இந்திய மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 25 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த மீனவர்களுடன் ஆறு படகுகளையும் கடற்படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடல்வழத்தை இழக்கும் ஈழத் தமிழ் மீனவர்களின் பிரச்சனையும், உயிரைப் பணயம்வைக்கும் இந்திய மீனவர்களின் அவலமும் தீர்க்கப்படுவதற்குப் பதிலாக இரண்டு நாட்டு அரசுகளின் அதிகாரவர்க்க நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.