பயங்கரவாதத்தை இல்லாதொழித்த மதிப்பைப் பெற்றுக்கொள்ளும் முழுமையான தகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கே உரித்தானது என்று இலங்கையின் புதிய பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரனில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனவின் அணியில் முக்கிய தலவரும் நாட்டின் பிரதமருமான ரனில் இனப்படுகொலை நடத்திய மகிந்த ராஜபக்சவை இவ்வாறு பாராட்டியுள்ளார்.
தனது உரையில் மேலும் தெரிவித்த ரனில், மக்கள் புதிய அரசியல் கலாச்சாரத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.
ரனில் மற்றும் மைத்திரி கூறும் புதிய அரசியல் கலாச்சாரம் இனப்படுகொலையையும் கொலையாளியையும் புனிதப்படுத்தும் முயற்சியில் ஆரம்பித்துள்ளது. லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மனிதப்படுகொலையைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்சவிற்கு ரனில் வழங்கும் மதிப்பு இன்னொரு இனப்படுகொலையையும் நடத்தத் தயார் என்ற செய்தியை மக்களுக்குச் சொல்கிறது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம்பிரித்தானியாவின் ஆளும் பிற்போக்கு அரச கன்சர்வேட்டிவ் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரித்தானியா சென்ற ரனில் அங்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனத் தெரியவருகிறது.
பிரித்தானியாவில் கன்சஎவேட்டிவ் கட்சியின் அதிகாரத் தரகரும் ரனிலின் நண்பருமான நிர்ஜ் தேவா ரனிலுடன் கலந்துகொண்ட உரையாடல்களின் ஆதாரங்கள் வெளியாகின.
நிர்ஜ் தேவா இயக்கும் அரசியல் கலாச்சாரம் யாழ்ப்பாணக் குடாநாட்டை நாசப்படுத்தி வருகிறது.
ரனிலின் நீண்டகால நண்பரான நிர்ஜ் தேவா இலங்கையின் பல வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலுள்ளார். குறிப்பாக சுன்னாகம் அனல் மின் நிலையத்தை நடத்தும் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுத்தமான நீரை நச்சாக்கிப் பேரழிவை ஏற்படுத்திவரும் இந்த நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளால் யாழ்ப்பாணம் நீர்வளமற்ற பிரதேசமாக மாறி வருகிறது.
ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் உறுப்பினரான நிர்ஜ் தேவா தனது பதவியைப் பயன்படுத்தி இலங்கையில் விதைத்துள்ள அரசியல் கலாசாரம் ஆபத்தானது.
வெலிவேரியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவிச் சிங்கள மக்கள் மீது துப்பாக்கிப்பிரையோகம் நடத்துவதன் பின்னணியில் செயற்பட்ட ஹேலிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் நிர்ஜ் தேவாவும் ஒருவர்.
ஆக, புதிய அரசியல் கலாச்சாரம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் அதன் பயங்கரவாதத்தைக் நிறுவியுள்ளது.








முதலில் இலங்கை முதலாளித்துவ அரசுக்கு இனப்பிரச்சினை தொடர்பில் இருந்த தீர்வுகள் என்ன? தமிழீழம் என்பது ஒரு அரசை “நீ இனிமேல் இங்கே அரசாக இருக்காதே” என்று சொல்வதாகும். இதனை சோசலிச அரசகள் தவிர்ந்த யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். (சோசலிச அரசுகளே பல தடவைகளில் ஏற்றுக் கொள்ளவில்லை.) இந்நிலையில் தமிழீழம் தான் என்று ஒரு அமைப்பு (புலிகள்) விடாப்பிடியாக இருந்தால் ஒரு முதலாளித்துவ அரசுக்கு உள்ள தெரிவு என்ன? அந்த அமைப்பை அழிப்பது தானே. இதனை சகல முதலாளித்துவ அரசுகளும் செய்யும். புலிகள் மிகவும் பலமுள்ளவர்களாக இருந்ததினால் அமெரிக்கா இந்தியா சீனா ஐரோப்பா என்று பலர் இணைந்து இதனைச் செய்தார்கள்.
