இந்தியா சீனா இடையிலான எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது சீனா.
கிழக்கு லடாக் பகுதி மற்றும் இந்திய ராணுவ படை வரிசை முகாம்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் மிக அதிக அளவிலான படைகளை சீனா குவித்து வருகிறது.
இந்திய சீன எல்லையின் முன்வரிசை பகுதிகளில் சீன படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நமக்கு கவலை தரும் ஒன்றாக உள்ளது என்று ராணுவ ஜெனரல் மனோஜ் முகுந்து நரவனே ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு இந்திய ராணுவ உயரதிகாரிகள் சீனா எல்லையில் துருப்புகளை குவித்து என்ன செய்கிறது என்பதை கண்காணித்து வருகிறோம். எதையும் சந்திக்கும் நிலையில் இந்திய துருப்புகள் உள்ளன. அப்பகுதியில் சீனா முழு அளவில் கட்டமைப்புகளை உருவாக்கி விட்ட நிலையில் இப்போதுதான் இந்தியா லடாக் கிழக்குப் பகுதியில் எல்லைக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
சென்ற ஆண்டு இதே பகுதியில் சீன ராணுவத்தினர் தாக்கியதில் 20-பதுக்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான இந்திய அரசு கடுமையான விமர்சனங்களுக்க் உள்ளானது.