இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு பயணக்கட்டண சலுகை வழங்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டு பத்தாண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள நிலையில்,இந்து அடிப்படை வாதிகளை தமிழகத்தில் முன்னிலைப்படுத்திவரும் ஜெயலலிதா இந்துக்களுக்கு மானியம் அறிவித்துள்ளார்.
இந்த அரசு மானியம், மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தேர்வு செய்யப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 250 இந்துக்களுக்கும், முக்திநாத் யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்களுக்கும் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மானசரோவர் புனிதப் பயணத்துக்கு ஒரு நபருக்கு ஆகும் மொத்த செல்வான ஒரு லட்சம் ரூபாயில் 40,000 ரூபாயும், முக்திநாத் புனிதப் பயணத்துக்கு ஒரு நபருக்கு ஆகும் செலவான 25,000 ரூபாயில், 10,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
Dr. Farukh Abdullah said that this is a secular country. 1948. Kashmir and Palestine.