இந்திய தூதரகம் மீது தாக்குதல்: ஐநா கண்டனம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்படும் இந்தியத் தூதரகம் மீது தீவிரவாதி கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐநா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவித தீவிரவாத நடவடிக்கையின் மூலமும் நாட்டை அமைதி, ஜனநாயகப் பாதைக்கு திருப்ப முடியாது என்றும், இத்தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் கூறப்பட்டுள்ளது.

நேற்று நடந்த தாக்குதலில் 4 இந்தியர்கள் உட்பட 41 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். கடந்த 2001ம் ஆண்டு தலிபான்களின் ஆதிக்கம் வீழ்ந்த பின்னர், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளே காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.