இந்த உலக முதலாளிவர்க்கம் “தங்களது சொந்த வரையறைக்கு ஏற்ற உலகத்தை உருவாக்க” முயற்சிக்கிறது.

எஸ்.பி.ராஜேந்திரன்

1990களில், நரசிம்மராவ் ஆட்சிக்கா லத்தில் இந்தியாவின் நிதியமைச்சர் பொறுப்பையேற்ற உலகவங்கியின் முன்னாள் அதிகாரி மன்மோகன் சிங், தனியார்மயம், நிதி ஒழுங்கு சீர்குலைப்பு மற்றும் தேச உடைமைகளை தனியார் உடைமையாக்குதல் என்ற அமெரிக்க அயல்துறை பொருளாதாரக் கொள்கை களின் சாரத்தை உள்வாங்கினார். “தாராள மயம்-தனியார்மயம்-உலகமயம்” என்ற இலக்குடன் கூடிய”பொருளாதார சீர் திருத்தங்களை” (சீர்குலைவுகளை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவும்) அமலாக்கினார். அடுத்து வந்த பாஜக ஆட்சி இந்த நாசகர பாதையில் வேக மாகச் சென்றது.

இதன் விளைவுகள் நாம் அறிந்ததே. இந்திய விவசாயம் நொடித்தது; உள்நாட்டு சிறு-குறு தொழில்கள் அழிந்தன. பொருள் உற்பத்தி தேங்கியது; பொது நிறு வனங்கள் தனியுடைமை ஆகின்றன; தனியார் மய-தாராளமய ஆக்டோபசின் விஷக்கரங்களில் சிக்குண்டு ஏழைக ளின் வாழ்வு சின்னாபின்னமானது.

மறுபுறத்தில், பெரு முதலாளிகளின் லாபம் பல நூறுமடங்கு பெருகியது. புதிய தொழில் நுட்பங்களின் வருகையும், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் இவர்களின் சுரண்டலுக்கு மேலும் உரமூட்டின. இந்தியா படிப்படியாக அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின்-உலக முதலா ளித்துவத்தின்-பொருளாதார கைப்பா வையாக மாறி வருகிறது. அடுத்து, ராணுவ கூட்டாளியாக வேண்டும்.

உலகில் 2007ம் ஆண்டு கணக்குப்படி 946 பெரு முதலாளிகள் இருக்கின்றனர். உலகின் மக்கள்தொகை 600 கோடிக்கும் அதிகம். இந்த 600 கோடிப்பேரின் வாழ்வை, உணவை, நுகர்வை, இயக் கத்தை தீர்மானிக்கிற சக்தி தற்போது மேற்படி 946 பெரு முதாளிகளிடம்தான் உள்ளது.

உலகமக்களை அட்டையாய்ச் சுரண் டும் இவர்களின் லாபம் ஆண்டுக்காண்டு 35 சதவீதம் அதிகரிக்கிறது. இவர்களில் மிக அதிகமான பெருமுதலாளிகள்-அதா வது 415பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் கள். இவர்களின் வரிசையில் இந்தியா வின் டாடா, அம்பானி சகோதரர்கள் உட் பட ஆசியாவைச் சேர்ந்தவர்கள் 36 பேர்.

இந்த உலக முதலாளிவர்க்கம், கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கையில், மார்க்சும், எங்கெல்சும் கூறியதைப் போல, “தங்களது சொந்த வரையறைக்கு ஏற்ற உலகத்தை உருவாக்க” முயற்சிக்கிறது.

உற்பத்தி சாதனங்களையும், பண்ட-பரிவர்த்தனை ஏற்பாடுகளையும் கையில் வைத்துள்ள இவர்கள், மார்க்சும், எங்கெல் சும் கூறியதைப்போல” உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் தங்களது உற்பத்தி பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்தும் பொருட்டு, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இடம்தேடுகிறார் கள். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தளம் அமைக்கிறார்கள்; உலகின் சகல பகுதியிலும் தொடர்புகளை வலுப்படுத்து கிறார்கள்”.

