இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதன் ஊடாகவே ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என பாரதீய ஜனதாக் கட்சி தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளர். இந்திய அரசாங்கம் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதையே இதுவரை தனது வெளியுறவுக் கொள்கையாக மேற்கொண்டு வந்ததால் தொடர்ந்தும் அது கடைப்பிடிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஈழப் போராட்டத்தை அழிப்பதிலும் தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் அகதிகளை கிரிமினல்களாக அடைத்து வைப்பதற்கும் ஆணையிட்ட ஜெயலலிதா மத்திய அமைச்சரவையில் தனது கட்சியை இணைப்பதற்கான வாய்ப்ப்புக்கள் காணப்படுகின்றன.
அடிப்படையில் சுய நிர்ணைய உரிமைக்கு எதிரான இவர்களின் இணைவு ஈழப் போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழிப்பதற்கே துணை செல்லும்.
அரசியல் நிலமைகள் குறித்து அப்பட்டமான பொய்களைக் கட்டவிழ்த்துவிடும் தமிழ் ஊடகங்கள் பல ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் பேரால் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பு நிலைக்கு வந்து சேர்கின்றன. மக்களுக்கு உண்மையை மறைக்கும் விதேசிய ஊடகங்களான இவை மக்களைப் போராட விடாமல் தடுக்கின்றன. அதிகார வர்க்கங்களையும், அரசுகளைகளும் நம்பியிருக்காமல் மக்கள் போராட்டத்தை மீளமைக்க வேண்டும், தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு போராட்டம் முன்னெழும் போது அது வெற்றியை நோக்கி நகர்த்திச்செலப்படும்.