இந்திய இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் நடுக்கடலில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். இனவெறி கொண்ட இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில் இச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம் படுத்தும் வருடாந்தச் சந் திப்பின் ஒரு பகுதியாகவே இரு நாட்டுக் கடற்படை அதி காரிகளும் கப்பலில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்கள் என்று சென்னையில் உள்ள இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடற்படைகள் இடையே யான உறவைப் பலப்படுத்துவது பற்றி சந்திப்பில் ஆராயப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதற்கான ஆதாரங்கள் இல்லை என இந்திய அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Secretary Rasgotra once said that there can be only 2 navies in this region.