இந்தியா முழுமைக்கும் இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தியதி தொடங்கி முழு வீச்சில் இப்பணிக்கான திட்டமிடல் நடந்து வரும் நிலையில் திபெத், பர்மா, வங்கதேசம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவில் தங்கியுள்ளவர்களையும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது, ஆனால் இவர்கள் குடிமக்கள் என்கிற அளவில் கணக்கில் சேர்க்கபப்டுவார்களா? அல்லது அகதிகள் என்கிற அளவில் எண்ணிக்கையில் சேர்க்கபப்டுவார்களா? என்று தெரியவில்லை. தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஈழ அகதிகள் உள்ளனர் என்றாலும் 2009- ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த என்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்து சென்றிருக்கிறது . என்னும் நிலையில் அகதிகள் புதிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்றும் கருதப்படுகிறது.