இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக, இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளின் 15-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், சீன அரசின் கவுன்சிலர் டை பிங்குவோ ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
எல்லை பகுதியில் அமைதி காப்பதற்காக, புதிய பணிக்குழு அமைப்பது என்று, இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இருநாட்டு எல்லை விவகாரங்களில் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய செயல்முறை ஒன்றை உருவாக்கும் ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. இதில் சீனாவுக்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய்சங்கரும், சீனத்தரப்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை துணையமைச்சர் லியு ஷென்மினும் கையெழுத்திட்டனர்.
இந்த செயல்முறை, இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ள விவகாரங்களைக் கையாளும். எனினும் எல்லைப் பிரச்னையில் தீர்வுகாண முயற்சிக்காது. இந்தியத் தரப்பிலிருந்து இணைச் செயலர் அளவிலான வெளியுறவுத் துறை அதிகாரியும், சீனத்தரப்பிலிருந்து வெளியுறவு இயக்குநர் அளவிலான அதிகாரியும் இந்தச் செயல்முறை அமைப்புக்குத் தலைமை தாங்குவர்.







