Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

இனியொரு... by இனியொரு...
11/13/2013
in இன்றைய செய்திகள், அரசியல்
0 0
14
Home இன்றைய செய்திகள்

lycaபிரித்தானியாவில் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் பல மில்லியன் பெறுமானமுள்ள வியாபாரம் லைக்கா மோபைல் குழுமம். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடின் முக்கிய பங்குதாரர்கள் லைக்கா மோபைல் என்ற தகவலை கோப்ரட் வாச் என்ற இணையம் வெளியிட்டுள்ளது.
டொரிக் கட்சி என்று அழைக்கப்படும் டேவிட் கமரனின் பழைமைவாதக் கட்சிக்குப் பெருந்தொகை நன்கொடை வழங்குபவர்களான லைக்கா மோபைல், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய வர்த்தக மன்றத்தின் முதல்தர பங்குதாரர்கள் என்ற தகவலை கோப்ரட் வாச் வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் மருமகன் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனமொன்றின் 95 வீதமான பங்குகளை லைக்கா குழுமத்தைச் சேர்ந்த Hastings Trading e Serviços Lda என்ற போத்துக்கல் நாட்டு நிறுவனமான வாங்கியது.

அதனைத் தொடர்ந்து இலங்கையில் 2007 ஆம் ஆண்டில் 2G வயர்லஸ் சேவைக்கான உரிமத்தை லைக்கா பெற்றுக்கொண்டதாக அந்த இணையம் குறிப்பிடுகிறது. அதனைத் தொடர்ந்து லைக்கா குழுமத்தால் நடத்தப்படும் லைக்கா பிளை என்ற விமான முகவர் நிலையத்தை சிறீலங்கன் ஏர்லைன்ஸ் தமது பிரதான பங்குதார்களாக அறிவித்தது. ராஜபக்சவின் மைத்துனரே சிறீலங்கன் ஏர்லைன்சின் தலைவர் என்பதையும் இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
போருக்குப் பின்னான காலத்தில் பிரபல வியாபாரமாக மாறிய உல்லாசப் பயணத்துறை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட லைக்கா குழுமம் இலங்கையில் உல்லாசப் விடுமுறையக் களிப்பதற்கான முகவர் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளது.
லைக்கா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களை கோப்ரட் வாச் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது அவர்கள் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கோப்ரட்வாச் இணையம் வெளியிட்டுள்ள செய்தி ‘தேசியம்’ எவ்வாறு சுரண்டுவதற்கான கருவியாகப் பயன்படுகிறது என்பதை தெளிவாக உணர்த்தும் வகையிலுள்ளது.

அதிகாரத்திலிருப்பவர்கள் ஒருதடவை மூச்சுவிட்டாலே நுறுதடவை பெருமூச்சுவிடும் தமிழ் ‘தேசிய’ ஊடகங்கள் லைக்கா மொபைல் குறித்த செய்தியை இருட்டடிப்புச் செய்துள்ளன. பல இணையங்களில் லைக்காவின் விளம்பரங்கள் தொங்குவதைக் காணலாம்.
பிரபல பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மாணவர் ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு முன்னர் புலி ஆதரவு அமைப்புக்களாகச் செயற்பட்ட இந்த அமைபுக்களுக்கு லைக்கா குழுமம் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் பவுண்ஸ் வரையிலான பணத்தை வழங்குகின்றன. சில பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்களின் இணையங்களில் லைக்கவிற்கான இலவச விளம்பாங்களைக் காணலாம். http://www.su.nottingham.ac.uk/societies/society/tamil/

இது தவிர, பிரிடிஷ் ஏஷியன் ரஸ்ட் என்ற தன்னார்வ நிறுவனத்தின் முக்கிய நிதி வழங்குனர்கள் லைக்கா குழுமம். அதன் தலைவராக்விருப்பவர் இளவரசர் சார்ள்ஸ். பிரித்தானியாவில் வசிக்கும் ஆசியப் பணக்காரர்களால் தோற்றுவிக்கபட்ட பிரிட்டிஷ் ஏஷியன் ரஸ்ட் இந்த வருடம் பெப்ருவரி மாதம் 13 ஆம் திகதியன்று ஆசியப் பணக்காரர்களின் ஒன்று கூடல் ஒன்றை லண்டனில் பெருத்த செலவுடன் நடத்தியது. இந்த விருந்தியில் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அலிராஜா கலந்துகொண்டார். சுபாஸ்கரன் இளவரசர் சார்ள்சுடன் உரையாடும் புகைப்படத்தோடு தமிழ் தன்னார்வ நிறுவனமான ‘தமிழர் தகவல் மையம்’ பதிவு ஒன்றை வெளியிட்டது.

