இந்திய கடற் படையினர் ராமேஸ்வரம் கடல்பகுதியில் தீவிர பாது காப்பு! .

இராமேஸ்வரம்,

ஜூலை 17-

இலங்கையில் நடை பெற உள்ள சார்க் மாநாட் டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதை அடுத்து, இந்திய கடற் படையினர் ராமேஸ்வரம் கடல்பகுதியில் தீவிர பாது காப்பு ஏற்பாடுகளை மேற் கொண்டுள்ளனர்.

இம்மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் இலங்கையில் சார்க் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மன் மோகன்சிங் உள்பட பல் வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதனை யடுத்து இந்திய கடல்பகுதி யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தனுஷ்கோடிக்கு அருகே ஆதம் பாலம் பகுதியில் இந்திய கடற் படையைச் சேர்ந்த ஐஎன் எஸ் பாராடாங் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோடியக்கரையில் இருந்து வேதாரண்யம், ராமேஸ்வரம் வரை கடற் படைக்கு சொந்தமான சான்டிபீவி கப்பல் ரோந் துப் பணியில் ஈடுபட்டுள் ளது. சர்வதேச கடல் எல் லையில் செல்லும் கப்பல் கள், படகுகள் குறித்து கண் காணிக்க சென்னையில் இருந்து கடற்படைக்குச் சொந்தமான டார்னியர் விமானம் தாழ்வாக பறந்து பதிவுகளை மேற்கொள் கிறது. மேலும் சில ரோந்துக் கப்பல்கள், படகுகள் ஆகிய வையும் தீவிர கண்காணிப் பில் ஈடுபடுத்தப்பட்டுள் ளன.