பாசிஸ்ட் அமைப்பான பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பானது கோத்தாபய ராஜபக்சவிற்கு பௌத்த சாசன அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்க்சி விடுத்துள்ளது. ஹில்டரின் ஜேர்மனிய காலத்தில் யூதர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட சுலோகங்களுக்கு நிகரானவற்றை முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கும் பொதுபல சேனா அமைப்பின் பின்புலத்தில் இனக்கொலையாளி கோதாபயவும் அன்னிய சக்திகளும் செயற்படுகின்றன.
பௌத்த சாசன அமைச்சு பௌத்த மக்களுக்கு உரிய முறையில் சேவையாற்றத் தவறியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயம் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த சாசன அமைச்சைப் பாதுகாக்கும் பொறுப்பை பாதுகாப்புச் செயலாளரே சிறந்த முறையில் நிறைவேற்றுவார் என அவர் தெரிவித்துள்ளார்.









தமிழர்களுக்கு சுலபமாக கிடைத்த ஈழத்தை தவற விட்ட மூடர்கள் விடுதலைப் புலிகள்!
விடுதலைப் புலிகள் இந்திய – இலங்கை உடன்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தார்களேயானால் மிகச் சுலபமாக ஈழத்தை அடைந்திருக்க முடியும். தனியான நிர்வாகத்தை கோருவதற்கு வசதியான 13 ஆவது திருத்தத்தை அவர்கள் அப்போது சரிவரப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தாரே .அவர் நல்லவர் என்றூ பிக்குக்கள் நினைப்பது தப்புத்தானே..அப்போ தப்பு என்பது சமுகம் விடும் தப்புத்தானே
Genocide is a word with meaning. It can have serious consequences in any country in this world now. Tine is the best healer for anything and everything.