ராஜபக்ச குடும்பத்துடனான லைக்காவின் உறவு, பிரித்தானிய அரசின் உயர்மட்ட ஆதரவு, தமிழ் அமைப்புக்களுடனான தொடர்பு ஆகியன பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

கடந்த காலத்தில் அரசியல் வழிமுறைகள் குறித்த விவாதங்களுக்கு அப்பால் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான உறுதியான ஆதரவும் அதிகாரத்திற்கு எதிரான உணர்வும் காணப்பட்டது. இவற்றைப் பிழைப்புவாதிகள் தமது வியாபார நலன்களுக்காகப் பயன்படுத்திவந்தனர். தமிழ்ச் சமூகத்தைப் போதிய அளவு சுரண்டிக்கொண்ட பிழைப்புவாதத் தலைமையின் ஒருபகுதி தப்பியோடிவிட மறுபகுதி மக்களிலிருந்து அன்னியப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்படும் தலைமைக்கான வெற்றிடத்தின் ஒருபகுதியைத் தன்னார்வ நிறுவனங்களும் மறுபகுதியை இலங்கைஅரசு சார்பால லைக்கா குழுமமும் நிரப்புகிறதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

புலம் பெயர் தமிழ்ப் பிழைப்புவாதிகள் லைக்கா குறித்து மௌனம் சாதிப்பது அதனுடனான அவர்களின் உறவை வெளிப்படுத்துவது போன்றது. உண்மைகளை மறைத்து தமது ஆதரவாளர்களுடன் தெருவிலிறங்கிக் கூச்சலிடுவதை மக்கள் போராட்டம் என்று கூறுவது கேலிக்குரியது.

நன்றி : http://www.corporatewatch.org/?lid=5128

மேலதிக வாசிப்பிற்கு :

http://www.ticonline.org/newsdetails.php?id=9

http://www.britishasiantrust.org/

http://www.thesundayleader.lk/2009/11/29/slt%E2%80%99s-wimax-cross-connection/

http://www.lycaflyholidays.com/destinations/indian_sub_continent/srilanka.html

http://sri-lanka.theglobalmail.org/brothers-grip

http://searchthemoney.com/profile/657/2970

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழக அரசின் இரட்டை முகம் அம்பலம் : பழ நெடுமாறன்

தமிழக அரசின் இரட்டை முகம் அம்பலம் : பழ நெடுமாறன்

Comments 14

  1. ப.வரதன்(காஸ்ரோ) says:
    11 years ago

    தமிழ் தேசியவாத ஒட்டுண்னிகள் போல் சிங்கள தேசியவாத ஒட்டிண்னிகளும் உண்டு இலங்கையிள் ஆனால் லைக்கா நிறுவணர் சுபாஸ் தமிழ்பற்று உடையவர்  ஆகையால் சிங்கள தேசியவாத ஒட்டிண்னிகளுடன் சேராமல் சிங்கள முதலாலிகளுடன் சேர வாய்ப்புள்ளது .லைக்கா நிறுவணத்திற்குள் புலி ஆதரவு சக்திகள் அதிகம் .ஆகையால் புலிகள் பிறேமதாசாவுடன் தேன் நிலவுகொண்ட்டாடியது போல் அரச ஆதரவு முதலாலிகளுடன் உள்ளாசம் வைக்கமல் இருக்க  நிமிந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் உள்ள  அரசியள் சானைக்கியம் உள்ள  நபரை வைத்திருந்தாள்  அவரின் வருவாய்கள் நல்ல வழியில் மக்கள் நலனாக போய்சேர வாய்புள்ளது .மாடு புல்லு சாப்பிட்டால் சாணாம்.சாணாம் பின் பசளை என்பது என் கருத்து 

    • Kumar says:
      11 years ago

      இவா் ஞானம் அட்டைகளை காவித்திரிந்தபோது அவருக்கு உதவியாக இருந்து ஐரோப்பா எங்கும் விற்றுக்கொடுத்தவா்கள் புலி ஆதரவு கும்பல் என்பதும்  இவா் சிலவேளை மக்களிடம் சுருட்டிய பணத்திலேயே இந்த லைக்காவை ஆரம்பித்திருக்க வாய்ப்பு உள்ளதால் தேசியவாதிகள் மெளனம் சாதிப்பதில் நியாயம் இருக்கலாம்.அத்தோடு இவருடய  சகா ஒரு சிங்கள இனத்தவரென்றும் அவா் மூலமே வியாபாரம் தென் இலங்கைவரை நீழ்வதாகவும் அறிய

