பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் இன்று அஞ்சலி செலுத்தினார்.
இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரி இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுச்சின்னம் பெரும்பாலான இந்தியத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இவ்வேளையில் வெளிப்படையான அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது இனவழிப்பில் தனது பங்கை இந்தியா வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயாராகிறது என சந்தேகங்கள் எந்ழுகின்றன.
வந்தவர்கள் அமைதிகாக்கும் படை என்று யார் சொன்னது? சிங்களவனின் கூலிக்கு மாரடிக்க வந்த அமைதியை அழித்த படையல்லவா அது. ஆயுதமற்ற அப்பாவி ஈழத்தமிழரை கொன்றுகுவித்த ஈனப்படையல்லவா. எம்மை காத்து நின்ற எம் மாவீர செல்வங்களின் விதைகுழிகளை அழித்து விட்டு சிங்களவன் செஞ் சோற்றுக் கடனுக்காக அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புகிறான். அவமானம்.