ராஜபக்ச என்ற கோமாளித்தனமான கொடுங்கோலன் அப்பாவிச் சிங்கள மக்களையும் முன்னெப்போதும் இல்லாத ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வருவதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். வெலிவேரியப் படுகொலைகளின் பின்னர் வன்னியில் நடைந்தது என்ன என்ற உண்மையை உணர்கிறோம் என சிங்கள மக்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் போது அதிகார வர்க்கங்கள் ஒன்றிணைந்து அதனை அழிக்க முற்படுவது வழமை.
வெலிவேரியாவில் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச நடத்திய அப்பாவி மக்கள் மீதான தாக்குதலால் சிங்கள மக்கள் மத்தியில் எழுச்சிகள் உருவாகும் சூழல் தோன்றிய போது மகிந்தவைக் காப்பாற்றியவர்களுள் முக்கியமானவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன். நவனீதம்பிள்ளையிடம் முறையிட்டு ஐ.நா வரைக்கும் பிரச்சனைகளைத் தான் எடுத்துச்செல்வதாகவும் அதனால் சிங்கள மக்களை அமைதியாக இருக்குமாறும் கோரினார்.
வட மாகாண முதலமைச்சர் சிங்கள மக்களோடு நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு ஒடுக்கும் சிங்கள அதிகாரவர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு மகிந்தவின் முன்னிலையில் தனது சிங்கள அதிகாரவர்க்க மருமகன்களுடன் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இவ்வாறே சிங்கள அதிகாரவர்க்கத்துடனும் இனகொலையாளிகளுடனும் இணைப்பை ஏற்படுத்தும் பல்தேசிய நிறுவனங்களை நாம் காண்கிறோம். லைக்கா அவற்றுள் பிரதானமானது.
மேற்கு லண்டனில் ஹவுன்ஸ்லோவில் அமைந்த்துள்ள ஹம்டன் பாடசாலையில் கடந்த மார்ச் மாதம் 30 உணவு விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவிவை ஏற்பாடுசெய்தவர் வந்துராம்ப காசப்ப தேரர் என்ற இலங்கை பௌத்த பிக்கு. விழாவிற்கு பண உதவியை வழங்கியதற்காக பிரசாத் ரோசா என்பவரும் இன்டிக கமகே என்பவரும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
யாரிந்த பிரசாத் ரோசா?
லைக்கா பிளை என்ற நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனர். லைக்கா பிளை நிறுவனமே விழாவிற்கான முழு செலவையும் பொறுப்பேற்றது. லைக்கா பிளையின் சட்டபூர்வ பங்குதாரர்களில் பிரசாத் ரோசாவும் ஒருவர். 2004 ஆம் ஆண்டிலேயே பிரசாத் ரோசா லைக்கா பிளையின் பங்குதாரராக இணைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடையம். இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை ஐரோப்பாவில் இயக்கும் லைக்கா பிளை 2009 இனவழிப்பின் ஐந்து வருடங்களின் முன்பே இலங்கை அதிகாரவர்க்க வட்டத்துள் நுளைந்துள்ளது. லைக்காவின் தொலைபேசிப் பரிமாற்று அலுவலகம் கொழும்பிலுள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்து லைக்கா தொலை பேசியூடாக நடத்தப்படும் உரையாடல்கள் ராஜபக்சவின் கோட்டையின் ஊடாகவே பயணம் செய்திருக்கின்றன.
லம்ப்டன் பாடசாலையில் நடைபெற்ற லைக்கா பிளையின் “Blend of Delicacies 2014” என்று பெயரிடப்பட விழாவில் கௌரவிக்கப்பட்ட இன்டிக கமகே லைக்கா பிளையில் தகவல் தொழில்னுட்ப முகாமையாளர்.
யாரிந்த பௌத்த பிக்கு
சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தால் சிறுபான்மைத் தேசிய இங்களைக் குறிவைக்கும் நாடு இலங்கை. ராஜபக்ச சிங்கள பௌத்ததைப் பாதுகாப்பதற்கு தன்னைச் சுற்றி ஒரு பிக்குகள் கூட்டத்தை அமர்த்தியுள்ளார். அவர்களுள் வந்துராம்ப காசப்ப தேரர் முக்கியமானவர்.
வன்னிப்படுகொலைகள் நிறைவடைந்து ஆறு மாதங்களுக்குள் மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, சரத் பொன்சேகா உட்பட இனப்படுகொலையாளிகளைப் பாதுகாப்பதற்காக தியான நிகழ்வை லண்டனில் ஏற்பாடு செய்தவரே லைக்கா பணம் வழங்கிய வந்துராம்ப காசப்ப தேரர். அது தவிர ‘நாட்டைக் காப்பாற்றுவதற்கா உயிரிழந்த’ இராணுவத்தினருக்கு இரண்டு நாள் மேலதிக பூஜைகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
உலகின் ஒரு மூலையில் லட்சம் லட்சமாக மக்கள் கொல்லப்பட்ட அதற்காக விழாவெடுக்கும் காசப்பவின் இன்றைய நண்பர்கள் லைக்கா.
பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு பணத்தைத் தவிர வேறு எதுவும் உயிருள்ளதாகத் தெரிவதில்லை. காசப்பவா கந்தையாவா என்று வந்தால் பணம் கறப்பதற்கு பயன்படும் காசப்பவே அவர்களின் நண்பன். இப்போது நடிகர் விஜய் நண்பன். ஆளும் வர்க்கக் கனவிலிருக்கும் சீமானும் நண்பன்.
ஆதாரங்கள்:
http://www.sesatha.co.uk/Event_News/20140301_SL_Food_Festival/index.htm
http://companycheck.co.uk/company/06194960/U-CAN-FLY-LIMITED/directors-secretaries
http://www.defence.lk/new.asp?fname=20090529_10
ஈழத்தமிழர்கள் தமது இலக்கை தீர்மானித்து போராடினார்கள் அதில் வெற்றி பெறுவதனை தவிர்த்து தோல்வியோடு பயணிப்பவர்கள் தமிழர்கள் அல்ல .
உலகம் யதார்தம் சிங்கள தேசத்திற்கு கொடுத்துள்ள கடைசிசந்தற்பம் என்பதனை உணராத சிங்கள தேசம். எதை வேண்டுமானாலும் சொல்லி முடிக்கலாமே தவிர ஈழத்தின் வரலாற்றுப் போரை வெற்றி கொள்ளும் தகமை சிங்கள தேசத்திற்கு இல்லை.
காரணம் ஈழத்தின் வரலாறுகள் தர்மத்தால் வளர்கப்பட்டு சத்தியவழிகளில் வெற்றி ஈட்டுபவை என்பதனை சிங்கள தேசம் சிறிதளவேனும் உண்ர்வதற்காக புத்தரை கூப்பிட்டார்களே தவிர பெளத்தத்தின் போதனைகளை பின்பற்றவில்லை.
தமிழர்கள் எமது மதத்தை மனதில் கொண்டு வாழ்ந்தார்களே தவிர நாம் சைவமதத்தை முதன்மையாககொண்டவர்கள் என கூவி எமது மதத்தை விற்க்கவில்லை.
ஆனால் ஈழம் தொட்டு முள்ளிவாய்கால் வரை எமது மதமும் மொழியும் முதன்மை பெற்றதால்தான் யதார்தம் வரலாற்றை மீறவில்லை. . அரசியல் தீர்வாக தமிழீழத்திற்காக போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பு 30வருடப் போராடத்தில் நடைமுறைத்தமிழீழத்தில் மக்கள் வாழ்ந்த போது அதனை உலகம் ஏற்காத காரணத்தால் உலகத்தமிழினமாகிய தமிழர்களிடம் தமிழீழம் ஒப்படைகப்பட்டுள்ளது வரலாற்றின் அத்தியாயம் அதனால் நடைமுறைசெயல்பாடுகளை கொண்டு போராடிய தமிழினத்தை இலங்கை அரசாங்கம் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்க்கவில்லை . அதனால் சிங்கக் கொடி அகற்றப்பட்டால் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட முடியும் எனும் அளவிற்கு எமது விடுதலைப்பாதை நகரும் போது. எதிர்காலத்தை தமிழர்கள் மட்டும் அல்ல சிங்கள தேசமும் இனி எதிர்பார்க்க வேண்டும் தமிழர்களுக்கு எது தேவை என்பதனை .
அதனால் காலம் வரலாற்றை தீர்மானிப்பதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பு போராடினார்கள் தமிழர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள் என்பதே யதார்தமும் வரலாறும் . அதனை சிங்கள தேசம் வெற்றியாகவும் தமிழர்கள் தோல்வியாகவும் கருதும் அளவிற்கு இன்றைய நிலைகள் இல்லை . என்பதனை பாது காப்பு அமைச்சர் கோத்தபாய தொட்டு சுயநலனுகாக இனத்தையே விற்றுப்பிழைப்பு நடாத்தும் தமிழர்கள் வரை ஈழம் என்றால் என்ன என்பதிலும் எதிர்காலம் என்றால் என்ன என்பதிலும் தெளிவு படவேண்டும்.
போகிற போக்கைப்பாா்த்தால் Simon Wiesenthal அவா்களின் செயலை நம்மில் யாராவது செய்யவேண்டி வரும் போலுள்ளது அதாவது தமிழினத்துரோகிகள் என்ற பட்டியலுடன்.