வன்னிப் இனவழிப்பின் போது இலங்கை அரசிற்கு இந்திய அரசு வழங்கிய ஆதரவின் தொடர்பாளராகச் செயற்பட்ட சிவசங்கர் மேனன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் செய்தி ஒன்றுடன் எதிர்வரும் 09 ஆம் திகதி இலங்கை செல்கிறார்.
அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்;;து, 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட உள்ளதாக உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வந்குமார் சிங்ஹா கலந்து கொள்ள உள்ளார்.
சிவசங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தமழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
Shri Shivshanker Menan may be expecting a diplomatic break through like what he had once at Sham El Skeik in Sinai, Egypt.