இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததில் தவறில்லை என இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரி சத்திய பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் கொலை செய்வதனை விடவும் அவர்களை கைது செய்வது மேலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வேண்டுமென்றே இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களை கைது செய்ததில் தவறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்து மீறல்களில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறு இந்திய அரசாங்கம் இலங்கையிடம் கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் அத்து மீறல்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் இதே வழிமுறைகளை இந்தியா பின்பற்றுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு கிரிக்கெட் மட்டும்தான் இதயம் இந்திய மீனவரல்ல அதிலும் சர்மா சப்பாத்தியும் பரும்பும்தான் சாப்பிடுவார் அவருக்கு மீனவரின் வறூமை தெரியாது.எல்லைகள இந்திய மீனவன் ஏன் தாண்டுகிறான் இலங்கை.மாலைதீவு,பாகிஸ்தான் என ஏன் சிறயில் இருக்கிறான் என்பதை அம்மா ஜெயலலிதா ஆராய வேண்டும் இட்லியும் சட்னியும் சாப்பிட்ட காரத்தில் அலம்பக் கூடாது.ஆயிரம் ரூபாயுக்கு வோட்டுக்கள் வாங்குபவனுக்கு ஏழை மீனவன் கவலைகள் தெரியவா போகிறது?
எல்லைகள இந்திய மீனவன் ஏன் தாண்டுகிறான் ? அங்குள்ள கடல் வளம் ஏற்கனவே முதலாளிகளால் தடைசெய்யப்பட் வலைகளைப் பயன்படுத்தி சூறையாடப்பட்டு விட்டது. இப்போது அதனை இலங்கை எல்லைக்கும் விஸ்தரிக்க முயற்சி நடக்கிறது. அதற்கு இந்திய மீனவன் பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறான்.
நடிகர் இலங்கைத் தமிழன் வளர்ச்சி கண்டு பொறாமைப்பட்டு அவனைத் தன் படங்களீல் கோமாளீ ஆக்குவதைப் பார்த்திருக்கிறோம் இதில் கமலே ஒரு கோமாளீ அது போலத்தான் நீங்கள் தரும் பதிலும்.
எமது நாட்டில் மக்கள் சட்டத்துக்கு மதிப்பளிப்பதில்லை. சட்டத்துக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு விட்டு பிடிபட்டவுடன் பாதுகாப்பு விரர்களைக் குறைகூறுவதை ஒரு பாசனாகவே வைத்திருக்கிறாத்கள். அதை ஆமோதிக்கவும் ஒரு சோத்துப் பட்டாளம் எப்பவம் தயாராகக் காத்திருக்கும்.