      • ப.வரதன்(காஸ்ரோ) says:
        11 years ago

        தமிழை வைத்து வேற்று மொழிகள் நள்ளாகா சரலமாக பயின்றும்… ஏன் தமிழர்களையே வைத்து தமிழர்கள் பணத்தையே சூறையாடும் கூட்டங்கள் என்னும் நம்மத்தியில் அரச மொழிபேர்பாளர்கள் என்று ஏழை அகதிகளின் பணங்களை சூறையாடுவதை யாரிடம் முறையிடுவது ……….அகதி அந்தஸ்து கூறுபவர்களுக்கு அனைத்து மொழிபேர்ப்புக்களும் இலவசம் உண்டு என்பதை இந்த ஈரோப்பாவில் உள்ள தமிழ் சங்கங்களுக்குத் தெரிந்தும் தமிழர்களுக்கு சங்குதிக்கொண்டு இருக்கும் சங்கங்களின்  திருட்டுகூட்டங்களை எந்த வரிசையில் இடுவது………1993 ம் ஆண்டு அலிராஜா பாஸ்கரன்  எனக்கு மொழிபேர்ப்பு  அகதிகளுக்கு இலவசம் என்று  கூறி நான் அவர் கூறிய இடத்தில் மொழிபேர்த்தேன் .ஆகையால் பிரச்சனை தமிழ் இல்லை .தமிழைவைத்து பிளைப்பு நடாத்துவதுதான் பிரச்சனை  இதை யார் செய்கின்றார்கள்  வேற்று மொழிதெரிந்த தமிழர்களே ஆகையால் லைக்கா சுபாசுக்கு தமிழ்தான் தெரியும் அவர் இலங்கைக்குள் நகர்வது சந்தோசமான செய்தியே ……..மனிமோகனசிங்கை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் லைக்காவை ஆதரிக்காமைக்கு காரணம் மர்மமே

    • Raj says:
      11 years ago

      Neegal nalla sanam sapiduriyal pola..?

      • Dr. Sri S. Sriskanda says:
        11 years ago

        Dr. Pakiasothy Saravanamuthu talked about a Post War Sri Lanka. So we have to look at the things in a different angle from now on. A new perspective. Sri Lankan Tamils are wonderful. It is obvious that the Cash Trail is going to a blind end. Thank you for the information about LYCA anyway.

  2. Uthayakumar says:
    11 years ago

    அப்பூ முதலாளி எண்டு வந்த்திட்டா தமிழ் சிங்கள வேறுப்பாடு எல்லாம் கிடையாது பாருங்கோ. எல்லாம் துட்டாசாமி மயம் தான்

  3. Kumar says:
    11 years ago

    ஒன்றில் மேலுள்ள எனது பின்னூட்டத்தை முழுமையாக விட்டிருக்கவேண்டும் அல்லது முற்றாக நீக்கம் செய்திருக்கவேண்டும்  இப்படி அரைகுறையாக ஏன் விட்டுள்ளீா்கள்.      நீங்களும் யாருக்கோ பயப்படுகிறீா்கள்போலல்லவா தெரிகிறது.

    • admin says:
      11 years ago

      ஒரு  மனிதன்  அவன் சார்ந்த அரசியல் குறித்தே  நாம் இங்கு உரையாடுகின்றோம். தனிமனிதனின்  இயல்புகள்  சார்ந்த  உறுதிப்படுதப்படாத  எதையும்  வெளியிடுவதைத் தவிர்க்கிறோம்.  -நன்றி

      • Kumar says:
        11 years ago

        உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
        சில  மனிதா்கள் சமூக அக்கறை கொண்டவா்களாக தம்மை காட்டிக்கொண்டு அந்தச்சமூக அலகுகளுடன் எப்படி அணுகுகின்றார்கள் என்பதை நேரில் அனுபவித்தவா்களுடன் உரையாடியதன் விளைவே எனது பதிவு தவிர தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.நன்றி

  4. Uthayakumar says:
    11 years ago

    இதனால் தான் சுயநலம் இல்லாத தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பே போராட்டத்தைத் தலைமை தாங்க முடியும்.

    • Dr. Sri S. Sriskanda says:
      11 years ago

      Uthayakumar you know T-56 is the name of a Russian Battle Tank. Then again T-56 is also the name of the Chinese Automatic Rifle. Does that says something to you. World is becoming a better place. No more fighting anywhere anyway.

  5. sakivara says:
    11 years ago

    மாடு புல்லு சாப்பிட்டால் சாணாம்.சாணாம் பின் பசளை என்பது என் கருத்து ”

    அற்புதம்! என்ன ஒரு விளக்கம் , புல்லரிக்கிறது!!

    • Kanna says:
      11 years ago

      மனுசன் கீரை சாப்பிட்டால்….. இப்ப சொல்லண்ணே சக்கிவரா என்ன கிடைக்கும்?

  6. Nadaraja says:
    11 years ago

    http://www.huffingtonpost.co.uk/2013/09/12/lycamobile-corporation-tax_n_3720801.html

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...