ஆனால், வேலைவாய்ப்புகளை உரு வாக்காத, சமூக வாழ்வுக்கு சுகமளிக்காத, பெரும் நிறுவனம் சார்ந்த உற்பத்தி நடக்கிறது. மேலும், யூக வாணிகம், ரியல் எஸ்டேட், நுகர்பொருள் வர்த்தகம், முன் பேர வர்த்தகம் போன்ற பொருளாதார சூதாட்டங்களை இவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

பல நாடுகளில் பல கோடி டாலர்கள் பெறுமான, மக்களுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை கபளீகரம் செய்தல், போக்குவரத்து, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, மின்சாரம், இரும்பு, நிலக்கரி, ஜவுளி… இன்னும் ஏராள ஏராள துறைகளில் புகுந்து உலக வளங்களை எல்லாம் ஒட்டச் சுரண்டுதல் என உலக முதலாளி வர்க்கம் தனது கொடும்கரங் களை பரப்பி வருகிறது.

இத்தகைய வர்க்கத்தின் தலைமைப் பீடமாக செயல்பட அமெரிக்க ஏகாதிபத் தியம்-அமெரிக்க ஆளும் வர்க்கம்-தன்னை அரசியல்-பொருளாதார-ராணுவ தளங்களில் உலகின் அசைக்கமுடியாத சக்தியாக மாற்றிக்கொள்வதன் மூலம், முனைகிறது.

பொருளாதார தளத்தில் உலகெங்கி லும், தான் எண்ணியதை சாதித்துவிட்ட அமெரிக்கா, தற்போது உலக ராணுவ மேலாதிக்கச் சக்தியாக தன்னை நிறுவிக் கொள்ள முனைகிறது. ஆப்கனையும், இராக்கையும் அடித்து நொறுக்கி அந்த நாடுகளையும், அவற்றின் எண்ணெய் வளத்தையும் கைப்பற்றி விட்டது.

முன்னாள் சோவியத்குடியரசு நாடு களில் ஜார்ஜியா, செக் குடியரசு போன்ற வற்றில் தனது கைக்கூலி அரசுகளை நிறு விவிட்டது. ஆசியாவில் தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றில் அமெரிக்க ஆத ரவு அரசுகளே உள்ளன. ஆஸ்திரேலியா வில் கேட்கவே வேண்டாம்; யார்வந்தா லும் அமெரிக்க கைப்பாவைதான்.

வெனிசுலா, ஈரான் தவிர சவுதி உள்ளிட்ட எண்ணெய் வள நாடுகள் அனைத்துமே அமெரிக்காவின் கை களில் சிக்கி உருட்டப்படுகின்றன. இத்த கைய சூழலில், ஆசியாவில், சீனாவுக் கும்-ரஷ்யாவுக்கும் குடைச்சல் கொடுக் கத்தக்க, கேந்திரமான இடத்தில் உள்ள ஒரு நாடு, அமெரிக்காவுக்கு தேவை. அது இந்தியா.

உலக முதலாளி வர்க்கத்திற்கு தேவையான மிகப்பெரிய மார்க்கெட் மட்டுமல்ல, உலக ஆளும் வர்க்கத்தின் தலைமைப் பீடத்திற்கு ராணுவ ரீதியான கேந்திரமான உதவிகளைச் செய்ய வல்ல தேசம். இதைக் கைப்பற்றுவதற்கான, மிகவும் கைதேர்ந்த அமெரிக்க ஆளும் வர்க்க வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட திட்டம் தான், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம். இதை நிறைவேற்றும் பணியை மன்மோகன் சிங் அரசு மூலம் அமெரிக்க ஆளும் வர்க்கம் நிறைவேற்றப் பார்க்கிறது. மொத்தத்தில், ஆளும் வர்க் கத்தின் நலன் காக்க மத்திய அரசை ஆளும் கூட்டணி முயற்சிக்கிறது.

மார்க்சின் வார்த்தைகளில் சொன் னால் “முதலாளிவர்க்கம், அனைத்து மாயைகளையும் உடைத்து, தனது சுரண் டலை நிரந்தரமாக்கிக் கொள்ள, அம்மண மாக, வெட்கமின்றி, பகிரங்கமான, கொடூ ரமான நடவடிக்கைகளில் ஈடுபடும்”.

எனவே மன்மோகன் சிங் அரசு, அமெ ரிக்காவுடன் ராணுவக்கூட்டை உறுதிப் படுத்திக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதிதான் அணுசக்தி உடன்பாடு. இதை முறியடிப்பது தொழிலாளி வர்க்கத்தின், தேச பக்த சக்திகளின் கடமையாகும்.