முதலாளித்துவ அரசுகள் இதனைத் தான் செய்யும். மகிந்த செய்தது புதியது அல்ல. ஆனால் தனிநபர்களும் அவர்களது ஆளுமைகளும் வரலாற்றையோ அதன் போக்கையோ மாற்றாவிட்டாலும் வரலாற்றின் சம்பவங்கள் இடம் பெறும் வழிகளில் தாக்கம் செலுத்துகின்றன.
ரணில் இருந்திருந்தால் அதிகளவில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். சில வேளைகளில் வடக்கு மாகாண சபை கிழக்குடன் இணைந்தே இருந்திருக்கலாம். அதன் செயற்பாடுகள் தொடர்பில் சற்றுத் தாராளமனதுடன் அரசு நடந்திருக்கலாம். ஆனால் புலிகளின் அழிப்பும் அது நடக்கையில் தமிழ் பேசும் மக்களின் அழிப்பும் நடந்தே இருக்கும். (எண்ணிக்கைகளில் வேறுபாடு இருந்திருக்கலாம். அவ்வளவே)
இப்போது மக்கள் வாக்களித்திருப்பது முதலாளித்துவ அரச முறைக்குள் சிறு வேறுபாடுகளிற்காக மட்டுமே.
இலங்கையில் புலிகள் அழிக்கப்படாத்திருந்தால் இலங்கை மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா? இவ்வாறு ஒர் சுமுகமான தேர்தல் நடைபெற்றிருக்குமா? தமிழ்மக்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளரை
ஜ்னாதிபதியாக்கி இருக்க முடியுமா?
புலிகள் இருந்திருந்தால் இன்று எத்தனை மாவீரர்களையும் உருவாக்கி தமிழ் சிங்கள மக்களையும் கொன்று குவித்திருப்பார்கள்.
அங்குள்ள மக்களே இலங்கையின் பிரச்சினையை தீர்ப்பார்கள்.
புலம்பெயர் ஊடகங்கள் இலங்கைத்த்தமிழரின் விடயங்களில்
தலையிட்டு சுயநலம்காணும் தமிழ்ர்களை கண்காணித்தால் போதுமானது.
are you rejoicing the genocide or eradication of LTTE leadership?
கிட்லரை அழிப்பதற்காக மேற்கின் கூட்டுப்படைகள் வன்னியிலும்
மோசமாக மக்களை ஜேர்மனியில் போரில் குண்டுகள் போட்டு
கொன்றார்கள். ஜேர்மனியர் அதன் நியாயத்தை ஏற்ரார்கள்.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பினார்கள்.
இந்த அழிவிற்கு புலம்பெயர் தமிழர் எத்தனை பேர் உடந்தையாக
இருந்தார்கள் என்பதை அறிந்துவிட்டீர்களா?
##அங்குள்ள மக்களே இலங்கையின் பிரச்சினையை தீர்ப்பார்கள்.##
அதுதான் புலிகள் ஒழிக்கப்பட்டு ஆறு வருடங்களில் அங்குள்ள மக்களும் தலைவர்களும் சேர்ந்து பிரச்சனையை தீர்த்து விட்டார்கள் . இனி , சந்திர மண்டலத்துக்கும் செவ்வாயிற்கும் போகும் பிரச்சனை ஒன்றுதான் பாக்கியிருக்கிறது . இந்த புதிய அரசுடன் பேசி அந்த பிரச்சனையையும் தீர்த்து விடலாம்..
காணிஅதிகாரம் பொலிஸ் அதிகாரம் கேட்டார்கள் கிடைக்கவில்லை
உண்மைதான். இப்போ மைத்திரிக்கு வாக்களிக்கச் சொன்னார்கள்.
கேட்ட அதிகார்ங்கள் கிடைக்குமா அல்லது அவர்களில் யாருக்காவது
மந்திரி பதவி கிடைக்குமா? மாகாணசபையில் நடந்த போர்
பார்ர்கவில்லையா? தமிழர்களின் நலன்களில் அக்கறையற்ர தமிழ்
தலைவர்கள் தமது பெயரையும் புகழையும் சொத்துகளையும்
பாதுகாப்பதற்கு தமிழரை ஏமாற்றுவதை முதலி நிறுத்தவேண்டும்.