரையடல்களையும் முன்வையுங்கள். தயவு செய்து இந்த வலைத் தளம் ஆவது ,சரியானதை நோக்கி பயணிக்கட்டும். . அதற்காக தகுந்த வழிமுறைகளை , மார்க்சியத்தில் உள்ள நடைமுறை சார்ந்த , எமது சமூகத்திற்கும் ,தேசத்திற்கும் உகந்த விசயங்களில் முனைப்புடன் ஈடுபடுங்கள். அனுபவம் தான் வாழ்முறையை சொல்லித்தரும். ஒரு போராளியால் தான் சுயநலம் அற்று சிந்திக்க முடியும். உங்கள் துடிப்புக்கு என் வழ்த்துக்கள்.